Please enable javascript.asta chiranjeevis signification : 8 சிரஞ்ஜீவிகள் இன்னும் பூமியில் வாழ்வதற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா ?

8 சிரஞ்ஜீவிகள் இன்னும் பூமியில் வாழ்வதற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா ?

Authored byமோகன பிரியா | Samayam Tamil 27 Jun 2024, 8:28 pm
Subscribe

ஒவ்வொரு யுகத்திலும் ஒருவர் சிரஞ்ஜீவி வரம் பெற்று பூமியில் நிரந்தரமாக வசித்து வருவதாக புராணங்கள் சொல்கின்றன. இந்த சிரஞ்ஜீவிகள் இப்போதும் பூமியில் மனிதர்களுடன், அருவமாக வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. இவர்கள் விஷ்ணு மற்றும் சிவனின் அவதாரங்களாக கருதப்படுகிறார்கள். இவர்கள் வீரம் மற்றும் ஞானத்தில் தெய்வங்களுக்கு இணையாக சொல்லப்படுகிறார்கள்.

asta chiranjeevis and immortals signification in kalki avatar
8 சிரஞ்ஜீவிகள் இன்னும் பூமியில் வாழ்வதற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா ?
புராணங்களில் எத்தனையே கதாபாத்திரங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட 8 பேருக்கு மட்டும் சிரஞ்ஜீவியாக இருக்கும் படி வரம் அளிக்கப்பட்டது எதற்காக? இவர்கள் கலியுகத்திலும் அருவமாக வாழ்ந்து வருவதற்கு என்ன நோக்கம்? அஷ்டசிரஞ்ஜீவிகளின் அவதாரத்தின் நோக்கம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

​அஷ்ட சிரஞ்ஜீவிகள் :

​அஷ்ட சிரஞ்ஜீவிகள் :

இந்து புராண கதைகளின்படி, அஷ்ட சிரஞ்ஜீவிகள் எனப்படும் எட்டு பேர் இன்னும் இந்த பூமியில் மனிதர்களுடன் வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. சிரஞ்ஜீவி என்ற சொல்லுக்கு அழிவில்லாதவன் அல்லது மரணம் இல்லாதவன் என்று பொருள். மூலிகைகளில் மரணம் இல்லாத வாழ்வை தரக்கூடிய வலிமை பெற்றது சஞ்ஜீவி மூலிகை என சொல்லப்படுகிறது. சஞ்ஜீவி என்ற சொல்லில் இருந்து தோன்றியதே சிரஞ்ஜீவி என்பதாகும். அனுமான், அஸ்வத்தாமன், மகாபலி, கிருபாச்சாரியார், விபீஷணர், வியாசர், பரசுராமர், மார்கண்டேயர் ஆகிய எட்டு பேரும் சிரஞ்ஜீவியாக வாழும் வரம் பெற்றவர்கள் என புராணங்கள் சொல்கின்றன.

சிரஞ்ஜீவிகளின் நோக்கம் :

சிரஞ்ஜீவிகளின் நோக்கம் :

இவர்களுக்கு சாதாரண மனிதர்களை போல் வயது மூப்போ, மரணமோ ஏற்படாது. இந்த அஷ்ட சிரஞ்ஜீவிகளும் கலியுகமான தற்போதும் இந்த பூமியில் வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இவர்கள் கலியுகம் முடிந்ததும் பூமியை விட்டு சென்று விடுவார்கள் என சொல்லப்படுகிறது. கலியுகம் முடிந்ததும் சென்று விடுவார்கள் என்றால் இத்தனை யுகங்களாக இவர்கள் எதற்காக இந்த பூமியில் வாழ வேண்டும்? இவர்கள் எதற்காக மரணம் இல்லாத வரம் பெற்று, இந்த பூமியில் இத்தனை காலம் வாழ வேண்டும் ? இவர்கள் இத்தனை காலம் வாழ்ந்ததன் நோக்கம் என்ன? என்ற கேள்விகள் அனைவரின் மனதிற்கும் ஏற்படும்.

​சிரஞ்ஜீவிகள் இருப்பதற்கு இது தான் காரணமா?

​சிரஞ்ஜீவிகள் இருப்பதற்கு இது தான் காரணமா?

