bank clerk பணியின் விவரங்கள்
![bank clerk பணியின் விவரங்கள் bank clerk பணியின் விவரங்கள்](https://static.langimg.com/thumb/111410888/samayam-tamil-111410888.jpg?imgsize=88220&width=680&resizemode=3)
பரோடா வங்கி, இந்தியா வங்கி, மகாராஷ்டிரா, கனரா வங்கி, மத்திய இந்தியா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் தேசிய வங்கி, பஞ்சாப் & சிண்ட் வங்கி, யூகோ வங்கி, யூனியன் இந்தியா வங்கி ஆகிய பொதுத்துறை வங்கிகளில் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கிளார்க் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
Bank Clerk பணிக்கான வயது வரம்பு
![Bank Clerk பணிக்கான வயது வரம்பு  Bank Clerk பணிக்கான வயது வரம்பு ](https://static.langimg.com/thumb/111410889/samayam-tamil-111410889.jpg?imgsize=37890&width=680&resizemode=3)
வங்கி கிளார்க் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 20 வயது நிரம்பி இருக்க வேண்டும். மேலும் அதிகபட்சமாக 28 வயது நிரம்பி இருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு மேலும் 5 வருடங்கள், ஒபிசி-க்கு 3 வருடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் என வயது வரம்பில் சலுகை உள்ளது.
Bank Clerk பணிக்கான கல்வித்தகுதி
![Bank Clerk பணிக்கான கல்வித்தகுதி Bank Clerk பணிக்கான கல்வித்தகுதி](https://static.langimg.com/thumb/111410891/samayam-tamil-111410891.jpg?imgsize=49508&width=680&resizemode=3)
இப்பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் கணினி திறன் தேவை. அதற்கான சான்றிதழ்/டிப்ளமோ/டிகிரி ஆகியவை கணினி சார்ந்து இருக்க வேண்டும். மேலும், மாநில மொழி திறன் தேவை.
Bank Clerk பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை
![Bank Clerk பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை  Bank Clerk பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை ](https://static.langimg.com/thumb/111410893/samayam-tamil-111410893.jpg?imgsize=66496&width=680&resizemode=3)
வங்கி கிளார்க் பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இரண்டு தேர்வுகளும் ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தப்படும். தேர்விற்கு முன்பு விண்ணப்பதார்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
Bank Clerk பணிக்கு விண்ணப்பிக்கும் முறை
![Bank Clerk பணிக்கு விண்ணப்பிக்கும் முறை Bank Clerk பணிக்கு விண்ணப்பிக்கும் முறை](https://static.langimg.com/thumb/111410894/samayam-tamil-111410894.jpg?imgsize=8380&width=680&resizemode=3)
இப்பணியிடங்களுக்கு https://ibpsonline.ibps.in/crpcl14jun24/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கவும். இப்பணி தொடர்பான விவரங்களுக்கு https://www.ibps.in/ என்ற இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
Bank Clerk பணிக்கான முக்கிய நாட்கள்
![Bank Clerk பணிக்கான முக்கிய நாட்கள் Bank Clerk பணிக்கான முக்கிய நாட்கள்](https://static.langimg.com/thumb/111410895/samayam-tamil-111410895.jpg?imgsize=103222&width=680&resizemode=3)
பொதுத்துறை வங்கி கிளார்க் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் 01.02.2024 - 21.07.2024 வரை வழங்கப்பட்டுள்ளது. தேர்விற்கு முந்தைய பயிற்சி 12.08.2024 - 17.08.2024 வரை வழங்கப்படும். முதல்நிலை தேர்வு ஆகஸ்ட், 2024 நடைபெறும். அதற்கான முடிவுகள் செப்டம்பர், 2024 வெளியிடப்படும். அதனைத்தொடர்ந்து முதன்மை தேர்வு அக்டோபர் 2024 நடைபெறும். தேர்வு செய்யப்படுபவர்கள் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமனம் செய்யப்படுவர்.