Please enable javascript.ITC e-Commerce sale hike : ஆன்லைனில் அதிக அளவு ஆர்டர் செய்யப்படும் ஐடிசி பொருட்கள்..... ஈ காமர்ஸ் முறையில் எஃப்எம்சிஜி பொருட்களின் விற்பனை 31% உயர்வு... - The Economic Times Tamil

ஆன்லைனில் அதிக அளவு ஆர்டர் செய்யப்படும் ஐடிசி பொருட்கள்..... ஈ காமர்ஸ் முறையில் எஃப்எம்சிஜி பொருட்களின் விற்பனை 31% உயர்வு...

Authored by இரா.ரூபாவதி | The Economic Times Tamil | Updated: 28 Jun 2024, 7:55 pm

தினசரி பயன்படுத்தப்படும் எஃப் எம் சி ஜி பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான ஐடிசியின் ஈ காமர்ஸ் விற்பனை சிறப்பாக இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்ஹ்டுள்ளது. இதன் காரணமாக எஃப் எம் சி ஜி போர்ட்ஃபோலியோ 31 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

 
ITC - et tamil
தினசரி பயன்படுத்தப்படும் எஃப் எம் சி ஜி பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான ஐடிசியின் ஈ காமர்ஸ் விற்பனை சிறப்பாக இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்ஹ்டுள்ளது. இதன் காரணமாக எஃப் எம் சி ஜி போர்ட்ஃபோலியோ 31 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இப்போது அதன் வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்களின் (எஃப்எம்சிஜி) விற்பனையில் குறிப்பிடத்தக்க பகுதியை அதாவது ஈ-காமர்ஸ் மற்றும் மாடல் டிரேட் அவுட்லெட்டுகள் போன்ற புதிய விநியோக முறைகள் தற்போது சிறப்பாக உள்ளன. சிகரெட் அல்லாத எஃப்எம்சிஜி விற்பனை மூலம் ஆண்டுக்கு ரூ.21,000 கோடி அளவுக்கு ஐடிசி நடைபெறுவதாகவும், தற்போது ஈ-காமர்ஸ் மற்றும் நவீன வர்த்தக வழிமுறைகள் மற்ற நிறுவனங்களை விட ஐடிசியில் சிறப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அறிக்கையில், 2023-24ம் நிதியாண்டில் நிறுவனத்தின் எஃப் எம் சி ஜி போர்ட்ஃபோலியோவுக்கான நவீன வர்த்தகம் மற்றும் இ-காமர்ஸ் ஆகியவை 31 சதவிகிதம் அதிகரித்துள்ளன. தொழில்துறை சராசரியான 15-20% உடன் ஒப்பிடுகையில், நாட்டின் மற்ற முன்னணி எஃப் எம் சி ஜி நிறுவனங்களை விட அதிகமாக உள்ளது. அதேநேரத்தில் ஐடிசியின் விற்பனையில் 80-85 சதவிகிதம் அதன் பாரம்பரிய வழிமுறைகளில் இருந்து வருகிறது.

இந்தியாவில் டிஜிட்டல் வளர்ச்சி மிக அதிகமாக வேகமாகவும் நடைபெற்று வருகிறது. இதனால் பெரும்பாலானவரிகளின் ஸ்மார்ட்போன் மற்றும் இணையவசதி உள்ளது. இதன் காரணமாக இருந்த இடத்தில் இருந்தே பொருட்களை ஆர்டர் செய்து விரைவாக டெலிவரி பெறுகின்றனர். மேலும் வாடிக்கையாளர்கள் நேரடியாக பொருட்களை வாங்கும் போது ஐடிசி நிறுவனத்தின் லாபம் சற்று அதிகரிக்க செய்கிறது.

டிஜிட்டல் ஃபர்ஸ்ட் என்ற ரீதியில் சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் ஐடிசி தெரிவித்துள்ளது. ஈ காமர்ஸ் வர்த்தகத்தை அதிகரிக்கும் விதமாக பலவகையான மேம்பாட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் விற்பனை அதிகரித்துள்ளது.

மேலும் 2,3ம் கட்ட நகரங்களில் புதிய ஸ்டோர்களை உருவாக்குதால், விநியோக சங்கிலியை விரிவாக்கம் செய்தல் போன்றவையும் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை வழங்குவதற்கு ஏற்ப ஐடிசி இ ஸ்டோர் உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது UNNATI அப் இந்த வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் கிட்டத்தட்ட ஏழு லட்சம் விற்பனை நிலையங்களை உள்ளடக்கி உள்ளது. இதில் அதிக எண்ணிக்கையிலான சில்லறை விற்பனையாளர்கள் நேரடியாக பொருட்களை ஆர்டர் செய்கின்றனர்.
Export Business-ல இப்படியெல்லாமா ஏமாத்துவாங்க.?


எகனாமிக் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் Share Market சமீபத்திய Business News மற்றும் பிரேக்கிங் செய்திகளைப் படிக்கவும்
இரா.ரூபாவதி கட்டுரையாளரை பற்றி
இரா.ரூபாவதி Senior Digital Content Producer
இரா.ரூபாவதி, எகனாமிக் டைம்ஸ் தமிழ் டிஜிட்டல் பிரிவில் SENIOR DIGITAL CONTENT PRODUCER பணியாற்றி வருகிறார். 2009 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். தமிழின் முன்னணி ஊடக நிறுவனமான விகடன் குழுமத்தின் நாணயம் விகடன் வார இதழில் பணியாற்றியபோது, பொருளாதாரம், பங்குச்சந்தை, பார்சனல் ஃபைனான்ஸ், இன்சூரன்ஸ் ஆகியவற்றில் அனுபவம் பெற்றார். அங்கு 4 ஆண்டுகள் பணி அனுபவத்துக்குப் பின்னர், தமிழின் முன்னணி தொலைக்காட்சி செய்தி நிறுவனமான நியூஸ் 18 தமிழ் சேனலில் 6 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார். சென்னை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டமும், லயோலா கல்லூரியில் ஊடகத்துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.Read More