Please enable javascript.vanathi srinivasan condemns armstrong murder : ஆம்ஸ்ட்ராங் படுகொலை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிவு - வானதி சீனிவாசன் கண்டனம்!

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிவு - வானதி சீனிவாசன் கண்டனம்!

Authored byரம்யா. S | Samayam Tamil 6 Jul 2024, 9:37 am
Subscribe

பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் கொல்லப்பட்டிருப்பது, தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது என தேசிய மகளிர் அணி தலைவரும், பா.ஜ.க எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹைலைட்ஸ்:

  • பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாநிலத் தலைவர்
  • சென்னையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை
  • பாஜக வானதி சீனிவாசன் கண்டனம்
BSP Tamil Nadu President Armstrong murder
BSP Tamil Nadu President Armstrong murder
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் தனது வீட்டின் முன்பு நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் காவல் துறையில் சரண்டைந்துள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்து X தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், "பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னையில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தலைநகர் சென்னையில் அதுவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக உள்ள கொளத்தூர் அருகே ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் கொல்லப்பட்டிருப்பது, தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

அமைதி பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளாக ரவுடிகளின் அட்டகாசம் தலைதூக்கி இருக்கிறது. காவல்துறையினர் முழுக்க முழுக்க திமுக நிர்வாகிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதால், அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.

சென்னை மெட்ரோ ரயில் பணிகள்: ராயப்பேட்டை துர்கையம்மன் கோவில்... ராஜகோபுரத்தை இடிக்க வலுக்கும் எதிர்ப்பு!

திமுகவின் வட்டச் செயலாளர், கிளைச் செயலாளர் முதல் உயர்மட்ட நிர்வாகிகள் வரை காவல்துறைக்கு உத்தரவிடுகின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளுக்கும் இதுதான் காரணம். தலைநகர் சென்னையில் ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கும் இதுதான் காரணம். ஆம்ஸ்ட்ராங் கொலையால் சென்னை வடசென்னை மக்கள் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் உறைந்துள்ளனர்.

சென்னையில் சனிக்கிழமை மின் தடை ஏற்படும் பகுதிகள்... ஏரியா லிஸ்ட் இதோ!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படுகொலையில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கண்டறிந்து கடும் தண்டனை வழங்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது தான் ஒரு மாநில அரசின் முதல் கடமை அந்த கடமையிலிருந்து திமுக தவறியிருக்கிறது. காவல்துறையை தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
ரம்யா. S
எழுத்தாளர் பற்றி
ரம்யா. S
நான் ரம்யா தமிழ் இலக்கியம் கற்றுள்ளேன். ஊடகம் மீதான ஆர்வத்தால் இதழியல் துறையை தேர்ந்தெடுத்தேன். இரண்டு வருடம் பத்திரிகை துறையில் அனுபவம் உள்ளது. ஊடகம் சார்ந்த எனது பார்வையை விரிவுபடுத்தி அதில் அனுபவம் பெரும் நோக்கோடு தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் டிஜிட்டல் ஊடகத்தில் இணைந்துள்ளேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்