இந்து மத நம்பிக்கைகளின் படி தற்போது கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது. பாவங்கள், அதர்மங்கள் ஆகியவற்றால் நிறைந்தது கலியுகம் என சொல்லப்படுகிறது. புராணங்களின் படி, தற்போது நடைபெறும் கலியுகத்தின் முடிவில் பெருமாள் தன்னுடைய பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்தை எடுக்க உள்ளதாகவும், அதர்மத்தை அழித்து மீண்டும் தர்மத்தை நிலைநாட்ட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது சத்ய யுகம் ஆரம்பமாகும் என சொல்லப்படுகிறது. கலியுகம் முடிந்து, சத்ய யுகம் துவங்குவதற்கு, கல்கி பகவானுக்கு உதவி செய்வதற்காக தான் இந்த அஷ்ட சிரஞ்ஜீவிகளும் தற்போது வரை பூமியில் வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. அஷ்டசிரஞ்ஜீவிகள் எட்டு பேரும் ஒவ்வொரு விதமான தனித்துவமான ஆற்றல்களை பெற்றவர்கள் என்பதால் இவர்கள் தங்களின் முழு சக்தியையும் கல்வி அவதாரத்தின் நோக்கம் நிறைவேற பயன்படுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.

யோகினி ஏகாதசி 2024 எப்போது ? இந்த நாளை மட்டும் மிஸ் பண்ணீடாதீங்க

​அஷ்ட சிரஞ்ஜீவிகளின் பலம் :

​அஷ்ட சிரஞ்ஜீவிகளின் பலம் :

* அனுமன் - ராம பக்திக்கு உதாரணமாக போற்றப்படும் அனுமான் உடல் வலிமையிலும், வீரத்திலும் சிறந்தவர்.

* அஸ்வத்தாமன் - சிவனிடம் பெற்ற வரத்தால் பிறந்தவர்கள் என்பதால் அவரின் குணங்களும், பலமும் மிக்கவர். இவர் சிவனின் 11 ருத்ர அவதாரங்களில் ஒருவராக கருதப்படுகிறது. கிருஷ்ணரின் சாபத்தால் மரணம் இல்லாத வாழ்வை பெற்றவர்.

* மகாபலி - பிரகலாதனின் பேரனனா மகாபலி, மகாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தின் போது, பெருமாளிடம் இருந்து சிரஞ்ஜீவி வரம் பெற்றவர். அது மட்டுமின்றி, அடுத்த யுகத்தில் சொர்க்கத்தை ஆட்சி செய்யும் இந்திர பதவி கிடைக்கும் வரத்தையும் பெற்றவர்.

* கிருபாச்சாரியார் - மகாபாரதத்தில் கெளரவர்கள் பக்கம் உயிர் பிழைத்த அஸ்வத்தாமன் மற்றும் கிருதவர்மா ஆகியோருடன் உயிர்பிழைத்தவர்களில் இவரும் ஒருவர். இவரும் கலியுகம் முடியும் வரை வாழும் வரம் பெற்றவர்.

ஒன்று கூடும் விஷ்ணுவின் அவதாரங்கள் :

ஒன்று கூடும் விஷ்ணுவின் அவதாரங்கள் :

* விபீஷணன் - ராவணனின் சகோதனான விபீஷணன், சீதையை மீட்க ராமருக்கு உதவியவர். ராம அவதாரம் முடிந்து திரும்பிய மகாவிஷ்ணு, பூமியை உண்மை மற்றும் தர்மத்தின் வழிநடத்துவதற்காக பூமிலேயே இருக்கும் படி கேட்டுக் கொண்டார்.

* வியாசர் - மகாபாரத காவியத்தை எழுதிய வியாசரும், மகாவிஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுகிறார். ஞானம், கல்வியை வழிநடத்துவதற்காக இப்போதும் இவர் பூமியில் வசிப்பதாக நம்பப்படுகிறது.

* பரசுராமர் - மகாவிஷ்ணுவின் 6வது அவதாரமான பரசுராமர், கல்கியின் குருவாக இருப்பார் என சொல்லப்படுகிறது. இவரும் கலியுகம் முடியும் சமயத்தில் பூமியில் மீண்டும் தோன்றுவார் என சொல்லப்படுகிறது.

* மார்கண்டேயர் - இவர் சிவனிடம் இருந்து சிரஞ்ஜீவி வரம் பெற்றவர். சிவனிடம் வரம் பெற்று பிறந்தவர் என்பதால் சிவனின் பரிபூரண அருளை பெற்றவர் இவர்.

மோகன பிரியா
எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்