Please enable javascript.selvaperunthagai says no one can defeat armstrong in a straight fight: ஆம்ஸ்ட்ராங்கை எவனாலும் நெருங்க முடியாது.. 1000 பேர் வந்தாலும் சமாளிப்பார்.. செல்வப்பெருந்தகை கண்ணீர்

ஆம்ஸ்ட்ராங்கை எவனாலும் நெருங்க முடியாது.. 1000 பேர் வந்தாலும் சமாளிப்பார்.. செல்வப்பெருந்தகை கண்ணீர்

Authored byஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil 6 Jul 2024, 5:43 pm
Subscribe

"எல்லா சண்டை பயிற்சிகளையும் கற்றவர் ஆம்ஸ்ட்ராங். அவர் கிட்ட யாராலும் நெருங்க கூட முடியாது. இதை தெரிந்து கொண்டு தான் கோழைகள் அவரை பின்புறமாக வந்து தாக்கி இருக்கிறார்கள்" என்று செல்வப்பெருந்தகை கூறினார்.

MixCollage-06-Jul-2024-05-42-PM-1230
சென்னை: "என் தம்பி ஆம்ஸ்ட்ராங்கை நேருக்கு நேராக எவனாலும் நெருங்க முடியாது; அதை தெரிந்து கொண்டுதான் கோழைகள் பின்பக்கமாக வந்து குத்தி இருக்கிறார்கள்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகளாக தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு தனது வீட்டருகே 8 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு கட்சியின் தலைவரையே நடுரோட்டில் வெட்டி கொலை செய்யும் அளவுக்கு நிலைமை சென்றிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இதனிடையே, ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஆம்ஸ்ட்ராங் கொலை.. போலீஸுக்கு கொஞ்சம் டைம் கொடுங்க.. சென்னை போலீஸ் கமிஷனர் அதிரடி

என் அருமை சகோதரன் ஆம்ஸ்ட்ராங்கை கயவாளிகள், கோழைகள் அவர் தனியாக இருக்கும் போது பின்புறமாக சென்று அவரை வெட்டிக் கொலை செய்திருக்கிறார்கள். இதனை காங்கிரஸ் பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது. ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் காலையில் என்னை தொடர்பு கொண்டு ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது தொடர்பாக என்னிடம் பேசி அவர்களின் வருத்தத்தை தெரிவித்தனர். மேலும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியிடமும் அவர்கள் பேசி ஆறுதல் கூறி இருக்கிறார்கள்.

இந்த சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை போலீஸார் பிடித்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்பதுதான் காங்கிரஸின் ஒற்றை கோரிக்கையாக உள்ளது. இந்த வழக்கில் சரணடைந்தவர்கள் மீது யாருக்கும் இங்கு நம்பிக்கை இல்லை. எனவே உண்மையான குற்றவாளிகளை போலீஸார் கைது செய்ய வேண்டும். அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எப்பேர்ப்பட்ட அரசியல் பின்புலம் இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களை கைது செய்ய வேண்டும். ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அவர் கட்டிய பகுஜன் சமாஜ் தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் விரும்புகிறார்களோ அங்கு அடக்கம் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்.

என் தம்பி ஆம்ஸ்ட்ராங்கிடம் யாராலும் நெருங்க முடியாது. 1000 பேர் வந்தாலும் சமாளிக்கக் கூடியவர் அவர். எல்லா சண்டை பயிற்சிகளையும், வித்தைகளையும் கற்றுத்தேர்ந்தவர் அவர். நேருக்கு நேராக யாராலும் என் தம்பியிடம் மோதி ஜெயிக்க முடியாது. அதனால்தான் கோழைகள் பின்புறமாக வந்து முதுகில் குத்திவிட்டு ஓடி இருக்கிறார்கள். அந்தக் கோழைகளை அடையாளம் காண்பதுடன், அந்தக் கோழைகளுக்கு பினனால் இருப்பவர்களையும் சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும். இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
ஜே. ஜாக்சன் சிங்
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்