Gold rate today in chennai: தாருமாறாக ஏறி நிற்கும் தங்கம் விலை.. 8 கிராமிற்கு 640 ஆக உயர்வு!

Authored by நா. லோகநாயகி | The Economic Times Tamil | Updated: 21 Jun 2024, 10:05 am

தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சென்னையில் தங்கம் விலை உயர்வுடன் விற்பனையாகத் தொடங்கியுள்ளது. அதேசமயம் வெள்ளி விலையும் ஏற்றம் கண்டுள்ளது.

today gold and silver prcie hike in chennai as of june 21 2024
Gold rate today in chennai: தாருமாறாக ஏறி நிற்கும் தங்கம் விலை.. 8 கிராமிற்கு 640 ஆக உயர்வு!
இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 80 ரூபாய், வெள்ளி விலை கிராமிற்கு ரூ.1.40 ஆக ஏற்றத்துடன் விற்பனையாகத் தொடங்கியுள்ளது.

​இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை!

இன்று (ஜூன் 21,2024) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.80 உயர்வுடம் ரூ.6,780-க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.640 உயர்ந்து 54,240 ரூபாய்க்கு விற்பனையாகத் தொடங்கியுள்ளது.

​தூய தங்கம்!

இன்றைய 24 காரட் கிராம் தூய தங்த்தின் விலை நேற்றைய விலையிலிருந்து 80 ரூபாய் உயர்ந்து ரூ.7,250 ரூபாய்க்கு விற்பனையாகத் தொடங்கியுள்ளது. அதேபோல 8 கிராம் தங்கத்தின் விலையும் 640 ரூபாயாக உயர்ந்து ரூ.58,000-க்கு விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை!

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை கிராமிற்கு ரூ.1.40 உயர்ந்து ரூ.98.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை 1400 ரூபாய் உயர்ந்து ரூ.98,500 ஆகவும் விற்பனையைத் தொடங்கியுள்ளது.

எகனாமிக் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் Share Market சமீபத்திய Business News மற்றும் பிரேக்கிங் செய்திகளைப் படிக்கவும்
நா. லோகநாயகி கட்டுரையாளரை பற்றி