» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

புது டில்லியில் பொதுவெளி புறம்போக்கு நிலங்களின் பாதுகாப்பு குறித்த மாநாடு

திங்கள் 2, செப்டம்பர் 2024 3:36:11 PM (IST)

புது டில்லியில் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற பொதுவெளி/புறம்போக்கு பாதுகாப்பு  குறித்த மாநாட்டில் (Commons Convening), 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். 

பொதுவெளி பாதுகாப்பு, அதன் நிர்வாகம், இந்தியாவின் வளங்களைப் பங்கிட்டு பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளைத் தொடங்க பல்வேறு வழிமுறைகள் பற்றிய உரையாடல்கள் இங்கு நிகழ்ந்தன. இந்த மாநாடு சமூகத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், வணிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஊடக வல்லுநர்கள் உட்பட பல்வேறு பங்குதாரர்களை ஒன்றிணைத்திருந்தது.

இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் தோராயமாக கால் பகுதி, அதாவது 205 மில்லியன் ஏக்கர் நிலமானது சமூக காடுகள், மேய்ச்சல் நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை உள்ளடக்கிய ‘பொதுவெளி/புறம்போக்கு’ நிலமாகும். இந்த பொதுவெளி 350 மில்லியனுக்கும் அதிகமான கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரமாகிறது. மேலும் ஆண்டுதோறும் 90.5 பில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ. 6.6 லட்சம் கோடி) மதிப்புள்ள சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளை வழங்குகிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்த வளங்கள் ஆண்டுக்கு 4% என்ற விகிதத்தில் வேகமாக சிதைந்து வருகின்றன.

நடைபெற்ற பொதுவெளி மாநாடு பொதுவெளிகளின் முக்கியத்துவத்தின் மீது கவனம் செலுத்திய அதேநேரம்; உள்ளூர் சுய-ஆளுகை, அதிகார பரவலாக்கம் மற்றும் கிராமப்புற-நகர்ப்புற தொடர்ச்சி போன்ற பலதரப்பட்ட தளங்களோடு  பொதுவெளி நிர்வாகத்தை இணைப்பதன் மூலம் கூட்டு நடவடிக்கைக்கு ஊக்கமளித்துள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் விரிவடையும் சமூக இடைவெளிகள் என்ற இரட்டை நெருக்கடிகளை சமூகம் எதிர்கொள்ளும் இந்தநேரத்தில், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, மீள்வாழ்வு மற்றும் சமூக நீதிக்கான தளமாக பொதுவெளி செயல்பட முடியும் என்பது மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டது. 

37 தேர்ந்தெடுக்கப்பட்ட அமர்வுகளில் பங்கேற்பாளர்கள் உணவு அமைப்புகள், கிராமப்புற வருமானங்கள், நன்னீர்-சூழல் அமைப்புகள் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு ஆகியவற்றில் பொதுவெளிகளின் முக்கிய பங்கை ஆராய்ந்தனர். உரையாடல் மற்றும் ஒத்துழைப்பிற்கான ஒரு மாபெரும் தளமாக செயல்பட்டு; பல்வேறு பங்குதாரர்களை ஒன்றிணைக்கவும், நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்ளவும், ஒருங்கிணைந்த முன்முயற்சிகளை ஊக்குவிக்கவும், சவால்களை எதிர்கொள்ளவும், இந்தியாவின் பொதுவெளிகளுக்கு பயனுள்ள தீர்வுகளை உருவாக்கவும் உதவும்வண்ணம் இந்த மாநாடு நடைபெற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory