Please enable javascript.RB Udayakumar severely criticized Annamalai: அண்ணாமலை போன்ற அரைவேக்காடு தலைவர்கள்.. பாஜக மைனாரிட்டி அரசு.. வெளுத்துவாங்கிய ஆர்பி உதயகுமார்!

அண்ணாமலை போன்ற அரைவேக்காடு தலைவர்கள்.. பாஜக மைனாரிட்டி அரசு.. வெளுத்துவாங்கிய ஆர்பி உதயகுமார்!

Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil 6 Jul 2024, 12:09 pm
Subscribe

அண்ணாமலை போன்ற தகுதி அனுபவம் இல்லாத அரைவேக்காடு தலைவர்களால் தான் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

RB Udhayakumar - Annamalai

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் தன்னால்தான் பாஜக வளர்ந்துள்ளது என்பதை போன்ற பிம்பத்தை உருவாக்கி உள்ளதாகவும், அரசியல் தலைவர்கள் குறித்து தொடர்ந்து பொய் தகவல்களை பரப்பி வருவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். மேலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்து அண்ணாமலை கூறிய கருத்துக்கும் கண்டனம் தெரிவித்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.

இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு காட்டமாக பதில் அளித்திருந்தார் அண்ணாமலை. விக்கிரவாண்டி தொகுதியில் பாமக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த கையோடு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, பிரதமர் மோடியின் முதுகில் குத்தியவர் எடப்பாடி பழனிசாமி, நம்பிக்கை துரோகி என்ற பெயர் அவருக்குதான் பொருத்தமாக இருக்கும் என கடுமையாக விமர்சித்தார்.

'ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழி: அண்ணன் பிறந்தநாளில் ஆர்ம்ஸ்ட்ராங்கை முடிக்க காத்திருந்தோம்'.. கொலையாளி பகீர் வாக்குமூலம்!

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், அண்ணாமலையை கடுமையாக சாடி பதிலடி கொடுத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அண்ணாமலை போன்றவர்களால் மத்தியில் மைனாரிட்டி அரசாக பாஜக ஆட்சி அமைந்துள்ளது என்றார்.

ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை.. 3 முறை எச்சரித்த உளவுத்துறை.. கோட்டைவிட்ட காவல்துறை?

பாஜக வளர்ந்ததாக வார்த்தை ஜாலம் காட்டுகிறார் அண்ணாமலை என்றும் வெற்று விளம்பரங்களை செய்து களத்தில் தன்னை முன்னிலைப்படுத்த அண்ணாமலை பேராசைப்படுகிறார் என்றும் விமர்சித்துள்ளார்.
அண்ணாமலை போன்ற தகுதி அனுபவம் இல்லாத அரைவேக்காடு தலைவர்களால் தான் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

நிர்மல் லாட்டரியில் முதல் 2 பரிசுகளை தட்டி தூக்கிய திருவனந்தபுரம்.. இன்று காருண்யா லாட்டரியில் ரூ. 80 லட்சம் யாருக்கு?

அண்ணாமலை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு உள்நோக்கம் கொண்டு எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கிறார் என்றும் ஆர்பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக அடித்தளத்தை அசைத்து பார்க்கும் வேலையில் அண்ணாமலை ஈடுபட்டார் என்றும் பேரிடர் நிவாரண நிதியை கூட பெற்றுத்தர முடியாதவர் அண்ணாமலை என்று ஆர்பி உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.


மேலும் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை நாகரிகமற்ற அரசியல் பண்பாட்டை தமிழ்நாட்டில் விதைத்து வருகிறார் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார் என்றும் தெரிவித்துள்ள ஆர்பி உதயகுமார், இது போன்ற குற்றச்சாட்டால் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் சேவையை யாரும் மறந்துவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
பஹன்யா ராமமூர்த்தி
எழுத்தாளர் பற்றி
பஹன்யா ராமமூர்த்தி
செய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்