ஆப்நகரம்

7 வித நோய்களை குணப்படுத்தும் தேன்.. எந்தெந்த நோய்க்கு எப்படி பயன்படுத்தணும்.. தெரிஞ்சுக்கிட்டு யூஸ் பண்ணுங்க..!

மருந்துகளுக்கு மாற்றாக இயற்கையான வைத்தியம் விரும்பினால் நீங்கள் தேன் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். எந்த பிரச்சனைக்கு தேனை எப்படி பயன்படுத்துவது என்பதை இப்போது பார்க்கலாம்.

Authored byதனலட்சுமி | Samayam Tamil 3 Jul 2024, 1:30 pm
தேன் அற்புதமான இனிப்பு சுவையுடன் அற்புதமான மருத்துவ குணங்களையும் கொண்டுள்ள உணவுப்பொருள். இது இனிப்பான சுவையை கொடுப்பதோடு பல நோய்களின் தடுப்பானாகவும் குணப்படுத்தும் மருந்தாகவும் உள்ளது. ஊட்டச்சத்து மிகுந்த தேனை மூலிகை டீயில் மட்டும் அல்ல நோய்களை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுத்தலாம் எந்த நோய்க்கு எப்படி பயன்படுத்துவது என்பதை இப்போது தெரிந்துகொள்வோம்.
Samayam Tamil quick and easy home remedies using honey
7 வித நோய்களை குணப்படுத்தும் தேன்.. எந்தெந்த நோய்க்கு எப்படி பயன்படுத்தணும்.. தெரிஞ்சுக்கிட்டு யூஸ் பண்ணுங்க..!


​தேன் பற்றி ஆராய்ச்சி சொல்வது என்ன?​

  • தேனில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் இதய நோய் அபாயத்தை குறைக்கும்.
  • கடுமையான இரவு இருமல் உள்ளவர்களுக்கு யூகலிப்டஸ் தேன், சிட்ரஸ் தேன் மற்றும் லேபியாடே தேன் போன்றவை சுவாச நோய்த்தொற்று அறிகுறியை கட்டுப்படுத்த செய்யும்.
  • இரைப்பை குடல் அழற்சியுடன் தொடர்புடைய வயிற்றுப்போக்கு நிலைகளை அகற்ற தேன் உதவும் என்று சான்றுகள் தெரிவிக்கின்றன.
  • தேன் ஆன்டி டிரஸண்ட், ஆன்டி டிரஸண்ட் மற்றும் ஆன்டி - ஆன்சைட்டி நன்மைகளை அளிக்கும் என்கிறது ஆய்வுகள்
  • நினைவாற்றல் கோளாறுகளை தடுக்க தேன் உதவும்.
  • மருத்துவ தரம் வாய்ந்த தேனின் மேற்பூச்சு பயன்பாடு காயம் குணப்படுத்துவதை ஊக்குவிக்க உதவுகிறது.

​தொண்டை வலியை குணப்படுத்தும் தேன்​

தேன் தொண்டை புண்களை குணப்படுத்தும் மருந்துகளில் முக்கியமானது. சளி இருமல் போன்ற பிரச்சனைகளின் அறிகுறியை கட்டுப்படுத்த தேன் நன்றாக உதவும்.

எப்படி எடுப்பது

இஞ்சி சாறு ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் நீரில் சேர்த்து கொதிக்க வைத்து 10 மில்லி அளவு தேன் கலந்த் குடிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு மூன்று முறை குடித்தால் விரைவில் சளி, இருமல் கட்டுப்படும். குழந்தைகள் சளி இருமல் உபாதை எதிர்கொள்ளும் போது மருந்துகளை விட தேனை விரும்பி சாப்பிடுவார்கள்.

​வயிற்றுக்கோளாறுகளை குணப்படுத்தும் தேன்​

வயிற்றுப்புண் அல்சர் இருப்பவர்கள் தேன் சேர்த்து வருவது அறிகுறியை மட்டுப்படுத்தும். 5 மில்லி தேன் உடன் 10 மில்லி தண்ணீர் கலந்து உணவுக்கு முன்பு குடித்து வரலாம்.

தேனில் இயற்கையான ஃப்ரீபயாடிக் உள்ளன. இது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

பசியின்மை பிரச்சனை இருந்தால் தேன் ஒரு டீஸ்பூன் எடுத்து ஒரு சிட்டிகை கருப்பு மிளகு சேர்த்து குழைத்து குடிக்கலாம்.

