Please enable javascript.​இன்றைய ராசி பலன் 06 ஜூலை 2024 - daily rasi palan 6 july 2024 check today astrology prediction mithunam rasi will get rove - Samayam Tamil

​இன்றைய ராசி பலன் 06 ஜூலை 2024

Authored byஅரவிந்தன் | Samayam Tamil 6 Jul 2024, 7:48 pm
Subscribe

இன்றைய ராசி பலனை (ஜூலை 6, 2024 சனிக் கிழமை) இன்று சந்திரன் பகவான் மிதுனம் ராசியில் திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினம். இன்று விருச்சிக ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.

daily rasi palan 6 july 2024 check today astrology prediction mithunam rasi will get rove
​இன்றைய ராசி பலன் 06 ஜூலை 2024
இன்றைய ராசிபலன் ஜூலை 6, 2024, குரோதி வருடம் ஆனி 22, சனிக் கிழமை, சந்திரன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிக ராசியில் உள்ள அனுஷம், கேட்டை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று அலைச்சல் நிறைந்ததாக இருக்கும். இன்று பிள்ளைகளின் கல்வி தொடர்பாக கவலை ஏற்படும். இன்று வீட்டு தேவைகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். காதல் உறவில் சற்று மன அழுத்தம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். இன்று மன உறுதியுடன் செய்யக்கூடிய எந்த ஒரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப வியாபாரம் தொடர்பான விஷயத்தில், பெரியவர்களின் ஆலோசனை சிறப்பான பலனை தரும். தொழிலதிபர்களுக்கு நிதி ஆதாயம் கிடைக்கக்கூடிய நாள். உங்கள் வேலையில் சிறப்பான வெற்றி கிடைக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். பணியிடத்தில் அனைவரின் ஆதரவைப் பெறுவீர்கள்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று புதிய வேலைகளை தொடங்கினால் அது நிச்சயம் நல்ல வெற்றியை தரும். இன்று குடும்பத் தகராறுகள் தீரக்கூடிய நாள். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்வில் மரியாதை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பு, விளையாட்டு போட்டிகளில் நல்ல வெற்றியைப் பெறலாம். இன்று தொழிலை மாற்றம் செய்ய சாதகமான நாள் இல்லை.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் இனிமையான பலன் கிடைக்கும். வேலை தொடர்பாக வெளியே செல்லும் வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் உடல் நிலையில் எச்சரிக்கையாக இருக்கவும். பணியிடத்தில் புதிய திட்டங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டிய நாள்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத் தேவைகளை நிறைவேற்றும் விஷயத்தில் அதிக செலவுகள் ஏற்படும். இன்று உங்களின் நிதி நிலைமை மனதில் வைத்து செலவு செய்யவும். தொழில் அதிபர்களுக்கு பண தேவை அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாளாக அமையும்.. இன்று ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புள்ளது.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் வேலைகள் சம்பந்தமாக மன உளைச்சல் ஏற்படும். வேலை வாய்ப்பு தேடுபவர்களுக்கு மாற்றங்கள் ஏற்படும். முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சச்சரவுகள், மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களின் படிப்பில் முன்னேற்றம் எதிர்பார்க்கலாம்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று பெற்றோருடன் புனித யாத்திரை செல்ல திட்டமிடுவீர்கள். மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சொத்து சம்பந்தமான தகராறுகள் தீரும். வேலை மற்றும் பணியிடத்தில் பிறரின் முழு ஆதரவை பெறுவீர்கள். முக்கிய குடும்ப பொறுப்புகளை செய்து முடித்து மனநிறைவு அடைவீர்கள்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று பிள்ளைகள் மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்ப சொத்துக்கள் ஆதாயத்தை தரும். புதிய வேலை, தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் மூலம் ஆதரவு கிடைக்கும். வணிகத்தை மேம்படுத்த சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இன்று சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை கவலை தரும். இன்று அலைச்சல்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இன்று குடும்ப பொறுப்புகளால் மன சோர்வு ஏற்படும். பழைய நண்பர்களே சந்தித்து மகிழ்வீர்கள். இன்று உங்களின் வேலை, வியாபாரம் தொடர்பான விஷயத்தில் எதிரிகளை சமாளிக்க வேண்டியது இருக்கும்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தைகள் தொடர்பான விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். அரசாங்க வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் சில தடைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். தொழிலில் புதிய வேகத்துடன் செயல்படுவீர்கள். இன்று யாருடனும் விவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று பணம் கொடுக்கல்கள், வாங்கலையே தவிர்ப்பது நல்லது. உங்களின் பணி சூழல் சாதகமாக இருக்கும். சமூகப் பணிகளில் புகழ் அதிகரிக்கும். தந்தையுடன் உறவு மேம்படும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரம் கழிக்க வாய்ப்புள்ளது. இன்று உங்கள் வேலையில் எதிரிகளை சிறப்பாக சமாளிக்க முடியும். குடும்ப சூழ்நிலை இனிமையாக இருக்கும்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தொழில் செய்யக்கூடியவர்கள், சகோதரர்களின் ஆதரவை பெறுவீர்கள். நிதிநிலை வலுப்படும். திருமண வாழ்க்கையில் சண்டை சச்சரவுகளால் மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப தேவைகளை நிறைவேற்றுவதில் அதிக செலவுகள் ஏற்படும். இன்று குடும்ப பெரியவர்களின் ஆதரவு உங்கள் குடும்ப சூழலை மேம்படுத்த உதவும்.

அரவிந்தன்
எழுத்தாளர் பற்றி
அரவிந்தன்
நான் அரவிந்தன் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 12 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஜோதிடம், ஆன்மிகம் தொடர்பான செய்திகளை எழுதிக் கொண்டிருக்கும் நான், விளையாட்டு, நடப்பு நிகழ்வு, செய்திகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Principal Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்