ஆப்நகரம்

வெம்பக்கோட்டை அகழாய்வு: கழுத்தில் அணியும் தொங்கணி கண்டுபிடிப்பு!

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் நடக்கும் 3ம் கட்ட அகழாய்வில் கழுத்தில் அணியும் அணிகலனில் கோர்க்கப்படும் தொங்கணி கண்டறியப்பட்டுள்ளது.

Authored byரம்யா. S | Samayam Tamil 4 Jul 2024, 9:23 am

ஹைலைட்ஸ்:

  • வெம்பக்கோட்டையில் 3ம் கட்ட அகழாய்வு
  • அணிகலனில் கோர்க்கப்படும் தொங்கணி
  • மாவுக் கல்லில் செய்யப்பட்ட தொங்கணி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழ்வாராய்ச்சி
வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழ்வாராய்ச்சி
வெம்பக்கோட்டையில் நடக்கும் 3ம் கட்ட அகழாய்வில் கழுத்தில் அணியும் அணிகலனில் கோர்க்கப்படும் தொங்கணி கண்டறியப்பட்டுள்ளது.
வெம்பக்கோட்டை
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 3ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல சிவகங்கையில் கீழடி, கொந்தகையில் 10ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடக்கிறது. இந்த அகழாய்வுப் பணி ஓராண்டுக்கு நடைபெற உள்ளது.

வெம்பக்கோட்டையில் கடந்த 2022ம் ஆண்டு, முதல் அகழாய்வு நடைபெற்றது. வைப்பாற்றின் வடகரை பகுதியில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த பண்டைய கால மக்களின் வரலாற்றை அறியும் வகையில் அகழாய்வு பணிகள் நடந்தன.

அகழாய்வு பணி
வெம்பக்கோட்டையில் 2 கட்டமாக நடந்த அகழாய்வு பணிகளின் போது, 7914 தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டது. அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வைப்பாறு வழியாக கடல்வழி வாணிபம் மேற்கொண்டதற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வு
ஜூன் 18ம் தேதி வெம்பக்கோட்டையில் 3ம் கட்ட அகழாய்வு பணிகளை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அகழாய்வில் சுடுமண்ணால் ஆன பெண்ணின் தலைப்பகுதி ஒன்று, சதுரங்கம் விளையாடும் ஆட்டக்காய், சில்வட்டு, சுடுமண் அகல்விளக்கு, சங்கு வளையல், சுடுமண்ணால் ஆன கருப்பு நிற பதக்கம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கழுத்தில் அணியும் தொங்கணி
இந்த நிலையில், மாவுக் கல்லால் செய்யப்பட்ட கழுத்தில் அணியும் அணிகலனில் கீழே கோர்க்கப்படும் தொங்கணி கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொங்கணி மாவுக் கல்லில் செய்யப்பட்டுள்ளது. இதன் தலைப்பகுதியில் அணிகலனுடன் கோர்ப்பதற்கான துளையிடப்பட்டுள்ளது.

பண்டைய காலப் பெண்கள்
14.6 மி.மீ நீளமும் 4.2 மி.மீ சுற்றளவும் 30 மில்லி கிராம் எடையும் கொண்ட பச்சை நிறத்தில் கூம்பு வடிவிலான சிறிய அணிகலன் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பண்டைய காலப் பெண்கள் அணிகலன்களாக பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கீழடி
அதேபோல சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் பத்தாம் கட்ட அகழாய்வில் உடைந்த செம்புப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
ரம்யா. S
நான் ரம்யா தமிழ் இலக்கியம் கற்றுள்ளேன். ஊடகம் மீதான ஆர்வத்தால் இதழியல் துறையை தேர்ந்தெடுத்தேன். இரண்டு வருடம் பத்திரிகை துறையில் அனுபவம் உள்ளது. ஊடகம் சார்ந்த எனது பார்வையை விரிவுபடுத்தி அதில் அனுபவம் பெரும் நோக்கோடு தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் டிஜிட்டல் ஊடகத்தில் இணைந்துள்ளேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி