Please enable javascript.வீக்கெண்டில் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை.. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்! - today gold and silver price increased check the latest price in chennai as of july 6 2024 - Samayam Tamil

வீக்கெண்டில் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை.. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்!

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 6 Jul 2024, 11:30 am
Subscribe

இன்று சென்னையில் தங்கம், வெள்ளி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இனி இன்றைய விலையில் என்னென்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

today gold and silver price increased check the latest price in chennai as of july 6 2024
வீக்கெண்டில் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை.. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்!
சென்னையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. நேற்றைய தினத்தை விட இன்று கணிசமாக விலை உயர்ந்து தங்கத்தின் விற்பனை துவங்கியுள்ளது. அதே போல் வெள்ளி விலையும் ஓரளவு உயர்ந்துள்ளது. இதுக்குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை!

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை!

05/ஜூலை/2024 - 54,080
04/ஜூலை/2024 - 54,080
03/ஜூலை/2024 - ரூ. 53,560
02/ஜூலை/2024 - ரூ. 53,520
01/ஜூலை/2024 - ரூ. 53,480
30/ஜூன்/2024 - ரூ. 53,480
29/ஜூன்/2024 - ரூ. 53,480
28/ஜூன்/2024 - ரூ. 53,328
27/ஜூன்/2024 - ரூ. 53,000
26/ஜூன்/2024 - ரூ. 53,280

இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை!

இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை!

இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,820 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. அதேபோல 8 கிராம் தங்கத்தின் விலை 54,560 ரூபாய்க்கு விற்பனையாகத் துவங்கியுள்ளது. நேற்றைய தினம் ரூ. 54,080 என்ற விலையில் எட்டு கிராம் தங்கம் விற்பனையாகி வந்த நிலையில் இன்று அதிரடியாக விலை உயர்ந்துள்ளது.

தூய தங்கம்!

தூய தங்கம்!

இன்று சென்னையில் 24 காரட் கிராம் தூய தங்கத்தின் விலை ரூ 7,440-க்கு விற்பனையாகத் துவங்கியுள்ளது. அதேபோல 8 கிராம் தங்கம் இன்று 59,520 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. நேற்றைய தினத்தை ஒப்பிடும் போது இன்று 24 காரட் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து விற்பனையை துவங்கியுள்ளது. இதனால் நகை பிரியர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

வெள்ளி விலை!

வெள்ளி விலை!

இன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.99.30-க்கு விற்பனையாகி வருகிறது. அதே போல் 8 கிராம் வெள்ளி 794.40 ரூபாய் என்ற விலையில் விற்பனையை துவங்கியுள்ளது. நேற்றைய தினத்தை காட்டிலும் தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று விலை உயர்ந்து விற்பனையை துவங்கியுள்ளது.

ஆஷிக் முகமது
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா மற்றும் வர்த்தகம், பங்குச்சந்தை சம்பந்தமான கட்டுரைகளை எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்