Please enable javascript.Polycab India Share Price down :பிளாக்டீலில் 2.74% பங்குகளை விற்பனை செய்யும் பாலிகேப் இந்தியா.... பங்கு விலை வீழ்ச்சி அடைவதால் முதலீட்டாளர்கள் ஏமாற்றம்... - The Economic Times Tamil

பிளாக்டீலில் 2.74% பங்குகளை விற்பனை செய்யும் பாலிகேப் இந்தியா.... பங்கு விலை வீழ்ச்சி அடைவதால் முதலீட்டாளர்கள் ஏமாற்றம்...

Authored by இரா.ரூபாவதி | The Economic Times Tamil | Updated: 28 Jun 2024, 4:15 pm

பாலிகேப் இந்தியாவில் 2.74 சதவீத பங்குகள் பிளாக் டீல்களில் ரூ.2,716.5 கோடிக்கு விற்கப்பட்டன. இதில் பங்குகளை விற்பனை செய்தவர்கள் யார், வாங்குபவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. அதாவது புரோமோட்டார்களே பங்குகளை விற்பனை செய்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கலாம்.

 
Polycab India - et tamil
பாலிகேப் இந்தியாவில் 2.74 சதவீத பங்குகள் பிளாக் டீல்களில் ரூ.2,716.5 கோடிக்கு விற்கப்பட்டன. இதில் பங்குகளை விற்பனை செய்தவர்கள் யார், வாங்குபவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. அதாவது புரோமோட்டார்களே பங்குகளை விற்பனை செய்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கலாம்.
பிளாக்டீல் ஒப்பந்தத்தில் பாலிகேப் இந்தியாவின் 40.5 லட்சம் பங்குகள் விற்பனை செய்ததாக இருந்தன. அதாவடு ஒரு பங்கு விலை ரூ.6,708 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த விலை என்பது நேற்றைய முடிவடை விட 4 சதவிகிதம் குறைவு ஆகும். ஜூன் 28ம் தேதி சந்தையில் பங்கின் விலை 3.64 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்து ரூ.6,735 என்ற நிலையில் வர்த்தகமானது.

பாலிகேப் இந்தியா பங்கு கடந்த ஓராண்டில் ஏறக்குறைய இருமடங்காக உயர்ந்துள்ளது. மேலும் இந்த இரண்டு காலகட்டங்களிலும் என்எஸ்இ நிஃப்டி 50ஐ விட அதிக வருமானத்தை கொடுத்துள்ளது.

பாலிகேப் இந்தியாவின் புரோமோட்டார் குழு பங்குச் சந்தைகளில் தாக்கல் செய்த கடைசி காலாண்டு தகவலின்படி நிறுவனத்தில் 65.24 சதவிகித பங்குகளை வைத்துள்ளன.

கடந்த நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் பாலிகேப் இந்தியா நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 29 சதவீதம் உயர்ந்து ரூ.553 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ.428 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் செயல்பாடுகளின் வருவாய் முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ.4,324 கோடியிலிருந்து, 24ஆம் நிதியாண்டின் காலாண்டில் 29 சதவீதம் உயர்ந்து ரூ.5,592 கோடியாக இருந்தது.
Grow app-ஐ இனி தொடர்ந்து பயன்படுத்தலாமா?



எகனாமிக் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் Share Market சமீபத்திய Business News மற்றும் பிரேக்கிங் செய்திகளைப் படிக்கவும்
இரா.ரூபாவதி கட்டுரையாளரை பற்றி
இரா.ரூபாவதி Senior Digital Content Producer
இரா.ரூபாவதி, எகனாமிக் டைம்ஸ் தமிழ் டிஜிட்டல் பிரிவில் SENIOR DIGITAL CONTENT PRODUCER பணியாற்றி வருகிறார். 2009 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். தமிழின் முன்னணி ஊடக நிறுவனமான விகடன் குழுமத்தின் நாணயம் விகடன் வார இதழில் பணியாற்றியபோது, பொருளாதாரம், பங்குச்சந்தை, பார்சனல் ஃபைனான்ஸ், இன்சூரன்ஸ் ஆகியவற்றில் அனுபவம் பெற்றார். அங்கு 4 ஆண்டுகள் பணி அனுபவத்துக்குப் பின்னர், தமிழின் முன்னணி தொலைக்காட்சி செய்தி நிறுவனமான நியூஸ் 18 தமிழ் சேனலில் 6 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார். சென்னை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டமும், லயோலா கல்லூரியில் ஊடகத்துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.Read More