​மவுத் வாஷ் ஆக தேனை பயன்படுத்தலாமா?​

இலவங்கப்பட்டை தூள் கால் டீஸ்பூன் அளவு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து அதில் 5 மில்லி தேன் கலந்து வாய் கொப்புளிக்கலாம்.

தேன் ஈறுகளில் இரத்தக்கசிவை தடுக்கும் பண்பை கொண்டுள்ளது. ஈறுகள் பிரச்சனை இருக்கும் போது தேன், இஞ்சிச்சாறு, நெய், அனைத்தையும் சம அளவு கலந்து அதில் மிளகுத்தூள், இலவங்கப்பட்டை பொடி மற்றும் கல் உப்பு சேர்த்து குழைத்து வலி இருக்கும் இடத்தில் தடவி கொள்ளலாம். இது வலியை குறைக்க செய்யும்.

​உடல் கொழுப்பை குறைக்க தேன் உதவும்​

கொழுப்பு அளவை குறைக்க தேனையும் முயற்சிக்கலாம். தேன் கரோனரி தமனி நோய்க்கான ஆபத்தை குறைக்கிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் இதயத்தை வலுப்படுத்துகிறது. மேலும் மூளை ஆற்றலை வலுப்படுத்துகிறது. தேன் சேர்ப்பது உடலில் ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கிறது.

எப்படி எடுப்பது

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் தேன் ஒரு டீஸ்பூன் கலந்து குடித்து வருவது கொழுப்பை கரைக்க உதவும்.

​தூக்கமின்மைக்கு மருந்தாகும் தேன்​

தேன் தூக்கத்தை ஊக்குவிக்கும் பண்புகளை கொண்டுள்ளது. தேன் மெலடோனின் அதிகரிக்க செய்கிறது. இது தூக்கத்துக்கு உதவும் ஹார்மோன் ஆகும்.

எப்படி எடுப்பது

இரவு படுக்கைக்கு செல்லும் போது ஒரு டம்ளர் பாலில் தேன், மஞ்சள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து குடித்துவருவது தூக்கத்தை மேம்படுத்தும்.

​எடை குறைய உதவும் தேன்​

உடல் பருமன் நீரிழிவு முதல் மன அழுத்தம் வரை பல பாதிப்புகளை வர செய்யும். எடை குறைய உடற்பயிற்சி உணவு முறை பழக்கத்தை கடைப்பிடிக்கும் போது தேனையும் சேர்ப்பது உடல் எடை குறைய உதவும்.

எப்படி எடுப்பது

காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு உடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் நாளடைவில் எடை குறைவதை பார்க்கலாம்.

​சருமம் மற்றும் கூந்தலுக்கு தேனை எப்படி பயன்படுத்துவது?​

தேன் மற்றும் நீர்த்த எலுமிச்சை சாறு சேர்த்த ஃபேஸ் வாஷ் சருமத்துக்கு பயன்படுத்தலாம். இதை சரும நீரேற்றத்துக்கும் பயன்படுத்தலாம். சரும அரிக்கும் தோலழற்சி இருந்தால் தேன் மற்றும் இலவங்கப்பட்டை கலந்து மேற்பூச்சு கலவையாக பயன்படுத்தலாம். சரும காயங்கள், தீப்புண்கள், தடிப்புகள் மற்றும் சிராய்ப்புகளை விரைவாக குணப்படுத்தவும் தேன் உதவும்.

ஹேர் மாஸ்க் பயன்பாட்டில் கூந்தலின் பளபளப்பு தன்மையை அதிகரிக்க தேனை நீருடன் கலந்து பயன்படுத்தலாம்.

எழுத்தாளர் பற்றி
தனலட்சுமி
நான் தனலட்சுமி சுந்தர். ஊடகத்துறையில் 24 வருடங்கள் சோர்வில்லாத பயணம். லைஃப்ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் எழுதி வருகிறேன். மருத்துவ நிபுணர்களின் பேட்டிகள், கட்டுரைகள் மக்களுக்கு எடுத்து செல்வதில் விருப்பம் அதிகம். ஆன்மிகம், அரசியல் செய்திகள், சினிமா செய்திகளிலும் ஆர்வமும் அனுபவமும் உண்டு. தற்போது Times Internet நிறுவனத்தின் சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்