Please enable javascript.Central Govt Recruitment Notification 2024,Central Govt Jobs : ஊட்டியில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. உதவியாளர் முதல் டிரைவர் வரை.. சம்பள விவரங்கள் இதோ..! - central govt radio astrophysics centre recruitment 2024 notification for various post 10th pass can apply - Samayam Tamil

Central Govt Jobs : ஊட்டியில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. உதவியாளர் முதல் டிரைவர் வரை.. சம்பள விவரங்கள் இதோ..!

Authored byஜான்வி | Samayam Tamil 6 Jul 2024, 10:00 am
Subscribe

Central Govt Company Job : மத்திய அரசின் கீழ் செயல்படும் நேஷன்ல் சென்டர் ரேடியோ அஸ்ட்ரோபிசிக்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள பல்வேறு அலுவலக பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிளார்க், உதவியாளர், பாதுகாப்பு காவலர் என 33 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஹைலைட்ஸ்:

  • மத்திய அரசின் கீழ் ஊட்டியில் நிறுவனத்தில் வேலை
  • உதவியாளர் முதல் டிரைவர் வரை காலிப்பணியிடங்கள்
  • அதிகபட்சமாக ரூ.58,986 வரை சம்பளம்

radio (1)
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024
Central Govt Company Job : மத்திய அரசின் கீழ் ஊட்டியில் இருந்து செயல்படும் நேஷன்ல் சென்டர் ரேடியோ அஸ்ட்ரோபிசிக்ஸ்(National Centre for Radio Astrophysics) நிறுவனத்தில் உள்ள அலுவலக காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்கள் தேர்வில் மூலம் நிரப்பப்படவுள்ளது. மத்திய அரசில் வேலை தேடுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பிக்கலாம்.
Central Govt நிறுவனப் பணியின் விவரங்கள் :
பதவியின் பெயர்காலிப்பணியிடங்கள்
டெக்னிக்கல் உதவியாளர்1
அறிவியல் உதவியாளர்2
ஆய்வக உதவியாளர்1
டிரேட்ஸ்மேன்(Electrical/Elex)2
டிரைவர்1
கிளார்க்1
பணி உதவியாளர்3
பாதுகாப்பு காவலர்2
Central Govt நிறுவனப் பணிக்கான வயது வரம்பு :
  • டெக்னிக்கல் உதவியாளர் பதவிக்கு அதிகபட்சமாக 28 வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • அறிவியல் உதவியாளர் பதவிக்கு வயது வரம்பு 33 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • டிரேட்ஸ்மேன்(Electrical)பதவிக்கு 28 வயதாகவும், டிரேட்ஸ்மேன்(Electronics) பதவிக்கு 31 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • டிரைவர் பதவிக்கு அதிகபட்சமாக 35 வயது வரை இருக்கலாம்.
  • பணி உதவியாளர் பணிக்கு 31 முதல் 33 வயது வரை இருக்கலாம்.
  • பாதுகாப்பு காவலர் பணிக்கு அதிகபட்சமாக 31 வயது வரை இருக்கலாம். மேலும், இப்பணியிடங்களுக்கு வயது வரம்பில் தளர்வு உள்ளது.
Central Govt நிறுவனப் பணிக்கான சம்பள விவரம் :
  • டெக்னிக்கல் உதவியாளர் மற்றும் அறிவியல் உதவியாளர் பதவிக்கு ரூ.58,986 மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • ஆய்வக உதவியாளர் பதவிக்கு மற்றும் டிரேட்ஸ்மேன் பதவிக்கு ரூ.37,203 மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • டிரைவர் பதவிக்கு ரூ.32,991 மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • கிளார்க் பதவிக்கு ரூ.37,203 மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • பணி உதவியாளர் மற்றும் பாதுகாப்பு காவலர் பதவிக்கு ரூ. 29,970 மாத சம்பளமாக வழங்கப்படும்.
Central Govt நிறுவனப் பணிக்கான கல்வித்தகுதி :
  • டெக்னிக்கல் உதவியாளர் - எலெக்ட்ரானிக்ஸ் பாடத்தில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் கணினி திறன் தேவை. கூடுதலாக 2 ஆண்டுகள் அனுபவம் தேவை.
  • ஆய்வக உதவியாளர் - கணினி அறிவியல்/எலெக்ட்ரானிக்ஸ்/டிஇஆர்இ ஆகிய பாடத்தில் இளங்கலை அறிவியல் முடித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் அனுபவம் தேவை.
  • டிரேட்ஸ்மேன் - தொழிற்பயிற்சி சான்றிதழ் மற்றும் 2 வரை ஆண்டுகள் அனுபவம் தேவை மற்றும் ஐடிஐ பின்னர் 2 ஆண்டுகள் அனுபவம் தேவை.
  • டிரைவர் - அங்கீகரிக்கப்பட்ட பள்ளி பாடத்திட்டத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கிளார்க் - ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் தட்டச்சி தெரிந்திருக்க வேண்டும். கணினி திறன் தேவை.
  • பணி உதவியாளர் - அங்கீகரிகரிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 1 ஆண்டு அனுபவம் தேவை.
  • பாதுகாப்பு காவலர் - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சான்றிதழ் படிப்பு பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக கணினி இயக்கும் திறன் மற்றும் 3 ஆண்டுகள் அனுபவம் தேவை.
Central Govt நிறுவனப் பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பதார்களில் இருந்து கல்வித்தகுதி அடிப்படையில் விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டு திறன் தேர்வு / தொழில் தேர்விற்கு அழைக்கப்படுவர். அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும்.

Central Govt நிறுவனப் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடங்களுக்கு http://www.ncra.tifr.res.in/ என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள https://tinyurl.com/ncrajob2024 இந்த இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் பூர்த்தி செய்யபப்ட்ட விண்ணப்பத்தை தபால் மூலம் அனுப்பியும் விண்ணப்பிக்கலாம். மேலே குறிப்பிட்டுள்ள இணைப்பில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Central Govt நிறுவனப் பணிக்கான முக்கிய நாட்கள் :

விவரம்முக்கிய நாட்கள்
விண்ணப்பிக்க கடைசி நாள்21.07.2024
எழுத்துத் தேர்வுபின்னர் அறிவிக்கப்படும்
நேர்காணல்பின்னர் அறிவிக்கப்படும்
மத்திய அரசின் கீழ் ஊட்டியில் இருந்து செயல்படும் நேஷன்ல் சென்டர் ரேடியோ அஸ்ட்ரோபிசிக்ஸ் நிறுவனத்தில் உள்ள அலுவலக காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பை முழுமையாக படித்து ஆன்லைன் வழியாக அல்லது தபால் வழியாக விண்ணப்பிக்கவும்.
ஜான்வி
எழுத்தாளர் பற்றி
ஜான்வி
சென்னை பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலைப் பட்டம் முடித்து ஊடகத்துறையில் டிஜிட்டல் பிரிவில் 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை வாசகர்களுக்கு வழங்கி வருகிறேன். அரசியல், உலக செய்திகள் மற்றும் பயணம் போன்ற பிரிவுகளிலும் ஆர்வம் உண்டு.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்