Please enable javascript.Income Tax Filing: வருமான வரி தாக்கல் செய்யப்போறீங்களா.... இதையெல்லாம் கட்டாயம் செக் பண்ணுங்க.... - income tax filing check list | The Economic Times Tamil

Income Tax Filing: வருமான வரி தாக்கல் செய்யப்போறீங்களா.... இதையெல்லாம் கட்டாயம் செக் பண்ணுங்க....

Authored by இரா.ரூபாவதி | The Economic Times Tamil | Updated: 20 May 2024, 2:02 pm

இந்தியாவில் வருமானம் ஈட்டும் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்வது முக்கியம். அதிலும் மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு அந்த அந்த நிறுவனங்களில் குறிப்பிட்ட அளவு தொகை பிடித்தம் செய்திருப்பார்கள். இந்த நிலையில் வரும் ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரி ரிட்டனை தாக்கல் செய்வது முக்கியம்.

 
income tax - et tamil
இந்தியாவில் வருமானம் ஈட்டும் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்வது முக்கியம். அதிலும் மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு அந்த அந்த நிறுவனங்களில் குறிப்பிட்ட அளவு தொகை பிடித்தம் செய்திருப்பார்கள். இந்த நிலையில் வரும் ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரி ரிட்டனை தாக்கல் செய்வது முக்கியம்.
வருமான வரி ரிட்டன்களை தாக்கல் செய்வதற்கு சில ஆவணங்கள் கட்டாயம் தேவை. அதேபோல் சரியான படிவத்தை தேர்ந்தெடுப்பவது மிகவும் முக்கியம் .

வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன்பு உங்களின் ஆதாரை பான் எண்ணுடன் இணைத்துள்ளீர்களாக என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியம். அதேபோல் வருமான வரி தாக்கலுக்கு பிறகு பணத்தைத் திரும்பப் பெறும் வங்கி கணக்கு எண் சரியாக உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

சம்பளம் பெறுபவர்கள் வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டிய விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம்.

சரியான படிவம்

வருமான வரி ரிட்டனைத் தாக்கல் செய்வதற்கு முன், சரியான ஐடிஆர் படிவத்தைத் தேர்ந்தெடுப்பது மிக மிக அவசியம். ஏனெனில் சம்பளம் வாங்குபவர்கள், பிசினஸ் செய்பவர்கள் என ஒவ்வொருவருக்கும் ஒரு படிவம் உள்ளன. இதில் உங்களுக்கான சரியான படிவத்தைத் தேர்வு செய்வதுஹ் முக்கியம். இதில் தவறு ஏற்பட்டால் மீண்டும் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்.

நீங்கள் மாதம் சம்பளம் பெறுபவராக இருந்தால், வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய ITR-1 படிவத்தை தேர்வு செய்ய வேண்டும்.

ஐடிஆர்-1 என்றால் என்ன?

ITR-1 ஐ, நிதியாண்டில் மொத்த வருமானம் ரூ.50 லட்சத்துக்கு குறைவாக இருக்கும் போதும் இந்த படிவத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

ITR-1 படிவத்தை யார் பயன்படுத்த முடியாது?

ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் ஐடிஆர்-1 படிவத்தை தேர்வு செய்ய முடியாது. இந்திய குடியுரிமை பெற்றவர், சாதாரணமாக வசிப்பவர் அல்லாத மற்றும் குடியுரிமை பெறாத இந்தியர், மொத்த வருமானம் ரூ.50 லட்சத்துக்கு மேல் உள்ளவர். லாட்டரி, பந்தயக் குதிரைகள், சட்டப்பூர்வ சூதாட்டம், வரி விதிக்கக்கூடிய மூலதன ஆதாயங்கள் உள்ளவர் இந்த படிவத்தைத் தேர்ந்தெடுக்கக்கூடாது.

ITR ஐ தாக்கல் செய்வதற்கு முன் எனக்கு தேவையான ஆவணங்கள் என்ன?

நீங்கள் AIS (ஆண்டுத் தகவல் அறிக்கை) பதிவிறக்கம் செய்து, படிவம் 16, வீட்டு வாடகை ரசீது, முதலீட்டு கட்டண பிரீமியம் ரசீதுகள் ஆகியவை இருந்தால் அவற்றின் நகலை வைத்திருக்க வேண்டும்.

அதேபோல் வரி செலுத்துவோர் உங்கள் வருமானத்துடன் எந்த ஆவணத்தையும் இணைக்கக் கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதாவது ஒரிஜினல் ஆவணங்களை சமர்பிக்கக்கூடாது. ஏனெனில் இந்த ஆவணங்களை மதிப்பீடு செய்வதற்கு அல்லது வருமான வரி விசாரணைக்காக அதிகாரிகள் கேட்கும் போது அதை காண்பிக்க வேண்டியிருக்கும்.

ஐடிஆர் தாக்கல் செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன?

முதலில், AIS மற்றும் படிவம் 26AS ஐப் பதிவிறக்கி, உண்மையான TDS,TCS ஐச் சரிபார்ப்பது முக்கியம். இதில் ஏதாவது சிக்கல் இருந்தால் அதை சரி செய்வது முக்கியம்.

வரித் தாக்கலுக்கான ஆவணங்களை கவனமாக செக் செய்வது அவசியம்

அதாவது பேங்க் ஸ்டேட்மெண்ட் , பாஸ்புக் நகல், முதலீட்டின் மீதான வட்டிக்கான சான்றிதழ்கள், விலக்குகள் ஆகியவை தேவை. படிவம் 16, படிவம் 26AS ) போன்ற உங்கள் ITR ஐ தாக்கல் செய்யும் போது குறிப்பிடப்பட வேண்டிய ஆவணங்களை கவனமாக வைத்திருப்பது அவசியம்.

அதேபோல் வரி செலுத்துவோர் பான், நிரந்தர முகவரி, தொடர்பு விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
தற்போது வருமானத்தை ஆன்லைனில் தாக்கல் செய்யப்படுவதால், அதை ஒருமுறைக்கு பலமுறை சரிப்பார்த்த பின்பு தாக்கல் செய்வது நல்லது.
அரசாங்கமே அள்ளித்தரும் பணம்.. யாரெல்லாம் தொழில் தொடங்கலாம்


Personal Finance மற்றும் வருமான வரி பற்றிய கூடுதல் தகவல், சமீபத்திய அப்டேட்களை எகனாமிஸ் டைம்ஸ் தமிழ் Business News இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்
இரா.ரூபாவதி கட்டுரையாளரை பற்றி
இரா.ரூபாவதி Senior Digital Content Producer
இரா.ரூபாவதி, எகனாமிக் டைம்ஸ் தமிழ் டிஜிட்டல் பிரிவில் SENIOR DIGITAL CONTENT PRODUCER பணியாற்றி வருகிறார். 2009 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். தமிழின் முன்னணி ஊடக நிறுவனமான விகடன் குழுமத்தின் நாணயம் விகடன் வார இதழில் பணியாற்றியபோது, பொருளாதாரம், பங்குச்சந்தை, பார்சனல் ஃபைனான்ஸ், இன்சூரன்ஸ் ஆகியவற்றில் அனுபவம் பெற்றார். அங்கு 4 ஆண்டுகள் பணி அனுபவத்துக்குப் பின்னர், தமிழின் முன்னணி தொலைக்காட்சி செய்தி நிறுவனமான நியூஸ் 18 தமிழ் சேனலில் 6 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார். சென்னை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டமும், லயோலா கல்லூரியில் ஊடகத்துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.Read More