Please enable javascript.Loyal Partner In Marriage Life- விசுவாசமான வாழ்க்கைத் துணையாக இருக்கும் ராசிகள்… இவர்களால் வாழ்க்கை இனிமையாகும்

நம்ம கண்ணே பட்டுடும் : விசுவாசமான வாழ்க்கைத் துணையாக இருக்கும் ராசிகள்… இவர்களால் வாழ்க்கை இனிமையாகும்

Authored byஅரவிந்தன் | Samayam Tamil 22 Jun 2024, 12:46 pm
Subscribe

திருமண வாழ்க்கையில் தன் துணை மீது மிகவும் விசுவாசத்துடன் செயல்படக்கூடிய ராசிகள் யார், அவர்களின் நேர்மையான செயல்பாடு எப்படி இருக்கும்?, அதன் மூலம் வாழ்க்கையில் பெறக்கூடிய இனிமையான பலன்கள் என்ன என தெரிந்து கொள்வோம்.

these zodiac sign partner always loyal and honest in marriage life
நம்ம கண்ணே பட்டுடும் : விசுவாசமான வாழ்க்கைத் துணையாக இருக்கும் ராசிகள்… இவர்களால் வாழ்க்கை இனிமையாகும்
இரண்டு மனங்கள் சேரக்கூடிய திருமணத்தில், இருவரின் மனமும் விட்டுக்கொடுத்து, ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே அந்த வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். அதிலும் சிலரின் விசுவாசமான செயல்பாடு இந்த வாழ்க்கையை வசந்தமாக்கும். அப்படி திருமண வாழ்க்கையில் மிகவும் விசுவாசமாக செயல்படக்கூடிய வாழ்க்கைத் துணை ராசிகள் யார் என தெரிந்து கொள்வோம்.

திருமண வாழ்க்கையில் விசுவாசம் அவசியமா?

திருமண வாழ்க்கையில் விசுவாசம் அவசியமா?

திருமண பந்தத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட செயல்படுவது மட்டுமல்லாமல், ஒருவர் மீது ஒருவர் விசுவாசமாகவும் நடந்து கொள்வது அவசியம். அதன் மூலமாக மட்டுமே வாழ்க்கையில் வரக்கூடிய கடினமான தருணங்கள், மகிழ்ச்சியான நேரங்கள் என இரண்டிலும் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் கடக்க முடியும். யாரேனும் ஒருவர் திருமண வாழ்க்கையில் நம்பிக்கை உடைத்தால், அதனால் மன கவலையும், நிறைவேற்று சந்தேகங்களும் எழ ஆரம்பிக்கும். திருமண வாழ்க்கையில் மிகச் சிறப்பான விசுவாசிகளாகச் செயல்படக்கூடிய ராசிகள்.


உங்களுக்கு காதல் திருமணமா?நிச்சயிக்கப்பட்ட திருமணமா? பிறந்த தேதியை வைத்தே தெரிஞ்சுக்கலாம்

ரிஷப ராசி

ரிஷப ராசி

ரிஷப ராசியை சேர்ந்தவர்கள் தங்களின் வாழ்க்கையில் மிகவும் நேர்மையான அணுகுமுறையுடன் வாழக்கூடியவர்கள். இதன் காரணமாக தங்களின் வாழ்க்கைத் துணையுடன் எப்பொழுதும் ஒரு நம்பிக்கை உணர்வை தரக்கூடியவர்கள். தன் துணையை அன்பாக பார்த்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், உன் வாழ்க்கையில் எந்த தருணத்திலும் நான் இருப்பேன், என உறுதியையும், விசுவாசத்தையும் தரக்கூடிய நபர்களாக இருப்பார்கள். மேலும் இவர்களுக்கு இயற்கையாகவே தன் துணையுடன் ரொமான்ஸ், காதல் என இருப்பார்கள்.

மரண ரகசியம்: ராசிப்படி ஒருவர் எப்படி மரணம் அடைவார் தெரியுமா? திடமான மனம் கொண்டவர்கள் மட்டும் படிக்கவும்

கடக ராசி

கடக ராசி

கடக ராசியினர் பொதுவாகவே பிறரிடம் அன்பும், அக்கறையுடன் செயல்படக்கூடியவர்கள். இவர்கள் தங்களின் வாழ்க்கையில் எந்தவித கஷ்டங்கள் மற்றும் மன அழுத்தமான சூழல் இருந்தாலும், தன்னுடைய துணையின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியில் எந்த வித குறையும் வைக்க மாட்டார்கள்.
தன் துணை ஏதேனும் ஒரு கோரிக்கை வைத்தாலும் அதை சரியான நேரத்தில் நிறைவேற்றுவார்கள். கடக ராசி நேயத்தின் வாழ்க்கை துணை மீது அன்பும், நம்பிக்கையும், பரஸ்பரம் மரியாதையும் கொடுத்து அவர்களின் உணர்வுடன் பின்னிப்பிணைந்து இருப்பார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். முக்கிய முடிவுகளை கலந்த ஆலோசித்து எடுப்பார்கள்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசி

விருச்சிக ராசி சேர்ந்தவர்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் தன் துணை மீது எப்போதும் விசுவாசமாக இருப்பார்கள். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி துணை மீது காட்டக்கூடிய அவர்களின் அக்கறையானது, துணையின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும்.


இயற்கையில் விருச்சிக ராசியினர் கரடு முரடாக, மர்மமான நபராக தோன்றினாலும், தன் துணையின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்ய தயங்குவதில்லை. காதல் வாழ்க்கையில் தோல்வி அடைந்தாலும், திருமண வாழ்க்கையில், தன்னை நம்பி வந்த துணைக்கு ஒரு போதும் சுலோகத்தை செய்ய மாட்டார்கள். எப்பொழுதும் விசுவாசமாகவும், நேர்மையுடனும் செயல்படுவார்கள்.

மகர ராசி

மகர ராசி

மகர ராசியை சேர்ந்தவர்கள் வாழ்க்கையில் ஒரு வித லட்சியத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். மகத்தான விஷயங்களை சாதிக்க வேண்டும் இன்று எண்ணமும், என் வாழ்க்கைத் துணையின் மீது பிரியப்பட்டதாலும் இருக்கும். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் தன் வாழ்க்கை துணைக்காக முன் நிற்பார்கள்.


வாழ்க்கைத் துணையிடம் அன்பாக நடந்து கொள்வது மட்டுமல்லாமல், குடும்ப பொறுப்புகளை மிகச் சிறப்பாக கையால் வாருங்கள். பிறர் முன் தண்டனைக்கு எந்தவித சங்கடத்தையும் தராத வகையில் நடந்து கொள்வார்கள். அவர்களின் விசுவாசமான குணம் திருமண வாழ்க்கையே நம்பிக்கை கூறியதாக மாற்றும்.
அரவிந்தன்
எழுத்தாளர் பற்றி
அரவிந்தன்
நான் அரவிந்தன் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 12 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஜோதிடம், ஆன்மிகம் தொடர்பான செய்திகளை எழுதிக் கொண்டிருக்கும் நான், விளையாட்டு, நடப்பு நிகழ்வு, செய்திகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Principal Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்