Please enable javascript. ஸ்டார்ட்அப் டூ எம்.என்.சி. வரை அனைத்து நிறுவனங்களுக்கும் கைகொடுக்கும் WeWork....விரிவாக்கத் திட்டங்களுக்கு ரூ.1,200 கோடி முதலீடு செய்ய திட்டம்.... - wework enter in chennai market | The Economic Times Tamil

ஸ்டார்ட்அப் டூ எம்.என்.சி. வரை அனைத்து நிறுவனங்களுக்கும் கைகொடுக்கும் WeWork....விரிவாக்கத் திட்டங்களுக்கு ரூ.1,200 கோடி முதலீடு செய்ய திட்டம்....

Authored by இரா.ரூபாவதி | The Economic Times Tamil | Updated: 14 Jun 2024, 11:07 pm

தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் WeWork நிறுவனம் தனது புதிய அலுவலகத்தை தொடங்கியுள்ளது. சென்னை கிண்டியில் அமைந்து சைபர்ஸ்பேஸ் கட்டத்தில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது. மாறிவரும் மாற்றங்களுக்கு ஏற்ப நிறுவனங்களும் தங்களை அப்டேட் செய்து கொண்டே வருகின்றன. அதாவது சிறு நிறுவனங்கள் முதல் பெருநிறுவனங்கள் வரை அனைத்திலும் தங்களின் ஊழியர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பணியாற்ற முடியும் என்றும், அதற்கு ஏற்ப வசதிகளை செய்து கொடுத்தால் போதும் என்றும் நினைக்கின்றன

 
we work - et tamil
தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் WeWork நிறுவனம் தனது புதிய அலுவலகத்தை தொடங்கியுள்ளது. சென்னை கிண்டியில் அமைந்து சைபர்ஸ்பேஸ் கட்டத்தில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது.
மாறிவரும் மாற்றங்களுக்கு ஏற்ப நிறுவனங்களும் தங்களை அப்டேட் செய்து கொண்டே வருகின்றன. அதாவது சிறு நிறுவனங்கள் முதல் பெருநிறுவனங்கள் வரை அனைத்திலும் தங்களின் ஊழியர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பணியாற்ற முடியும் என்றும், அதற்கு ஏற்ப வசதிகளை செய்து கொடுத்தால் போதும் என்றும் நினைக்கின்றன. ஊழியர்கள் பணியாற்றுவதற்காக தனியாக ஒரு அலுவலகத்தை உருவாக்கி அதில் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலமாக நிறுவனங்களுக்கு கூடுதல் செலவும் மற்றும் கூடுதல் சுமை ஏற்படுத்துகின்றன. தங்களின் ஊழியர்கள் வேலைப்பார்ப்பதற்கு அனைத்து வசதிகளும் உள்ள ஒரு அலுவலகம் தேவை, அதில் தங்களின் ஊழியர்கள் சென்று அவர்களின் பணியை மட்டும் செய்தால் போது என நிறுவனங்கள் நினைக்கின்றன.

இதுபோன்ற தேவைகளை நிறைவேற்றுவதற்காக உருவானதுதான் WeWork நிறுவனம். இந்த நிறுவனம் பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்கள் பணியாற்றுவதற்கு தேவையான அனைத்து வசதிகளை ஏற்படுத்தி தருகின்றன. அதாவது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் சென்னை போன்ற பெருநகரத்தில் அலுவலகம் அமைக்க வேண்டுமெனில், அலுவலக வாடகை, மின்கட்டணம், இணைய வசதி, அலுவலகத்தை சுத்தம் செய்வதற்கான பணியாளர்கள், அலுவலக செக்யூரிட்டீஸ், பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான ஊழியர்கள், உணவகம் என பல வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேலும் இவ்வளவு வசதிகளை ஒரு அலுவலகத்தில் ஏற்படுத்த வேண்டுமெனில் அதிக செலவு ஆகும்.

மேலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் குறைவான எண்ணிக்கையிலான பணியாளர்களே இருப்பார்கள் அவர்களுக்கு இது போன்ற வசதிகளை ஏற்படுத்துவது சிரமம். சிறுநிறுவனங்கள் மட்டும் இல்லாமல் பெருநிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் இருந்தாலும் இந்த வசதிகளை ஏற்படுத்தும் போது மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றன.

இதற்கெல்லாம் தீர்வுதான் WeWork நிறுவனம். தற்போது சென்னை கிண்டியில் அமைந்து அலுவலகத்தில் 2,000 பணியாளர்கள் பணியாற்றுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஒரு ஊழியர் பணியாற்றுவதற்கு குறிப்பிட்ட அளவு தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் மாதந்திர அடிப்படையில் இருப்பதால், தேவைப்படும் போதுமட்டுமே இந்த இடத்தை நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.

WeWork நிறுவனத்தில் 65 சதுர அடிக் கொண்ட இடத்தை ஒரு ஊழியருக்கான இடமாக ஒதுக்கப்படும் என்றும், இதற்கான ஆரம்ப கட்டணம் 13,500 ரூபாய் என்றும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கரண் விர்வாணி தெரிவித்தார். மொத்தமாக 1,30,000 சதுர அடியில் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் உள்ள 55 இடங்களில் இதுபோன்ற வசதிகளை ஏற்படுத்துள்ளன. இதில் 90,000 பணியாளர்கள் பணியாற்றுவதற்கான டெஸ்க்-கள் உள்ளன. இந்த நிறுவனம் பெங்களூருவில் அதிக எண்ணிக்கையிலான அலுவலகங்களை உருவாக்கி உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் டெல்லி, குருகிராம், நொய்டா, மும்பை, பெங்களூரு, புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் செயல்படுகிறது.

மேலும் தற்போது சென்னையில் உருவாக்கப்பட்டுள்ள WeWork மொட்டைமாடி வடிவமைப்பதை பிரதிபலிப்பதாக உள்ளது. மேலும் அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் போரூரில் அமைந்து டிஎல்எஃப் சைபர்சிட்டியில் மற்றொரு அலுவலகத்தை தொடங்க உள்ளதாகவும், அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கரண் கூறினார். மேலும் நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்காக ரூ.1,200 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்கள் WeWork அலுவலகத்தின் முகவரி தங்களின் ஜிஎஸ்டி பதிவுக்கு பயன்படுத்தி கொள்வதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

தொழில்முனைவோர், நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்களில் ஆகியவை இந்த வசதியை பயன்படுத்தி கொள்ள முடியும். உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த சேவை நிறுவனங்களுக்கு இது போன்ற அலுவலகங்களுக்கான தேவை அதிகமாக உள்ளது.
2023-24ம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய் ரூ.1,800 என்றும், இனிவரும் ஆண்டுகளில் ஆண்டுக்கு 30 சதவிகிதம் வளர்ச்சி அடைய வேண்டுமென்ற இலக்குடன் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிக லாபம் தரும் SIP returns..எப்படி தொடங்குவது?


எகனாமிக் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் MSME Loan மற்றும் Business News பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
இரா.ரூபாவதி கட்டுரையாளரை பற்றி
இரா.ரூபாவதி Senior Digital Content Producer
இரா.ரூபாவதி, எகனாமிக் டைம்ஸ் தமிழ் டிஜிட்டல் பிரிவில் SENIOR DIGITAL CONTENT PRODUCER பணியாற்றி வருகிறார். 2009 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். தமிழின் முன்னணி ஊடக நிறுவனமான விகடன் குழுமத்தின் நாணயம் விகடன் வார இதழில் பணியாற்றியபோது, பொருளாதாரம், பங்குச்சந்தை, பார்சனல் ஃபைனான்ஸ், இன்சூரன்ஸ் ஆகியவற்றில் அனுபவம் பெற்றார். அங்கு 4 ஆண்டுகள் பணி அனுபவத்துக்குப் பின்னர், தமிழின் முன்னணி தொலைக்காட்சி செய்தி நிறுவனமான நியூஸ் 18 தமிழ் சேனலில் 6 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார். சென்னை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டமும், லயோலா கல்லூரியில் ஊடகத்துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.Read More