Please enable javascript.Censor board about indian 2:இந்தியன் 2 படத்தை பார்த்துவிட்டு சென்சார் போர்டு சொன்ன விஷயம்..சந்தோஷமாக பகிர்ந்துகொண்ட கமல்..!

Kamal about indian 2: இந்தியன் 2 படத்தை பார்த்துவிட்டு சென்சார் போர்டு சொன்ன விஷயம்..சந்தோஷமாக பகிர்ந்துகொண்ட கமல்..!

Authored byS வினோத்குமார் | Samayam Tamil 6 Jul 2024, 2:35 pm
Subscribe

கமலின் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தை பற்றி சென்சார் போர்டு சொன்ன விஷயம்

ஹைலைட்ஸ்:

  • கமலின் இந்தியன் 2
  • இந்தியன் 2 ப்ரோமோஷன்ஸ்
  • சென்சார் போர்டு சொன்ன தகவல்
  • இந்தியன் 2 ரிலீஸ்
கமலின் இந்தியன் 2
கமல்ஹாசனின் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் தயாராகி வருகின்றது. ஷங்கரின் இயக்கத்தில் கமலின் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தான் இந்தியன் 2. லைகா இப்படத்தை தயாரிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பல வருட போராட்டத்திற்கு பிறகு இப்படம் ஒருவழியாக ரிலீசுக்கு தயாராகியிருக்கின்றது.

கடைசியாக ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி நடித்த 2 .0 திரைப்படம் தான் வெளியானது. இப்படம் வெளியாகி ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அதைப்போல கமலின் திரைப்படம் வெளியாகியுள்ள இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் கமல் மற்றும் ஷங்கரின் காம்போவில் ஒரு படம் வெளியாவதால் ரசிகர்கள் இந்தியன் 2 திரைப்படத்தை ஆவலாக எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர்.


Indian 2 day one collection: கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு..சாதனை படைக்க தயாராகும் உலகநாயகன்..!

கடந்த மாதம் இந்தியன் 2 திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு ஹைப் இல்லை. எனவே இந்தியன் 2 படத்தின் ட்ரைலரும், பாடல்களும் வெளியான நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது பலமடங்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஜூன் மாதம் வெளியாக இருந்த இந்தியன் 2 திரைப்படம் தற்போது ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.


இதையொட்டி படத்தின் ப்ரோமோஷன் வேல்ஸிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. கமல், ஷங்கர் உட்பட பலரும் இந்தியன் 2 திரைப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிசியாக இருக்கின்றனர். இப்படம் வெளியாக இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால் படத்தின் ப்ரீ புக்கிங் அமோகமாக நடைபெற்று வருகின்றது. முதல் நாளில் மட்டும் இந்தியன் 2 திரைப்படம் 80 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

படம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் இந்தியன் 2 வசூலில் மிகப்பெரிய சாதனையை படைக்கும் என்றே எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரத்தில் இருந்து வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஈடுபட்டு இருந்த கமல் இந்தியன் 2 படத்தை பற்றி சென்சார் போர்டு சொன்ன விஷயம் பற்றி பகிர்ந்துள்ளார். சென்சார் போர்டு இந்தியன் 2 படத்தை பார்த்துவிட்டு மிகவும் பாராட்டினார்களாம்.

பொதுவாக சென்சார் போர்டு ஒரு படத்தை பற்றி பெரிதும் பேசமாட்டார்கள். ஆனால் இந்தியன் 2 படத்தை பற்றி பல விஷயங்களை பேசி படத்தை பாராட்டினார்கள்.எனவே கண்டிப்பாக இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.




இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகியுள்ளது. இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரு பாகங்களாக இப்படம் ரிலீஸாகவுள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தை விட இந்தியன் 3 படத்திற்காக நான் ஆவலாக காத்துகொண்டு இருக்கின்றேன் என கமல் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
S  வினோத்குமார்
எழுத்தாளர் பற்றி
S வினோத்குமார்
வினோத் குமார். நான் பொறியியல் மற்றும் ஊடகவியல் பட்டப்படிப்பை படித்துள்ளேன்.கடந்த நான்கு ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகினறேன். சினிமா மீது அதீத ஆர்வம் கொண்ட நான் தற்போது times internet சமயம் தமிழில் சினிமா தொடர்பான விஷயங்களை எழுதும் sub editor ஆக பணியாற்றி வருகின்றேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்