Please enable javascript.shruthihaasan role in coolie:ரஜினியின் கூலி திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் ரோல் இதுதானாம்..சூப்பரா இருக்குமே..!

shruthihaasan role in coolie: ரஜினியின் கூலி திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் ரோல் இதுதானாம்..சூப்பரா இருக்குமே..!

Authored byS வினோத்குமார் | Samayam Tamil 6 Jul 2024, 10:04 am
Subscribe

ரஜினியின் நடிப்பில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் கதாபாத்திரம் பற்றி வெளியான தகவல்

ஹைலைட்ஸ்:

  • ரஜினி நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் கூலி
  • நண்பராக நடிக்கும் சத்யராஜ்
  • ஸ்ருதிஹாசனின் ரோல்
  • வெளியான அப்டேட்
ரஜினியின் கூலி திரைப்படம்
ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஞானவேல் இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதையடுத்து அக்டோபர் மாதம் இப்படம் திரையில் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆயுத பூஜைக்கு வேட்டையன் வெளியாகுமா ? இல்லை தீபாவளிக்கு வெளியாகுமா ? என விரைவில் தெரியவரும். இந்நிலையில் ரஜினி தன் அடுத்த படமான கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பில் தற்போது இணைந்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

SJ Suryah about Good Bad Ugly: குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கிறேனா ?அப்டேட் கொடுத்த எஸ்.ஜெ சூர்யா..!

லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினி கூட்டணி முதல் முறையாக கூலி படத்தின் மூலம் இணைந்திருப்பது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏப்ரல் மாதம் கூலி படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி செம வைரலானதை தொடர்ந்து இப்படத்தின் மீதான ஹைப் மேலும் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் ரஜினியின் கூலி திரைப்படத்தில் பிரபல நடிகர் சத்யராஜ் நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. சத்யராஜும் இதனை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தினார். ஆனால் சத்யராஜ் கூலி திரைப்படத்தில் வில்லனாக நடிக்கவில்லை என்றும், ரஜினியின் நண்பராக நடிக்கின்றார் என்றும் ஒரு தகவல் வெளியாகின. இதைத்தொடர்ந்து மிஸ்டர் பாரத் என்ற படத்திற்கு பிறகு 38 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினியும் சத்யராஜும் கூலி படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.


சத்யராஜை தொடர்ந்து கமலின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் கூலி திரைப்படத்தில் இணைந்துள்ளார். இதனை ஸ்ருதிஹாசன் அதிகாரபூர்வமாகவே அறிவித்துள்ளார். கூலி படப்பிடிப்பில் தான் இணைந்திருப்பதாக சோஷியல் மீடியாவில் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டார் ஸ்ருதிஹாசன். இதையடுத்து அவர் கூலி படத்தில் நடிப்பது உறுதியானது.


இந்நிலையில் கூலி திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் கதாபாத்திரம் பற்றி தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி கூலி திரைப்படத்தில் ரஜினியின் மகளாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறாராம். கமலின் மகளான ஸ்ருதிஹாசன் திரையில் ரஜினியின் மகளாக நடிப்பதை காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.



இந்நிலையில் கூலி திரைப்படம் லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களை போல இருக்காது என்றும், முற்றிலும் மாறுபட்ட வித்யாசமான ஒரு படமாக இருக்கும் என்றும் தகவல்கள் வந்தன. ஆனால் கூலி டைட்டில் டீசரை பார்க்கும்போது இது முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் உருவாகும் படமாகத்தான் இருக்கும் என்று தெரிகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
S  வினோத்குமார்
எழுத்தாளர் பற்றி
S வினோத்குமார்
வினோத் குமார். நான் பொறியியல் மற்றும் ஊடகவியல் பட்டப்படிப்பை படித்துள்ளேன்.கடந்த நான்கு ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகினறேன். சினிமா மீது அதீத ஆர்வம் கொண்ட நான் தற்போது times internet சமயம் தமிழில் சினிமா தொடர்பான விஷயங்களை எழுதும் sub editor ஆக பணியாற்றி வருகின்றேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்