உள்ளடக்கத்துக்குச் செல்

சங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

  • சங்கம், பெயர்ச்சொல்.
  1. சேர்க்கை. (சூடாமணி நிகண்டு)
  2. அன்பு
    (எ. கா.) சங்கந் தருமுத்தி (திருக்கோ. 85).
  3. புணர்ச்சி.
    (எ. கா.) சங்கமுண்கிகள் (திருப்பு. 556).
  4. ஒருநதி வேறொரு நதியுடனேனும் கடலோடேனும் கூடுமிடம் (யாழ். அக. )
  5. கூட்டம்
    (எ. கா.) சங்கமாகி வெங்கணை வீக்க மொடு (பெருங். மகத. 17, 38).
  6. சபை
    (எ. கா.) புலம்பரிச் சங்கம் பொருளொடு முழங்க (மணி. 7, 114).
  7. புலவர் (திவா.)
  8. பாண்டியர் ஆதரவுபெற்று விளங்கிய தலைச்சங்கம், இடைச் சங்கம், கடைச்சங்கம் என்ற முச்சங்கங்கள்
    (எ. கா.) எம்மைப் பவந்தீர்ப்பவர் சங்கமிருந்தது (பெரியபு. மூர்த்திநா.)
  9. சைனபௌத்தர்களின் சங்கம்

மொழிபெயர்ப்புகள்

  • ஆங்கிலம்
  1. Union, junction, contact
  2. Friendship, love, attachment
  3. Sexual intercourse
  4. River-mouth; confluence of rivers
  5. Mustering, gathering
  6. Society, assembly, council, senate, academy
  7. Literati, poets
  8. Learned assemblies or academies of ancient times patronised by Pāṇḍya kings, three in number, viz., talai-c-caṅkam, iṭai-c-caṅkam, kaṭai-c-caṅkam
  9. Fraternity of monks among Buddhists and Jains


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சங்கம்&oldid=1276319" இலிருந்து மீள்விக்கப்பட்டது