Please enable javascript.Gold Silver Price Today June 19 2024: ​Today Gold Price fall in Chennai: தங்கம் விலை சரிவு.. குஷி மோடில் மக்கள்.. நகை வாங்க நல்ல சான்ஸ்! - The Economic Times Tamil

​Today Gold Price fall in Chennai: தங்கம் விலை சரிவு.. குஷி மோடில் மக்கள்.. நகை வாங்க நல்ல சான்ஸ்!

Authored by நா. லோகநாயகி | The Economic Times Tamil | Updated: 19 Jun 2024, 11:49 am

சென்னையில் இன்று தங்கம் விலை சற்று சரிந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ரூபாயாக குறைந்துள்ளது.

 
2nd day in a row gold hike and silver price fall in chennai tamilnadu as of june 19
​Today Gold Price fall in Chennai: தங்கம் விலை சரிவு.. குஷி மோடில் மக்கள்.. நகை வாங்க நல்ல சான்ஸ்!
இன்று சென்னையில் ஜூன் 19,2024 ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு 40 ரூபாய் சரிந்துள்ளது. மேலும் 24 காரட் தங்கம் விலையும் குறைந்துள்ளது. இது தங்கத்தின்மீதான தொடர் ஏற்றத்தை குறிக்கிறது. இனி இன்றைக்கான விலை நிலவரங்களை காணலாம்.

​இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை!

-22-

சென்னையில் இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையிலிருந்து 5 ரூபாய் குறைந்து ரூ.6,690-க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல 8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையிலிருந்து 40 ரூபாய் குறைந்து ரூ.53,520 ரூபாய்க்கு விற்பனையாகத் தொடங்கியுள்ளது.

​இன்றைய 24 காரட் தூய தங்கம்!

-24-

24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,160-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.57,280-ஆக விற்பனையாகிறது.

​வெள்ளி விலை!

வெள்ளி விலை விரைவில் ரூ.1 லட்சத்தை எட்டும் என நிபுணர்கள் கணித்துள்ள நிலையில், இன்று கிராமிற்கு 40 காசுகள் சரிந்துள்ளது. அதேபோல ஒரு கிலோ வெள்ளி விலை நேற்றைய விலையிலிருந்து 400 ரூபாய் குறைந்து ரூ.95,600-க்கு விற்பனையாகத் தொடங்கியுள்ளது.

எகனாமிக் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் Share Market சமீபத்திய Business News மற்றும் பிரேக்கிங் செய்திகளைப் படிக்கவும்
நா. லோகநாயகி கட்டுரையாளரை பற்றி