Please enable javascript.சென்னை ஈசிஆர் டூ புதுச்சேரி.. இனி தினமும் ரயிலில் போகலாம்! விரைவில் வருகிறது புதிய ரயில் பாதை! - action to speed up completion of new railway line from chennai to cuddalore via puducherry - Samayam Tamil

சென்னை ஈசிஆர் டூ புதுச்சேரி.. இனி தினமும் ரயிலில் போகலாம்! விரைவில் வருகிறது புதிய ரயில் பாதை!

Authored byஅன்னபூரணி L | Samayam Tamil 6 Jul 2024, 6:00 am
Subscribe

சென்னை ஈசிஆர் சாலையில் இருந்து புதுச்சேரிக்கு இனி ரயிலில் செல்லும் வகையில் விரைவில் புதிய ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.

chennai puducherry train
chennai-puducherry train
சென்னை-புதுச்சேரி போக்குவரத்து:

நாள்தோறும் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கும் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கும் வேலை நிமித்தமாகவும் கல்வி மற்றும் வியாபாரங்களுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

வார இறுதி நாட்களில் சொல்லவே வேண்டாம் இந்த கூட்டம் பல மடங்காக அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களில் இளைஞர்கள் பட்டாளம் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கும் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கும் படையெடுத்து வருகின்றனர்.

கிழக்கு கடற்கரை சாலை:

இதில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பயணிகள் கிழக்கு கடற்கரை சாலையை அதிகமாக உபயோகித்து வருவது தெரிய வந்துள்ளது.



சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு இரண்டு வழிகளில் செல்ல முடியும். ஒன்று கிழக்கு கடற்கரை சாலை மற்றும் புறவழிச் சாலை. இந்த புறவழிச் சாலை சென்னையை மற்ற தமிழகத்தின் நகரங்களுடன் இணைக்கிறது. இதனால் இது மிகவும் பரபரப்பான சாலைகளில் ஒன்றாக உள்ளது.

தினமும் ரயிலில் :

இந்த நிலையில் இந்த வழியில் செங்கல்பட்டு மேல்மருவத்தூர் திண்டிவனம் வழியாக புதுச்சேரியை அடைய முடியும். மேலும் ஈசிஆர் சாலையில் இருந்து கல்பாக்கம் மரக்காணம் வழியாக புதுச்சேரியை அடைய முடியும். இந்த நிலையில் இந்த இரண்டு வழிகளில் பெரும்பாலான பொதுமக்கள் புதுச்சேரிக்கு செல்ல பயன்படுத்துவது ஈசிஆர் சாலை. இந்த நிலையில் இந்த ஈசிஆர் சாலையில் இருந்து இனி புதுச்சேரிக்கு ரயிலில் செல்ல முடியும்.

தமிழகம் முழுவதும் நாளை (6.7.2024) மின்தடை! வெளியான முழு லிஸ்ட் இதோ!

கிழக்கு கடற்கரை சாலையை அதிகம் பயன்படுத்த காரணம் இந்த சாலையை ஒட்டி திருவான்மியூர் கிண்டி சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் சென்னையின் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ளது. இந்த நிலையில் இங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் புதுச்சேரிக்கு பயணம் செய்ய சுலபமாக இருப்பது இந்த ஈசிஆர் சாலை.

இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் பயன்பெறும் வகையில் சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூருக்கு இந்த புதிய ரயில் பாதை விரைவில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ஆரம்பத்தில் சர்வே பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த திட்டம் அதன் பிறகு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது இதனால் திட்டத்தின் மதிப்பீடு 1500 கோடியை தாண்டி உள்ளது. இந்த நிலையில் கடந்த மத்திய பட்ஜெட்டில் ரூபாய் 50 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பெரிய அளவிலான பணிகள் நடைபெறவில்லை.

விரைவில் வருகிறது புதிய ரயில் பாதை:

சென்னையில் இருந்து கடலூர் மற்றும் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு தினமும் 1000க்கும் அதிகமான பயணிகள் பயணித்து வரும் நிலையில் இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதுடன் அதிக அளவிலான சாலை விபத்துகள் நடைபெறுகிறது. இதனால் இப்பகுதியில் ரயில் பாதை அமைக்கப்பட்டால் தினமும் சென்னையில் இருந்து கடலூர் புதுச்சேரிக்கு பயணிக்கும் மக்கள் அதிக அளவில் ரயில் பயணங்களை தேர்வு செய்வார்கள்.

இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி விரைவாக பணிகளை முடிக்க ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியிருப்பதாவது, "புதுச்சேரி மகாபலிபுரம் வழியாக சென்னை கடலூர் ரயில்வே திட்டத்திற்கு அதிகளவிலான நிதி தேவைப்படுகிறது மத்திய பட்ஜெட்டில் இந்த நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவே வரும் பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரி வலியுறுத்தியுள்ளோம்" இவ்வாறு தெரிவித்துள்ளனர்

சென்னை புதுச்சேரி இடையே இந்த திட்டத்திற்காக 80 சதவீதம் சர்வே பணிகள் முடிவடைந்த நிலையில் புதுச்சேரி கடலூர் வரையிலான 22 கிலோமீட்டர் தொலைவிற்கு ரயில் பாதை சர்வே நடத்தப்பட்ட நிலையில் இந்த இடங்களை மறு ஆய்வு செய்ய புதுச்சேரி மாநில அரசு ரயில்வே துறை கோரிக்கை விடுதி நிலையில் அதனை ஏற்று ரயில்வே நிர்வாகம் சர்வே பணியை முடித்து பணிகள் கடந்து 2018 ஆம் ஆண்டு மீண்டும் கிடப்பில் போடப்பட்டது. அதன் பிறகு இந்த திட்டப்பணிகள் தற்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது.
அன்னபூரணி L
எழுத்தாளர் பற்றி
அன்னபூரணி L
அன்னபூரணி: ஆங்கில இலக்கியம் மற்றும் ஊடகவியல் துறை பட்டதாரி. அரசியல், கிரைம், சினிமா, பொது செய்திகள், ஆன்மீக செய்திகளில் ஆர்வம் அதிகம். எழுதுவதிலும், புத்தகம் வாசிப்பதிலும் அலாதி பிரியம் உண்டு. ஒரு பயிற்சியாளராக சமயம் தமிழில் எனது முதல் பயணத்தை தொடங்கி, தற்போது ஒரு வருடத்திற்கும் மேலாக மாவட்ட செய்திகளை எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்