Please enable javascript.kamal about his next movie:இப்போதைக்கு வாய்ப்பில்லை..முதல்ல எனக்கு அதுதான் முக்கியம்..வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கமல்..!

இப்போதைக்கு வாய்ப்பில்லை..முதல்ல எனக்கு அதுதான் முக்கியம் :கமல்

Authored byS வினோத்குமார் | Samayam Tamil 6 Jul 2024, 1:09 pm
Subscribe

கமல்ஹாசன் அட்லியின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து அத்தகவல் உண்மையா ? வதந்தியா ? என தெரியவந்துள்ளது

ஹைலைட்ஸ்:

  • கமலின் தக்லைப்
  • இந்தியன் 2 ப்ரோமோஷனில் கமல்
  • கமல் - அட்லி காம்போ
  • வதந்தி தான் என தகவல்
கமல் அட்லி காம்போ
உலகநாயகன் கமல்ஹாசன் ஒருபக்கம் அரசியல் மறுபக்கம் படங்கள் என செம பிசியாக வலம் வருகின்றார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தின் மூலம் மாஸ் கம்பேக் கொடுத்த கமல் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி வருகின்றார். முதலில் ஷங்கரின் இயக்கத்தில் துவங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படத்தை மீண்டும் தூசிதட்டி துவங்கினார் கமல்.

இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பை 2022 ஆம் ஆண்டு மீண்டும் துவங்கினார் கமல். அதன் பிறகு தொடர்ந்து விறுவிறுப்பாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகவுள்ளது. ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 திரைப்படம் திரையில் வெளியாகவுள்ளது. ஷங்கர் மற்றும் கமல் காம்போ, மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் என இவ்வாறு பல விஷயங்களால் இந்தியன் 2 மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.

Thuglife Update: மணிரத்னம் திரைவாழ்க்கையில் இதுவே முதல்முறை..ஷாக்கான கோலிவுட்..தக்லைப் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..!

இப்படம் துவங்கி ஒரு சில ஆண்டுகள் கிடப்பில் கிடந்ததால் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைவாகவே இருந்தது. அந்த எதிர்பார்ப்பு இந்தியன் 2 படத்தின் ட்ரைலர் வெளியான பிறகு அதிகரித்துள்ளது. அதன் காரணமாக இந்தியன் 2 படத்தின் ப்ரீபுக்கிங் அமோகமாக இருக்கின்றது. மேலும் படத்தின் வசூலும் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.


இந்நிலையில் கமல் இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் கமல் பிசியாக இருக்கும் நிலையில் கமலின் அடுத்த படம் பற்றிய தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. இந்தியன் 2 படத்தை தொடர்ந்து கமல் மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை முடித்துவிட்டு அன்பறிவு மாஸ்டர்ஸ் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் கமல்.


முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு துவங்கவுள்ளது. இதற்கிடையில் கமல் அட்லியின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் கடந்த சில நாட்களாக தீயாய் பரவி வருகின்றது. அட்லி ஜவான் படத்தை தொடர்ந்து சல்மான் கானை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் சல்மான் கானுடன் இணைந்து கமலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்தன.


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப்பிரம்மாண்டமாக தயாராகயிருக்கும் இப்படத்தில் கமல் மற்றும் சல்மான் கான் இணைந்து நடிப்பதாக வந்த தகவல் ரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் இத்தகவல் வெறும் வதந்தி தான் என தற்போது தெரியவந்துள்ளது. அட்லி சல்மான் கானை வைத்து ஒரு படத்தை இயக்கப்போவது உண்மை தானாம். ஆனால் அதில் கமல் நடிக்கவில்லையாம்.


கமல் இந்தியன் 2 படத்திற்கு பிறகு தக்லைப் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார். தக்லைப் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுக்கவேண்டும் என்பது தான் கமலின் தற்போதைய டார்கெட்டாக இருக்கின்றதாம். அதையடுத்து அன்பறிவு இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளாராம் கமல்.




இதையெல்லாம் முடித்துவிட்டு தான் தன் அடுத்த படத்தை பற்றி யோசிப்பாராம் கமல். எனவே கமல் மற்றும் அட்லி இணைவதாக வந்த தகவல் வெறும் வதந்தி தான் என தற்போது தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
S  வினோத்குமார்
எழுத்தாளர் பற்றி
S வினோத்குமார்
வினோத் குமார். நான் பொறியியல் மற்றும் ஊடகவியல் பட்டப்படிப்பை படித்துள்ளேன்.கடந்த நான்கு ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகினறேன். சினிமா மீது அதீத ஆர்வம் கொண்ட நான் தற்போது times internet சமயம் தமிழில் சினிமா தொடர்பான விஷயங்களை எழுதும் sub editor ஆக பணியாற்றி வருகின்றேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்