Please enable javascript.Premalatha Vijayakanth Meets TamilNadu Governor RN Ravi: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு: ஆளுநருடன் பிரேமலதா விஜயகாந்த் திடீர் சந்திப்பு!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு: தமிழக ஆளுநர் ஆர்என் ரவியுடன் பிரேமலதா விஜயகாந்த் திடீர் சந்திப்பு!

Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil 28 Jun 2024, 1:12 pm
Subscribe

கள்ளக்குறிச்சியில் கள்ள சாராய உயிரிழப்புகள் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை சந்தித்துள்ளார் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த்.

Premalatha Vijayakanth

கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர. மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த கோரி தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்தித்துள்ளார்.

ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தமிழக பாஜக மற்றும் அதிமுக சார்பில் ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் தேமுதிக சார்பிலும் தற்போது ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விஜய்... உன்னதப்பணி என உச்சிமுகர்ந்த சீமான்.. கூட்டணிக்கு அஸ்திவாரமா? பளீச் பதில்!

அப்போது கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 6 கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆளுநரிடம் அளித்ததாக தெரிவித்தார். ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மற்றும் போலீசார் உதவியோடு கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். சிபிசிஐடி போலீசார் விசாரித்தால் உண்மை வெளி வராது என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு.. அச்சமாக உள்ளது.. மாணவர்கள் மத்தியில் அரசை அட்டாக் செய்த விஜய்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புக்கு பொறுப்பேற்று அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். திமுகவில் இருப்பவர்கள் மதுபான ஆலையை வைத்திருக்கும் போது கள்ள சாராய சம்பவத்தில் விசாரணை எப்படி சரியாக நடக்கும் என கேள்வி எழுப்பினார். மேலும் கள்ளச்சாராயத்தை ஒழிக்கவே டாஸ்மாக் திறக்கப்பட்டதாகவும் ஆனால் இன்னமும் கள்ள சாராய விற்பனை நடைபெற்று வரும் நிலையில் எதற்கு டாஸ்மாக் கடைகள் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.

நாகாலாந்து லாட்டரியில் ஒரு நாளைக்கு 3 குலுக்கல்.. ஒவ்வொரு குலுக்கலுக்கும் ரூ. 1 கோடி முதல் பரிசு.. மொத்தம் 3 கோடி!


தங்களின் கோரிக்கைகளை ஆளுநர் ஆர்என் ரவி கவனமாக கேட்டதாக தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த், போதை பொருள் பழக்கம் குறித்து ஆளுநர் ஆர்என் ரவி வேதனை தெரிவித்ததாகவும் கூறினார். டாஸ்மாக் கடைகளுக்கு இலக்கு வைத்து மதுபானம் என்றால் மக்களை காப்பாற்ற முடியாது என்றும் திமுக அரசை சாடினார் பிரேமலதா விஜயகாந்த்.
பஹன்யா ராமமூர்த்தி
எழுத்தாளர் பற்றி
பஹன்யா ராமமூர்த்தி
செய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்