Please enable javascript.bmw r 1300 gsa bike revealed with automatic clutch feature: ஆட்டோமேட்டிக் கிளட்ச் வசதியுடன் அறிமுகமானது புதிய BMW R 1300 GSA அட்வென்சர் பைக்

ஆட்டோமேட்டிக் கிளட்ச் வசதியுடன் அறிமுகமானது புதிய BMW R 1300 GSA அட்வென்சர் பைக்

Authored by பிரசன்ன வெங்கடேஷ் | Samayam Tamil 6 Jul 2024, 2:39 pm
Subscribe

அட்வென்சர் ஆர்வலர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் R 1300 GSA அட்வென்சர் பைக்கை அறிமுகப்படுத்தியிருக்கிறது BMW. ஆட்டோமேட்டட் கியர் ஷிப்ட் வசதி ஸ்டாண்டர்டாகக் கொண்ட பைக்காக அறிமுகமாகியிருக்கிறது இந்த R 1300 GSA.

bmw r 1300 gsa bike revealed with automatic clutch feature check details in tamil
ஆட்டோமேட்டிக் கிளட்ச் வசதியுடன் அறிமுகமானது புதிய BMW R 1300 GSA அட்வென்சர் பைக்
BMW R 1300 GSA பைக்கானது தற்போது அறிமுாகியிருக்கிறது. சூப்பர்பைக் மற்றும் அட்வென்சர் பைக் ஆர்வர்கள் இந்த பைக்கை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நிலையில், தற்போது இந்த பைக்கை அறிமுகப்படுத்தியிருக்கிறது BMW. தாங்கள் விற்பனை செய்யும் அனைத்து GS மாடல் பைக்குளையும் அடிப்படையாகக் கொண்ட GSA மாடல் பைக் ஒன்றை BMW வெளியிடுவது வழக்கம். அப்படி முன்னர் வெளியான R 1300 GS மாடலை அடிப்படையாகக் கொண்டு புதிய R 1300 GSA பைக்கை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.

ஆட்டோமேட்டட் ஷிப்ட் அசிஸ்டன்ட்:

ஆட்டோமேட்டட் ஷிப்ட் அசிஸ்டன்ட்:

இந்த பைக்கில் தான் புதிதாக BMW உருவாக்கிய ஆட்டோமேட்டட் ஷிப்ட் அசிஸ்டன்ட் வசதி ஸ்டாண்டர்டாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த பைக்கில் கிளட்ச் இல்லை. கியர் ஷிப்டர் மட்டும் உண்டு. அதனையும் தேவையென்றால் மட்டும் பயன்படுத்தலாம், இல்லையெனில் கியர் ஷிப்டிங் வேலையை பைக்கே பார்த்துக் கொள்ளும். இதனை மாற்றிக் கொள்ள தனியாக ஸ்விட்ச் ஒன்றையும் கொடுத்திருக்கிறது BMW. ஹேண்டில் பாரில் இருக்கும் இந்த ஸ்விட்சைப் பயன்படுத்தி மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் மோடுக்கு மாறிக் கொள்ளலாம்.

BMW R 1300 GSA-வில் உள்ள அம்சங்கள்:

BMW R 1300 GSA-வில் உள்ள அம்சங்கள்:

1300 GS மாடலை விட பெரிதாக 30 லிட்டர் ஃப்யூல் டேங்கைக் கொண்டிருக்கிறது 1300 GSA. மேலும், 269 கிலோ எடையைக் கொண்டிருக்கிறது 1300 GSA. இது 1300 GS மாடலை விட 32 கிலோவும், 1250 GSA மாடலை விட 1 கிலோவும் அதிகம். சீட் உயரத்தை 870 மிமீ முதல் 890 மிமீ வரை வைத்துக் கொள்ளலாம். இது 1250 GS மாடலின் சீட் உயரத்தை (890 மிமீ முதல் 910 மிமீ) விட சற்றுக் குறைவு. உயரம் குறைவானவர்களுக்கு குறைவான சீட் உயரம் மற்றும் சஸ்பென்ஷன் உயரம் கொண்ட தேர்வுகளை பெற்றுக் கொள்ளலாம்.

BMW R 1300 GSA: இன்ஜின்

BMW R 1300 GSA: இன்ஜின்

1300 GS மாடலில் கொடுக்கப்பட்டிருக்கும் அதே லிக்விட்-கூல்டு 1,300 சிசிச இன்ஜின் தான் இந்த 1300 GSA மாடலிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜினானது 145hp பவர் மற்றும் 149Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது.

மேலும், இந்த பைக்கானது 1300 GS மாடலைப் போலவே ஸ்டாண்டர்டு, ட்ரிபிள் பிளாக், GS டிராஃபி மற்றும் ஆப்ஷன் 719 ஆகிய நான்கு வேரியன்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

BMW R 1300 GSA: வசதிகள்

BMW R 1300 GSA: வசதிகள்

இந்த R 1300 GSA மாடலின் அனைத்து வேரியன்ட்களிலும் 4 ரைடிங் மோடுகள், இன்தின் பிரேக் கண்ட்ரோல், ஹில்-ஹோல்டு அசிஸ்ட் மற்றும் ரேடார் அசிஸ்டட் பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டிருக்கின்றன. எலெக்ட்ரானிக் சஸ்பென்ஷன், அடாப்டிவ் ரைடு உயரம் மற்றும் ப்ரோ ரைடிங் மோடுகள் ஆகியவற்றை கூடுதல் தேர்வாகப் பெற்றுக் கொள்ளலாம். இது தவிர இன்னும் பல்வேறு கூடுதல் உபகரணங்களையும் நம்முடைய விருப்பத்தின் பெயரில் பெற்றுக் கொள்ளலாம்.

BMW R 1300 GSA: விலை?

BMW R 1300 GSA: விலை?

1250 GS மாடலை விட ரூ.40,000 கூடுதலாக ரூ.20.95 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியானது 1300 GS. தற்போது BMW R 1250 GSA பைக்கானது ரூ.22.50 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, இதனைவிட சற்று கூடுதலான விலையிலேயே புதிய R 1300 GSA பைக் வெளியாகும் எனத் தெரிகிறது. விரைவில் இந்தப் புதிய பைக்கை BMW இந்தியாவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பிரசன்ன வெங்கடேஷ்
எழுத்தாளர் பற்றி
பிரசன்ன வெங்கடேஷ்
நான் பிரசன்ன வெங்கடேஷ். நான்கு ஆண்டுகளாக ஊடகத்துறையில் செயல்பட்டு வருகிறேன். தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், நிதி மற்றும் வணிகத்தில் ஆர்வம் அதிகம். அது சார்ந்த கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். எந்த விஷயத்தையும் அனைவருக்கும் புரியும்படியான நடையில் தமிழில் எழுத வேண்டும் என்பது எனது விருப்பம். இப்போது Times Internet சமயம் தமிழில் ஆட்டோமொபைல் பிரிவில் கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்