Please enable javascript.Stocks to buy on monday: நாளை இந்த மூன்று பங்குகளை வாங்கலாம்.. அதுவும் இந்த விலைக்கு வாங்க நிபுணர் பரிந்துரைப்பு! - The Economic Times Tamil

நாளை இந்த மூன்று பங்குகளை வாங்கலாம்.. அதுவும் இந்த விலைக்கு வாங்க நிபுணர் பரிந்துரைப்பு!

Authored by நா. லோகநாயகி | The Economic Times Tamil | Updated: 30 Jun 2024, 11:36 am

ஜூலை 1, திங்கட்கிழமை நாளை பங்குச் சந்தையில் மூன்று பங்குகளை வாங்க நிபுணர் பரிந்துரைத்தோடு மட்டுமல்லாது, என்ன விலைக்கு வாங்கலாம், அதன் டார்கெட் விலை என்ன என்பதைப் பற்றியும் கூறியுள்ளார்.

 
Stocks to buy on monday.
ஜூன் 28 வெள்ளியன்று இந்தியப் பங்குச் சந்தை வரையறைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 வர்த்தக நாள் முடிவிற்குமுன்பு அதிக லாபம் ஈட்டி சரிவுடன் வர்த்தகத்தை முடிவு செய்தது.
நிஃப்டி 50 அமர்வின் போது 24,174 என்ற சாதனையை எட்டியது, ஆனால் 34 புள்ளிகள் அல்லது 0.14% குறைந்து 24,010.60 இல் முடிந்தது, 26 பங்குகள் முன்னேறி 24 சரிந்தன.

சாய்ஸ் ப்ரோக்கிங்கின் சந்தை ஆராய்ச்சியாளரான சுமீத் பகடியா திங்களன்று, டாடா மோட்டார்ஸ் , பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஓஎன்ஜிசி ஆகிய மூன்று பங்குகளை வாங்கப் பரிந்துரைத்துள்ளார்.

1. Tata Motors

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்றத்தின் விளைவாக தற்பொழுது ரூ.989.75-க்கு வர்த்தகமாகி வருகிறது. அதனால் பங்கு அதன் தற்போதைய வர்த்த விலைக்கு வாங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் பங்கிற்கான இலக்கு விலையாக ரூ.1040 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்கிற்கான இழப்பு நிறுத்த விலை ரூ.965 ஆகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2. BRITANNIA

பிரிட்டானியா பங்கை நாளை அதாவது ஜூலை 1 அன்று வாங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பங்கினை அதன் தற்போதைய சந்தை விலையான ரூ.5475.55 வாங்கவும், பங்கிற்கான இலக்கு விலை ரூ.5860 ஆகவும், பங்கிற்கான இழப்பு நிறுத்த விலை ரூ.5290 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3. ONGC

இந்நிறுவனத்தின் பங்கையும் நாளை அதாவது ஜூலை 1 அன்று வாங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பங்கினை அதன் தற்போதைய சந்தை விலையான ரூ.274.20 வாங்கவும், பங்கிற்கான இலக்கு விலை ரூ.293 ஆகவும், பங்கிற்கான இழப்பு நிறுத்த விலை ரூ.263 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
jp morgan bond index-ல் எந்த இடத்தில் உள்ளனர்?

Disclaimer: இக்கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் முதலீட்டு ஆலோசனைகளுக்கானது அல்ல.

எகனாமிக் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் Share Market சமீபத்திய Business News மற்றும் பிரேக்கிங் செய்திகளைப் படிக்கவும்
நா. லோகநாயகி கட்டுரையாளரை பற்றி