Please enable javascript.நீட் கவுன்சிலிங் 2024 ஒத்திவைப்பு,NEET UG Counselling 2024 : நீட் மருத்துவ கவுன்சிலிங் ஒத்திவைப்பு - வெளியான முக்கிய தகவல்..! - neet ug counselling 2024 deferred until further notice official sources - Samayam Tamil

NEET UG Counselling 2024 : நீட் மருத்துவ கவுன்சிலிங் ஒத்திவைப்பு - வெளியான முக்கிய தகவல்..!

Authored byஜான்வி | Samayam Tamil 6 Jul 2024, 2:25 pm
Subscribe

NEET UG Counselling 2024 : இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மருத்துவ கவுன்சிலிங் ஜூலை 6 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹைலைட்ஸ்:

  • இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மருத்துவ கவுன்சிலிங் ஒத்திவைப்பு
  • நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
  • ஜூலை 8 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நீட் தொடர்பான வழக்குகள்
neet Counselling
நீட் கவுன்சிலிங் 2024
NEET UG Counselling 2024 : எம்.பி.பி.எஸ் /பி.டி.எஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நடைபெறும் நீட் கவுன்சிலிங் 2024 ஜூலை 6 ஆம் தேதி முதல் எதிர்பார்க்கப்பட்டது. நேற்று (ஜூலை 5) உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதனைத்தொடர்ந்து, நீட் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய மருத்துவ கவுன்சிலிங் குழு (MCC) மூலம் நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் 15 சதவிகித சீட்களுக்கு கவுன்சிலிங் நடைபெறும். இதற்கான அறிவிப்பு https://mcc.nic.in/ இணையத்தளத்தில் வெளியிடப்படும். ஜூலை 6 ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வரும் என எதிரபார்க்கப்பட்ட நிலையில், தற்போது வரை இதற்கான அறிவிப்பை தேசிய மருத்துவ கவுன்சிலிங் குழு வெளியிடவில்லை.

NEET UG தேர்வு 2024 :
இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதனைத்தொடந்து இத்தேர்விற்கான முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியானது. இத்தேர்வில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனைத்தொடர்ந்து, நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கிய விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, மறுதேர்வு ஜூன் 23 ஆம் தேதி நடத்தப்பட்டது.

இதில் 813 மாணவர்கள் மட்டும் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். மீதமுள்ள 48 சதவீதம் மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண்கள் இல்லாமல் உண்மையான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. மறுதேர்வு எழுதியவர்களின் முடிவுகள் ஜூன் 30 ஆம் தேதி வெளியானது. மேலும் மாணவர்களில் மாற்றியமைக்கப்பட்ட புதிய மதிப்பெண் தரவரிசைகள் வெளியிடப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் :
நீட் தேர்வில் பெரிய அளவில் ரகசியத்தன்மை மீறப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லாத நிலையில், தேர்வை ரத்து செய்யக்கூடாது என மத்திய உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. ஆதாரங்கள் இல்லாதபட்சத்தில் முழு தேர்வையும் ரத்து செய்தால் இந்தாண்டு நேர்மையாக தேர்வெழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகள், வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. மேலும் தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவர உயர்மட்ட நிபுணர் முழு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வை ரத்து செய்யக்கூடாது என பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழங்கு ஜூலை 8 தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

நீட் தொடர்பான வழக்குகள் ஜூலை 8 ஆம் தேதி விசாரணை :

ரத்து முதல் முறைகேடுகள் வரை நீட் தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் ஜூலை 8 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துகொள்ளுகிறது. மனுதார்களில் புகார்களுக்கு ஜூலை 8 ஆம் தேதிக்குள் தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

NEET UG கவுன்சிலிங் 2024 :
இந்நிலையில், அகில இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான 15 சதவிகித சீட்களுக்கு எம்.சி.சி-யால் நடத்தப்படும் கவுன்சிலிங் தொடங்கும் தேதி அறிவிப்பு தாமதம் ஆகும் என தெரியவருகிறது. இன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேதி குறிப்பிடாமல் கவுன்சிலிங் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜான்வி
எழுத்தாளர் பற்றி
ஜான்வி
சென்னை பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலைப் பட்டம் முடித்து ஊடகத்துறையில் டிஜிட்டல் பிரிவில் 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை வாசகர்களுக்கு வழங்கி வருகிறேன். அரசியல், உலக செய்திகள் மற்றும் பயணம் போன்ற பிரிவுகளிலும் ஆர்வம் உண்டு.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்