Please enable javascript.Ronaldo Retirement: இதுதான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கடைசி போட்டியா ? ஓபனாக பேசிய பயிற்சியாளர்..! - will cristiano ronaldo retire after euro 2024 quarterfinal loss - Samayam Tamil

Ronaldo Retirement: இதுதான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கடைசி போட்டியா ? ஓபனாக பேசிய பயிற்சியாளர்..!

Authored byS வினோத்குமார் | Samayam Tamil 6 Jul 2024, 4:12 pm
Subscribe

கிறிஸ்டியானோ ரொனால்டோ யூரோ 2024 தொடருடன் விடைபெறுவாரா என ரசிகர்கள் கேள்விகேட்டு வருகின்றனர்

ஹைலைட்ஸ்:

  • ரொனால்டோ ஓய்வு பெருகிறாரா ?
  • பிரான்சுடன் தோல்வி
  • போர்த்துகீஸ் அணி வெளியேற்றம்
  • ரசிகர்கள் விமர்சனம்
ரொனால்டோ
39 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்த்துகீஸ் அணிக்கு இனி விளையாடுவாரா ? இல்லையா ? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகின்றது. ஏனென்றால் நேற்றைக்கு நடைபெற்ற யூரோ 2024 காலிறுதி போட்டியில் போர்த்துகீஸ் அணி பிரான்சிடம் தோல்வியை சந்தித்தது.

இதையடுத்து யூரோ 2024 இல் பிரான்சிடம் தோற்ற பிறகு கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் பெப்பே ஆகியோரின் சர்வதேச எதிர்காலம் குறித்து "தனிப்பட்ட முடிவுகள் எதுவும்" எடுக்கப்படவில்லை என்று போர்ச்சுகல் மேலாளர் ராபர்டோ மார்டினெஸ் கூறுகிறார். ரொனால்டோவை போல பெப்பேவும் தன் கரியரில் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றார்.


Cristiano Ronaldo: இப்படி மிஸ் பண்ணிட்டேனே..கதறி அழுத ரொனால்டோ..கடைசியில் கொடுத்த தரமான கம்பேக்..!

41 வயதாகும் பெப்பே ஐரோப்பிய சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக வயதுடைய வீரர் என்ற பெருமையை பெற்றார். இவர்கள் குறித்து பேசிய மார்டினெஸ், "Pepe போர்த்துகீசிய கால்பந்தில் ஒரு முன்மாதிரி என்றார். மேலும்இரண்டு வீரர்களும் போர்ச்சுகல் அணிக்காக கடைசியாக விளையாடினார்களா என்று கேட்டதற்கு, மார்டினெஸ் கூறியது, நாங்கள் இன்னும் இந்த தோல்வியில் இருந்தே மீண்டும் வரவில்லை. இதிலிருந்து மீள சில காலம் ஆகும்.


எனவே இப்போதைக்கு நாங்கள் எதுவும் சொல்லமுடியாது. மேலும் இந்த கட்டத்தில் தனிப்பட்ட முடிவுகள் எதுவும் எடுக்கமுடியாது என்றார் மார்டினெஸ். இந்நிலையில் இந்த யூரோ 2024 தொடர் ரொனால்டோவிற்கு ஒரு சோதனையான தொடராகவே அமைந்தது. இந்த தொடரில் ரொனால்டோ ஒரு கோல் கூட அடிக்கவில்லை. மேலும் அவரின் ஆட்டமும் முன்பு போல இல்லை என்ற விமர்சனமும் எழுந்தது.


எனவே அணியில் அவரின் இடம் கேள்விக்குறியாகுமா என்றும் விமர்சிக்கப்பட்டது. அவர் மீண்டும் தனது நாட்டிற்காக விளையாடுவாரா என்பதில் சந்தேகம் உள்ளது. எனவே தான் ரொனால்டோ போர்த்துக்கல் அணிக்காக ஆடும் கடைசி ஆட்டம் இதுவாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் முதல் விமர்சகர்கள் வரை கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இந்நிலையில் யூரோ 2024 இல் ரொனால்டோவின் புள்ளிவிவரங்கள் அவ்வளவு நன்றாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ரொனால்டோ ஒரு பெரிய சர்வதேசப் போட்டியில் கோல் அடிக்கத் தவறியது இதுவே முதல் முறை. மேலும் யூரோ 2024 இல் போர்ச்சுகலின் ஐந்து ஆட்டங்களில் அவர் 23 ஷாட்களை அடித்தார் - ஆனாலும் அதையெல்லாம் கோலாக மாற்ற தவறினார்.


உலகிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் முதல் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் வரை பல சாதனைகளை நிகழ்த்தி காட்டியிருக்கின்றார் ரொனால்டோ. ஆனால் இந்த யூரோ தொடர் அவர் மறக்க வேண்டிய தொடராக மாறியுள்ளது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
S  வினோத்குமார்
எழுத்தாளர் பற்றி
S வினோத்குமார்
வினோத் குமார். நான் பொறியியல் மற்றும் ஊடகவியல் பட்டப்படிப்பை படித்துள்ளேன்.கடந்த நான்கு ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகினறேன். சினிமா மீது அதீத ஆர்வம் கொண்ட நான் தற்போது times internet சமயம் தமிழில் சினிமா தொடர்பான விஷயங்களை எழுதும் sub editor ஆக பணியாற்றி வருகின்றேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்