Please enable javascript.National Housing Bank Recruitment 2024 Notification | தேசிய வீட்டுவசதி வங்கியில் மேனேஜர் வேலை - தகுதி முதல் தேர்வு செய்யப்படும் முறை வரை..!

NHB Recruitment 2024 : அரசின் தேசிய வீட்டுவசதி வங்கியில் மேனேஜர் வேலை - தகுதி முதல் தேர்வு செய்யப்படும் முறை வரை..!

Authored byஜான்வி | Samayam Tamil 6 Jul 2024, 4:12 pm
Subscribe

National Housing Bank Recruitment 2024 : தேசிய வீட்டுவசதி வங்கியில் மேனேஜர், நிதி மற்றும் ஐடி பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ண்பப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் முதல் தேர்வு செய்யப்படும் முறை மற்றும் முக்கிய நாட்கள் விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

national housing bank
தேசிய வீட்டுவசதி வங்கியில் வேலை 2024
National Housing Bank Recruitment 2024 : தேசிய வீட்டுவசதி வங்கியில் மேனேஜர், நிதி மற்றும் ஐடி பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேனேஜர் பிரிவில் உள்ள பகுதிகள் முழு நேரமாகவும், இதர பதவிகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.

National Housing Bank பணியின் விவரங்கள் :
முழு நேர அடிப்படையில் நிரப்பப்படும் பணிகள்
பதவியின் பெயர்காலிப்பணியிடங்கள்
ஜெனரல் மேனேஜர் (Project Finance)1
உதவி ஜெனரல் மேனேஜர் (Credit)1
டெபியூட்டி மேனேஜர்(Credit)3
உதவி மேனேஜர்18
ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் பணிகள்
பதவியின் பெயர்காலிப்பணியிடங்கள்
தலைமை பொருளாதார நிபுணர்1
சீனி்யர் திட்ட நிதி அதிகாரி10
திட்ட நிதி அதிகாரி12
ப்ரோட்டோகால் அதிகாரி1
அப்ளிகேஷன் டெவலப்பர்1

National Housing Bank பணிக்கான வயது வரம்பு :

  • ஜெனரல் மேனேஜர் குறைந்தபட்சம் 40 வயது முதல் அதிகபட்சமாக 55 வயது வரை இருக்கலாம்.
  • உதவி ஜெனரல் மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 32 வயது முதல் அதிகபட்சமாக 50 வயது வரை இருக்கலாம்.
  • டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 23 வயது முதல் அதிகபட்சமாக 32 வயது வரை இருக்கலாம்.
  • உதவி மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சமாக 30 வயது வரை இருக்கலாம்.
  • தலைமை பொருளாதார நிபுணர் பதவிக்கு அதிகபட்சமாக 62 வயது வரை இருக்கலாம்.
  • சீனி்யர் திட்ட நிதி அதிகாரி பதவிக்கு குறைந்தபட்சம் 40 வயது முதல் அதிகபட்சமாக 59 வயது வரை இருக்கலாம்.
  • திட்ட நிதி அதிகாரி பதவிக்கு குறைந்தபட்சம் 35 வயது முதல் அதிகபட்சமாக 59 வயது வரை இருக்கலாம்.
  • ப்ரோட்டோகால் அதிகாரி பதவிக்கு குறைந்தபட்சம் 50 வயது முதல் அதிகபட்சமாக 62 வயது வரை இருக்கலாம்.
  • அப்ளிகேஷன் டெவலப்பர் பதவிக்கு குறைந்தபட்சம் 23 வயது முதல் அதிகபட்சமாக 32 வயது வரை இருக்கலாம்.
  • இப்பணியிடங்களுக்கு கூடுதலாக எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கூடுதலாக 5 ஆண்டுகள், ஒபிசி பிரிவினருக்கு கூடுதலாக 3 மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 15 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு உள்ளது.
National Housing Bank பணிக்கான சம்பள விவரம் :
  • ஜெனரல் மேனேஜர் பதவிக்கு ரூ.1,16,120 முதல் ரூ.1,29,000 வரை மாத சம்பள வழங்கப்படும்.
  • உதவி ஜெனரல் மேனேஜர் பதவிக்கு ரூ.89,890 முதல் ரூ.1,00,350 வரை வழங்கப்படும்.
  • டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு ரூ.48,170 முதல் ரூ69,810 வரை கிடைக்கும்.
  • உதவி மேனேஜர் பதவிக்கு ரூ.36,000 முதல் ரூ.63,840 சம்பளமாக வழங்கப்படும்.
  • ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் தலைமை பொருளாதார நிபுணர் பதவிக்கு ரூ.5 லட்சம் மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • சீனி்யர் திட்ட நிதி அதிகாரி பதவிக்கு ரூ.3.5 லட்சம் மற்றும் திட்ட நிதி அதிகாரி பதவிக்கு ரூ.2.5 லட்சம் மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • ப்ரோட்டோகால் அதிகாரி பதவிக்கு ரூ.75 ஆயிரம் மற்றும் அப்ளிகேஷன் டெவலப்பர் பதவிக்கு ரூ.85 ஆயிரம் மாதம் வழங்கப்படும்.
National Housing Bank பணிக்கான கல்வித்தகுதி :
தலைமை பொருளாதார நிபுணர் பதவிக்கு பொருளாதாரத்தில் முதுகலை மற்றும் அதற்கும் அதிகப்படியான கல்வியை பெற்றிருக்க வேண்டும். மேனேஜர் பதவிகளுக்கு இளங்கலை பட்டம் மற்றும் நிதி பிரிவில் ICWAI/ICAI/CFA/MBA ஆகியவை பெற்றிருக்க வேண்டும். மேலும், பதவிக்கு ஏற்ற அனுபவம் தேவை.

National Housing Bank பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டவர்கள் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும். நேர்காணலின்போது கல்வித்தகுதிக்கான சான்றிதழ்களை வங்கியில் சமர்பிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்பு பணி நியமனம் செய்யப்படும்.

National Housing Bank பணிக்கு விண்ணப்பிக்கும் முறை :

தேசிய வீட்டுவசதி வங்கியில் உள்ள மேனேஜர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.nhb.org.in/ என்ற இணையத்தளம் வாயிலாக ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.175 மற்றும் இதர பிரிவினர் ரூ.850 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

National Housing Bank பணிக்கான முக்கிய நாட்கள் :
விவரம்முக்கிய நாட்கள்
விண்ணப்பிக்க கடைசி நாள்19.07.2024
நேர்காணல் நடைபெறும் நாள்பின்னர் அறிவிக்கப்படும்
தேசிய வீட்டுவசதி வங்கியில் மேனேஜர், நிதி மற்றும் ஐடி பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் தகுந்த கல்வித்தகுதி சான்றிதழ்களுடன் ஆன்லைன் வழியாக மட்டும் விண்ணப்பிக்கவும்.
ஜான்வி
எழுத்தாளர் பற்றி
ஜான்வி
சென்னை பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலைப் பட்டம் முடித்து ஊடகத்துறையில் டிஜிட்டல் பிரிவில் 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை வாசகர்களுக்கு வழங்கி வருகிறேன். அரசியல், உலக செய்திகள் மற்றும் பயணம் போன்ற பிரிவுகளிலும் ஆர்வம் உண்டு.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்