Please enable javascript.kohli finishes above jadeja in t20i all rounder rankings: ‘ஆல்ரவுண்டர் தரவரிசை’.. ஜடேஜாவை முந்திய கோலி: தரமான சம்பவம்.. எப்படி இது சாத்தியமானது? ஷாக் தகவல்!

‘ஆல்ரவுண்டர் தரவரிசை’.. ஜடேஜாவை முந்திய கோலி: தரமான சம்பவம்.. எப்படி இது சாத்தியமானது? ஷாக் தகவல்!

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 6 Jul 2024, 8:28 am
Subscribe

ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில், ரவீந்திர ஜடேஜாவை கோலி பின்னுக்கு தள்ளினார்.

virat kohli finishes above ravindra jadeja in t20i all rounder rankings
‘ஆல்ரவுண்டர் தரவரிசை’.. ஜடேஜாவை முந்திய கோலி: தரமான சம்பவம்.. எப்படி இது சாத்தியமானது? ஷாக் தகவல்!
டி20 உலகக் கோப்பை 2024 தொடர் முடிந்தப் பிறகு வெளியான ஐசிசி தவரிசையில், ரவீந்திர ஜடேஜாவை விராட் கோலி பின்னுக்கு தள்ளினார்.

பெஸ்ட் ஆல்-ரவுண்டர்:

பெஸ்ட் ஆல்-ரவுண்டர்:

உலக அளவில் தலை சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ரவீந்திர ஜடேஜாவும் ஒருவராக திகழ்ந்து வருகிறார். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்றிலும் அதிரடி காட்டி வருகிறார்.

சமீப காலமாக:

சமீப காலமாக:

இந்நிலையில், சமீப காலமாக ரவீந்திர ஜடேஜாவின் பார்ம், சற்று சரியில்லை. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சொதப்பி வருகிறார். பீல்டிங்கிலும் அவர் தடுமாறி வருவது, இந்திய அணிக்கு கவலையளிக்கும் விஷயமாகதான் பார்க்கப்படுகிறது.

ஓய்வு அறிவிப்பு:

ஓய்வு அறிவிப்பு:

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத ரவீந்திர ஜடேஜா, இந்திய டி20 அணியில் இருந்து ஓய்வு அறிவித்துவிட்டார். ஒருவேளை அடுத்து டெஸ்டிலும் சொதப்பினால், அடுத்த வருடத்திற்குள் ஒரே அடியாக ஓரங்கட்டவும் வாய்ப்புள்ளது.

முந்திய கோலி:

முந்திய கோலி:

இந்நிலையில், டி20 உலகக் கோப்பை முடிந்தப் பிறகு வெளியான ஐசிசி டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஜடேஜாவை விராட் கோலி பின்னுக்கு தள்ளியுள்ளார். கோலி 79ஆவது இடத்தை பிடித்துள்ள நிலையில், ஜடேஜாவுக்கு 86ஆவது இடம்தான் கிடைத்துள்ளது.

கோலியின் பந்துவீச்சு ரெக்கார்ட்:

கோலியின் பந்துவீச்சு ரெக்கார்ட்:

விராட் கோலி மொத்தமே 13 டி20 இன்னிங்ஸ்களில்தான் பந்துவீசினார். அதில், 4 விக்கெட்கள் கிடைத்தது. சராசரி 51ஆக உள்ளது. எகனாமி 8.05ஆக இருக்கிறது.

ஜடேஜா பந்துவீச்சு ரெக்கார்ட்:

ஜடேஜா பந்துவீச்சு ரெக்கார்ட்:

ஜடேஜா மொத்தம் 71 இன்னிங்ஸ்களில் பந்துவீசி, அதில் 29.85 சராசரி, 7.13 எகனாமியில் 54 விக்கெட்களை கைப்பற்றி இருக்கிறார். இருப்பினும், விராட் கோலி 4188 ரன்களை அடித்திருப்பதால், அவரது ஆல்-ரவுண்டர் சராசரி அதிகரித்துள்ளது.

எப்பதி சாத்தியமானது:

எப்பதி சாத்தியமானது:

சர்வதேச டி20-யில் விராட் கோலி, 8.05 எகமானியில் பந்துவீசி, 4188 ரன்களை அடித்துள்ளார். அதேபோல், ஜடேஜா 54 விக்கெட்களை எடுத்திருந்தாலும், 515 ரன்களைதான் எடுத்துள்ளார். இதனால்தான், தரவரிசையில் ஜடேஜாவிட கோலிக்கு முன்னிலை கிடைத்துள்ளது.

இது மாறாது:

இது மாறாது:

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா இருவரும் ஓய்வு அறிவித்துவிட்டதால், டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஜடேஜாவைவிட, விராட் கோலிதான் பெஸ்ட் ஆல்-ரவுண்டர் என்பதை, இனி மாற்றவே முடியாது.

மதுரை சமயன்
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்