உள்ளடக்கத்துக்குச் செல்

காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''காஞ்சிபுரம் முத்தீசுவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

04:24, 17 பெப்பிரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் (கருடேசம்) என்று அறியப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். மேலும் சிவனடியாரைப்போல் வந்த இறைவனின் ஆடையை திருக்குறிப்புத் தொண்டர் துவைத்தளித்த திருக்குளம், கோயிலின் அகத்திலுள்ள இக்கோயில் பற்றிய குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் காணப்படுகிறது.[1]

இறைவர், வழிபட்டோர்

தல வரலாறு

கருடன் இவ்விறைவனை வழிபட்டு, தன்னை வருத்திய சத்துருவின் புதல்வர்களாகிய பாம்புகளை அழிக்கும் வரத்தைப் பெற்றதாக சொல்லப்படுகிறது. [2]

  • கருடன் வழிபட்ட கருடேசுவரர் எனும் தனி சந்நிதி இக்கோயில் உட்புறத்தில் உள்ளது.
  • கருடன் வழிபட்டமையால் இக்கோயில் கருடேசம் எனவும் வழங்கப்படுகிறது.
  • திருக்குறிப்புத் தொண்டர் முத்திபேறடைந்த பெரும்பதியாகவும் குறிப்பிடப்படுகிறது.

அமைவிடம்

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் நடுப்பகுதியில் அடிசன் பேட்டை காந்தி சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் பிரதான சாலையின் 2-வது கிலோமீட்டர் தொலைவில் இத்தலமுள்ளது.[3]

மேற்கோள்கள்

புற இணைப்புகள்