Please enable javascript.Bahujan Samaj Party Bavani பகுஜன் சமாஜ் முன்வைக்கும் 4 கோரிக்கைகள்: ஒரே வாரத்தில் எல்லாம் மாறிருச்சு - பிஎஸ்பி நிர்வாகி வேதனை!

பகுஜன் சமாஜ் முன்வைக்கும் 4 கோரிக்கைகள்: ஒரே வாரத்தில் எல்லாம் மாறிருச்சு - பிஎஸ்பி நிர்வாகி வேதனை!

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 6 Jul 2024, 1:52 pm
Subscribe

ஆம்ஸ்ட்ராங் மரணத்தை முன்னிட்டு பகுஜன் சமாஜ் கட்சி தமிழக அரசுக்கு நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

armstrong murder
BSP Armstrong Death
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டது நாட்டையே உலுக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள் நான்கு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக பிஎஸ்பி கட்சி நிர்வாகி பவானியை சமயம் தமிழ் சார்பாக தொடர்பு கொண்டு பேசினோம்.

அப்போது பேசிய அவர், “நான்கு கோரிக்கைகளை நாங்கள் முன்வைக்கிறோம்.

1. மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ - க்கு மாற்ற வேண்டும்

2. மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அரசு மரியாதை அளிக்க வேண்டும். பொது இடத்தில் அவரது உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும்.
ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை: அவல நிலையில் சட்டம் ஒழுங்கு - எடப்பாடி பழனிசாமி காட்டம்!
3. உளவுத்துறை எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்யாததால், தலித் தலைவர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங்க் மறைவுக்கு ஏடிஜிபி பொறுப்பேற்க வேண்டும். உளவுத்துறை தனது தோல்வியை ஒத்துக்கொண்டு அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

4. 8 பேர் சரணடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல. இவர்களுக்கு பின்புலமாக உள்ள முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்.

இந்த நான்கு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன்வைவைத்து போராட்டத்தில் ஈடுபட்டோம். எங்கள் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி நாளை மாநிலத் தலைவர் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வர உள்ளார்.

அவர் மீது எந்த வழக்கும் கிடையாது. ஆனால் சில ஊடகங்கள் அவர் மீது வழக்கு உள்ளதாக குறிப்பிடுகின்றன. அவ்வாறு கூறுபவர்கள் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டால் நன்றாக இருக்கும். அனைவரிடமும் இனிமையாக பழகக் கூடியவர். மேடைகளிலோ, ஊடகங்களிலோ கட்சி நிர்வாகிகள் பிற கட்சியினரை தவறாக பேசிவிட்டால் உடனடியாக எங்களை திருத்துவார்.

அனைத்து தலித் செயல்பாட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். 2018ஆம் ஆண்டு சென்னையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு மிகப் பெரிய பேரணியை ஒருங்கிணைத்தார்.
ஆம்ஸ்ட்ராங் மரணம் - சென்னை வரும் மாயாவதி: தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கை - ஸ்டாலின் விளக்கம்!
அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு தகவலும் இல்லை. ஒருவேளை உளவுத்துறை எச்சரித்திருந்தால் பாதுகாப்பாக இருந்திருப்போம். ஆனால் அப்படியான அறிவிப்பை உளவுத்துறை கொடுக்கவில்லை. எதிர்பாராதவிதமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.

கடந்த வாரம் சனிக்கிழமை கட்சி அலுவலகத்தில் குடும்ப விழா நடைபெற்றது. மகிழ்வுடன் அனைவரும் பேசிக்கொண்டிருந்தோம். இந்த வெள்ளிக் கிழமை அண்ணன் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் வருகிறது. பேரதிர்ச்சியாக உள்ளது. தமிழக அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என்று கூறினார்.
மரிய  தங்கராஜ்
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்