Please enable javascript.Chirag Paswan response to Lalu Prasad Yadhav: மோடி அரசு ஆகஸ்ட் மாதத்திற்குள் கவிழும்.. கணித்த லாலு பிரசாத்.. கனவு காணாதீங்க ஜி.. விளாசிவிட்ட சிராக் பஸ்வான்!

மோடி அரசு ஆகஸ்ட் மாதத்திற்குள் கவிழும்.. கணித்த லாலு பிரசாத்.. கனவு காணாதீங்க ஜி.. விளாசிவிட்ட சிராக் பஸ்வான்!

Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil 6 Jul 2024, 4:10 pm
Subscribe

பிரதமர் மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆகஸ்ட் மாதத்திற்குள் கவிழும் என லாலு பிரசாத் கூறியதற்கு மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் பதிலடி கொடுத்துள்ளார்.

Lalu Prasad - Chirag Paswan

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (RJD) 28வது நிறுவன நாள் விழா பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசாங்கம் பலவீனமானது என்றும், ஆகஸ்ட் மாதத்திற்குள் ஆட்சிக் கவிழும் என்றும் கூறினார்.

மேலும் கடந்த 27 ஆண்டுகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் பல ஏற்ற தாழ்வுகளைக் கண்டுள்ளதாகவும், அதன் காரணமாக தாங்கள் பலம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். மோடி தலைமையிலான மத்திய அரசு ஆகஸ்ட் மாதத்திற்குள் கவிழலாம் என்பதால் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடக்கலாம் என்றும் கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் அனைவரும் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் லாலு பிரசாத் யாதவ் கேட்டுக்கொண்டார்.

ஆம்ஸ்ட்ராங்கை வீட்டின் அருகே கொன்றது ஏன்? கொலை செய்தது எப்படி? வெளியான பகீர் தகவல்!

மேலும் பீகாரில் தேஜஸ்வி யாதவ் தலைமையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தேர்தலில் போட்டியிடும் என்றும் அவருக்கு தான் பொறுப்பை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்த லாலு பிரசாத் யாதவ், உங்கள் ஆதரவை அளிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் கேட்டுக்கொண்டார். RJD இன்னும் பெரிய உயரங்களை எட்டும் என்றும் அந்த நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.

தொடர்ந்து மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகளை கடுமையாக சாடிய லாலு பிரசாத் யாதவ், பீகாரில் குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும் மத்தியிலும் மாநிலத்திலும் 'டபுள் எஞ்சின்' என்ற அற்புதமான விளையாட்டு வெளிவருகிறது , ஒரு இன்ஜின் ஊழலிலும், மற்றொன்று குற்றத்திலும் ஈடுபட்டுள்ளது என்றும் விமர்சித்தார்.

'ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழி: அண்ணன் பிறந்தநாளில் ஆர்ம்ஸ்ட்ராங்கை முடிக்க காத்திருந்தோம்'.. கொலையாளி பகீர் வாக்குமூலம்!

இந்நிலையில் லாலு பிரசாத்தின் இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பிரதமர் மோடியின் தலைமையிலான தங்கள் அரசாங்கத்தின் பலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சிறப்பாக பராமரிக்கப்படும் என்று தன்னால் கூற முடியும் என தெரிவித்துள்ளார்.



2014 முதல் 2024 வரை பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் முதல் இரண்டு பதவிக் காலங்களைக் குறிப்பிட்ட பஸ்வான், இந்த 10 ஆண்டுகளில் கூட, அவர்களால் தயாராக முடியவில்லை என்றும் சாடினார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான தங்கள் அரசு பல வலுவான மற்றும் தைரியமான முடிவுகள் எடுக்கும் என்றும் NDA சார்பாக இதனை கூறுவதகாவும் இதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்கும் என்றும் மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

நிர்மல் லாட்டரியில் முதல் 2 பரிசுகளை தட்டி தூக்கிய திருவனந்தபுரம்.. இன்று காருண்யா லாட்டரியில் ரூ. 80 லட்சம் யாருக்கு?

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 240 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. பெரும்பான்மைக்கு 32 இடங்கள் குறைவாக உள்ளது. இருப்பினும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 293 மக்களவை எம்.பி.க்கள், பெரும்பான்மையை விட அதிகமாக உள்ளனர். பீகாரை தளமாகக் கொண்ட ராம் விலாஸ் பஸ்வானின் எல்ஜேபி , பிஜேபி தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கிறது, மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சி போட்டியிட்ட 5 இடங்களிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
பஹன்யா ராமமூர்த்தி
எழுத்தாளர் பற்றி
பஹன்யா ராமமூர்த்தி
செய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்