Please enable javascript.yamaha may month sales report mt15 tops the chart: முந்திச் செல்லும் MT-15, விற்பனையில் பின்தங்கும் FZ.. யமஹாவின் மே மாத விற்பனை நிலவரம்

முந்திச் செல்லும் MT-15, விற்பனையில் பின்தங்கும் FZ.. யமஹாவின் மே மாத விற்பனை நிலவரம்

Authored by பிரசன்ன வெங்கடேஷ் | Samayam Tamil 27 Jun 2024, 5:11 pm
Subscribe

Yamaha MT 15
கடந்த மே மாதம் இந்தியாவில் பைக்குகளை விற்பனை செய்து வரும் நிறைய நிறுவனங்கள் முந்தைய மாதங்களை விட குறைவான விற்பனையைப் பதிவு செய்த நிலையில், யமஹா நிறுவனம் சற்று அதிகமான விற்பனையைப் பதிவு செய்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 63,098 பைக்குகளை அந்நிறுவனம் விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த மே மாதம் 64,222 பைக்குகளை விற்பனை செய்திருக்கிறது. இது ஏப்ரல் மாதத்தை விட 1.78% அதிகமாகும்.

அதேபோல், கடந்தாண்டு மே மாதத்தை விட 19.88% அதிகமான விற்பனையைப் பதிவு செய்திருக்கிறது யமஹா. கடந்தாண்டு மே மாதம் 53,571 பைக்குகளையே அந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. விற்பனை அளவு அதிகரித்திருப்பதைக் கடந்து, விற்பனை செய்யப்பட்ட பைக்குளும் இடம் மாறியிருக்கின்றன.

ஆம், கடந்தாண்டு மே மாதம் யமஹாவின் அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் முதலிடத்தைப் பிடித்திருந்தது FZ. ஆனால், தற்போதோ MT பைக் அந்த இடத்தை தட்டிப் பறித்திருக்கிறது. ஆம், FZ பைக்குகள் தான் இந்தியாவில் அதிகம் பேரால் வாங்கப்படும் யமஹா பைக்கா இருந்து வந்தது. அதற்கு அதன் விலை தான் பிரதான காரணமாக இருந்தது. ஆனால், விலையையும் கடந்து MT பைக் மீது இளைஞர்களுக்கு ஆர்வம் வந்திருக்கிறது.

கடந்தாண்டு மே மாதம் 7,156 MT பைக்குகளே விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மே மாதம் 14,612 MT பைக்குகள் விற்பனையாகியிருக்கின்றன. FZ பைக்குகள் சற்று பின்தங்கினாலும், அவையும் MT பைக் அளவிற்கு விற்பனையாகியிருக்கின்றன. கடந்தாண்டு மே மாதம் 16,919 FZ பைக்குகள் விற்பனையான நிலையில், கடந்த மே மாதம் 14,359 FZ பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

யமஹா ஸ்கூட்டர்களில் அதிக விற்பனையைப் பதிவு செய்திருப்பது ரேZR ஸ்கூட்டர் தான். கடந்த ஏப்ரல் மாதம் இந்த ஸ்கூட்டர் தான் ஒட்டுமொத்தமாக யமஹா விற்பனையில் 14,055 யூனிட்டுகள் விற்பனையாகி முதலிடத்தைப் பிடித்திருந்தது. கடந்த மே மாதம் 13,794 யூனிட்டுகள் விற்பனையாகி மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

இளைஞர்களால் அதிகம் விரும்பப்படும், இந்தியாவில் பல ஆண்டுகளாக விற்பனையில் இருக்கும் R15 பைக்கானது கடந்த மே மாதம் 10,435 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கிறது. இது கடந்த மாதம் மற்றும் கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது சற்று சரிவு தான்.

யமஹாவின் மேக்ஸி ஸ்கூட்டரான ஏராக்ஸ் கடந்த மே மாதம் 1,671 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கிறது. அதே போல், கடந்த டிசம்பர் மாதம் வெளியான யமஹாவின் பெரிய இன்ஜின் கொண்ட பைக்குகளான R3 மற்றும் MT03 ஆகிய பைக்குகள் 21 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதம் இதே பைக்குகள் 38 யூனிட்டுகள் விற்பனையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 பிரசன்ன வெங்கடேஷ்
எழுத்தாளர் பற்றி
பிரசன்ன வெங்கடேஷ்
நான் பிரசன்ன வெங்கடேஷ். நான்கு ஆண்டுகளாக ஊடகத்துறையில் செயல்பட்டு வருகிறேன். தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், நிதி மற்றும் வணிகத்தில் ஆர்வம் அதிகம். அது சார்ந்த கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். எந்த விஷயத்தையும் அனைவருக்கும் புரியும்படியான நடையில் தமிழில் எழுத வேண்டும் என்பது எனது விருப்பம். இப்போது Times Internet சமயம் தமிழில் ஆட்டோமொபைல் பிரிவில் கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்