ஸ்தம்பித்துபோன Zerodha ஆப்.. சிக்கலில் முதலீட்டாளர்கள்!

Authored by நா. லோகநாயகி | The Economic Times Tamil | Updated: 21 Jun 2024, 1:34 pm

பங்குத் தரகு நிறுவனமான Zerodha இன்று மற்றொரு தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் முதலீட்டாளர்கள் அவர்களின் பங்கு நடவடிக்கைகளை காண முடியாமல் ஸ்தம்பித்துள்ளனர்.

ஜூன் 21 அன்று Zerodhaவின் ப்ரோக்கிங் தளம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இது வர்த்தகர்களுக்கு ஆரம்ப வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமத்தை கொடுத்துள்ளது.
Zerodha down.
Zerodha down.
இனி எஃப் அண்ட் ஓ தடையின் கீழ் இல்லாத இந்தியா சிமென்ட் போன்ற பங்குகள் தடையின் கீழ் தொடர்ந்து காட்டப்பட்டு, ஆர்டர்கள் வைக்கப்படுவதைத் தடுக்கிறது. ப்ரோக்கிங் பிளாட்ஃபார்ம் ஒரு சிறிய செயலிழப்புக்குப் பிறகு மீண்டும் வேலை செய்யத் தொடங்கியது.

Mutual Funds-ல் முதலீடு செய்வது எப்படி? யார் stock market-ல் முதலீடு செய்யலாம்...

இதனால் விரக்தி அடைந்த பயனர்கள் எக்ஸ் தளத்தில் ஜெரோதா குறித்து பல்வேறு புகார்களை பகிர்ந்து வருகின்றனர். 15 நாட்களுக்கு முன்பு, ஜூன் 3 திங்கட்கிழமை, Zerodha மற்றொரு தடுமாற்றத்தை எதிர்கொண்டார்.

லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடியின் அரசாங்கம் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என்று ஜூன் 1 சனிக்கிழமையன்று வெளியான கருத்துக் கணிப்புகளுக்குப் பிறகு, உள்நாட்டு முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புது உச்சத்தை எட்டிய நாளும் இதே பிரச்சனை தொடங்கியது.

எகனாமிக் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் Share Market சமீபத்திய Business News மற்றும் பிரேக்கிங் செய்திகளைப் படிக்கவும்
நா. லோகநாயகி கட்டுரையாளரை பற்றி