ஆப்நகரம்

வெளுத்துவாங்கும் கனமழை.. தத்தளிக்கும் அசாம்.. 46 பேர் பலி.. 16 லட்சம் பேர் பாதிப்பு.. இந்த மாநிலங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை!

அசாம் மாநிலத்தில் பலத்த மழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்றும் கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil 4 Jul 2024, 10:12 am
தென்மேற்கு பருவமழை வடமாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. டெல்லி, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. அசாம் மாநிலத்தில் கொட்டும் மழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
Samayam Tamil Assam Flood


நேற்றைய நிலவரப்படி 29 மாவட்டங்களில் உள்ள 2800 கிராமங்களில் மொத்தம் 16.25 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அசாமில் உள்ள நாகோன் மற்றும் தர்ராங் மற்றும் பராக் பள்ளத்தாக்கில் உள்ள கரீம்கஞ்ச் ஆகிய மாவட்டங்கள் தொடர் அதி கனமழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

ரோகித்துக்கு டஃப் கொடுத்த நுங்கம்பாக்கம்..ஃபாஸ்ட்டஸ்ட் 50.. தமிழ்நாடு வெதர்மேன் அசத்தல் அப்டேட்!

கொட்டித் தீர்க்கும் பலத்த மழையால் காசிரங்கா பூங்கா 80 சதவீத அளவுக்கு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை நதிகளின் வெள்ளப்பெருக்கு காரணமாக 28 மாவட்டங்களில் 11 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் (F&ES), ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.



அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஜூலை மாதத்தில் 3வது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் அசாம் மாநிலத்தில் இன்றும் நாளையும் அதி கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கேரளா 50-50 லாட்டரியில் ரூ. 1 கோடியை தட்டித்தூக்கியது இவங்கதான்.. இன்று காருண்யா பிளஸில் ரூ.80 லட்சம் ஜாக்பாட்!

வட மாநிலங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு அதி மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அசாம், மேகாலயா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோக்ரஜார், சிராங், பக்சா, பர்பேட்டா, போங்கைகான், நல்பாரி, உடல்குரி, பிஸ்வநாத், லக்கிம்பூர் மற்றும் தேமாஜி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும், என்றும் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

திருப்பதி பக்தர்களுக்கு இனி அந்த கவலையே வேண்டாம்.. தேவஸ்தான நிர்வாகம் அதிரடி!

மேற்கு வங்கம், பீகார், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மற்றும் மணிப்பூரில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் ஐந்து நாட்களுக்கு கன மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் 40 கிலோமீட்டர் வேகத்திற்கு பலத்த காற்று வீசும் என்றும் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
எழுத்தாளர் பற்றி
பஹன்யா ராமமூர்த்தி
செய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி