Please enable javascript.two boys who were used to driving a car died in an accident near paramathi velur in namakkal: பலி

நாமக்கலில் சோகம்! கார் ஓட்டி பழகிய 2 சிறுவர்கள் உடல் நசுங்கி பலி!

Authored byஅன்னபூரணி L | Samayam Tamil 11 Jun 2024, 10:54 am
Subscribe

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கார் ஓட்டி பழகிய இரண்டு சிறுவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கார் ஓட்டி பழகிய 2 சிறுவர்கள் உடல் நசுங்கி பலி
கார் ஓட்டி பழகிய 2 சிறுவர்கள் உடல் நசுங்கி பலி
நாமக்கலில் சோகம்:

நாமக்கல் பரமத்தி வேலூரில் கார் ஓட்ட பழகிய இரண்டு சிறுவர்கள் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர்.

கார் ஓட்டி பழகிய 2 சிறுவர்கள் :

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கபிலர் மலையை அடுத்த பெரிய மருதூர் அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ், இவரது சுதர்சனன் (வயது 14). இதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் லோகேஷ் (வயது 17). சிறுவர்கள் இருவரும் லோகேஷின் தந்தை ராமசாமியின் ஆம்னி வேனை எடுத்துக் கொண்டு நேற்று இரவு கபிலர்மலை பரமத்தி சாலையில் கார் ஓட்டி பழகியதாக தெரிகிறது.



விபத்தில் சிக்கி உடல் நசுங்கி பலி:

காரை சுதர்சனன் இயக்கிய நிலையில் பரமத்தியிலிருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு கரை திருப்பூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் ஓட்டி வந்ததாக தெரிகிறது. அப்போது சிறுவர்கள் இயக்கிய ஆம்னி வேன் குறுக்கே வந்த நிலையில் எதிரே வந்து கொண்டிருந்த விக்னேஷின் கார் பயங்கரமாக மோதியுள்ளது.

கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போலீசார் விசாரணை:

இதில் ஆம்னி வேன் சுக்குநூறாக நொறுங்கிய நிலையில் உள்ள இருந்த சிறுவர்கள் சமூகத்தின் மீது உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஜேடர்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த சிறுவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.

இரவு நேரத்தில் இரண்டு சிறுவர்கள் கார் ஓட்டி பழகிய நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் பெற்றோர்கள் சிறை செல்ல வேண்டும் என்ற சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில் பரமத்தியில் நடந்த இந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்னபூரணி L
எழுத்தாளர் பற்றி
அன்னபூரணி L
அன்னபூரணி: ஆங்கில இலக்கியம் மற்றும் ஊடகவியல் துறை பட்டதாரி. அரசியல், கிரைம், சினிமா, பொது செய்திகள், ஆன்மீக செய்திகளில் ஆர்வம் அதிகம். எழுதுவதிலும், புத்தகம் வாசிப்பதிலும் அலாதி பிரியம் உண்டு. ஒரு பயிற்சியாளராக சமயம் தமிழில் எனது முதல் பயணத்தை தொடங்கி, தற்போது ஒரு வருடத்திற்கும் மேலாக மாவட்ட செய்திகளை எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்