Please enable javascript.SBI fund raising: பாண்டு பத்திரங்கள் மூலம் ரூ.20,000 கோடி நிதி திரட்ட எஸ்பிஐ வங்கி ஒப்புதல்.. பங்கு விலை உயரும் வாய்ப்பு! - The Economic Times Tamil

பாண்டு பத்திரங்கள் மூலம் ரூ.20,000 கோடி நிதி திரட்ட எஸ்பிஐ வங்கி ஒப்புதல்.. பங்கு விலை உயரும் வாய்ப்பு!

Authored by நா. லோகநாயகி | The Economic Times Tamil | Updated: 19 Jun 2024, 6:17 pm

எஸ்பிஐ வங்கி நீண்ட காலப் பத்திரங்கள் மூலம் சுமார் ரூ.20,000 கோடி நிதி திரட்ட ஒப்புதல் அளித்துள்ளது. அதுவும் என்ன காரணத்திற்கு என்று தெரியுமா?

 
sbi share price in focus.
sbi share price in focus.
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) புதன்கிழமை ரூ.20,000 கோடி திரட்டப்போவதாக அறிவித்துள்ளது. அதுவும் எஸ்பிஐ நீண்ட கால பத்திரங்கள் (SBI Long Term Bonds) மூலம் இந்த நிதியை திரட்ட உள்ளது. ஜூன் 19 அன்று நடந்த நிர்வாகக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளது.
இதன் மூலம் 2025 ஆம் நிதியாண்டில், வங்கி நீண்ட கால நிதி மூலம் ரூ. 20,000 கோடி திரட்டப் போகிறது, இதில் பொது வெளியீடு அல்லது தனியார் வேலை வாய்ப்புகளுக்காகப் பயன்படுத்தும் என்று எஸ்பிஐ வங்கி தரப்பில் தெரிவித்துள்ளது.

இதனால் நாளை வங்கியின் பங்கு விலையில் மாற்றம் இருக்கலாம். இன்றைய நாளின் முடிவில் எஸ்பிஐ பங்கு விலை 1.1 சதவீதம் உயர்ந்து ரூ.854.30-க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. வங்கிப் பங்குகள் கடந்த ஓராண்டில் சுமார் 50 சதவீதமும், கடந்த ஆறு மாதங்களில் சுமார் 30 சதவீதமும் வருமானத்தை அளித்துள்ளன. எஸ்பிஐ பங்குகளின் 52 வார அதிகபட்சம் ரூ.912 ஆகவும், 52 வாரக் குறைந்த விலை ரூ.543.20 ஆகவும் உள்ளது.

நா. லோகநாயகி கட்டுரையாளரை பற்றி