நீடாமங்கலம்
நீடாமங்கலம் | |||||||
அமைவிடம் | |||||||
நாடு | இந்தியா | ||||||
பகுதி | சோழ நாடு | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | திருவாரூர் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | தி. சாருஸ்ரீ, இ. ஆ. ப [3] | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
9,336 (2011[update]) • 3,563/km2 (9,228/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 2.62 சதுர கிலோமீட்டர்கள் (1.01 sq mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/needamangalam |
நீடாமங்கலம் (Needamangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் வட்டம் மற்றும் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். “ இப்பகுதி சோழர்கள் ஆட்சி காலத்தில் நீராடுமங்கலம் என்ற பெயருடன் விளங்கியுள்ளது. ” நீடாமங்கலம் நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
அமைவிடம்
[தொகு]நீடாமங்கலம் பேரூராட்சி, திருவாரூருக்கு 27 கிமீ தொலைவில் உள்ளது. நீடாமங்கலத்தில் தொடருந்து நிலையம் உள்ளது. இதனருகே அமைந்த நகரங்கள் தஞ்சாவூர் 32 கிமீ; கும்பகோணம் 26 கிமீ; மன்னார்குடி 12 கிமீ தொலைவில் உள்ளது. இப்பகுதி முற்காலத்தில் சோழநாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்கியுள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]2.62 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 58 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மன்னார்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2392 வீடுகளும், 9336 மக்கள்தொகையும் கொண்டது. [5] [6]
சங்ககாலம்
[தொகு]சங்ககாலத்தில் இந்த ஊர் நீடூர் என்னும் பெயருடன் விளங்கியது. அக்காலத்தில் இது மிழலை நாட்டின் தலைநகர். எவ்வி என்னும் வள்ளல் சங்ககாலத்தில் இதனை ஆண்டுவந்தான்.
சோழர்கள் காலம்
[தொகு]சோழர்கள் காலகட்டத்தில் இந்த நகரம் நீராடுமங்கலம் என்ற பெயருடன் விளங்கி வந்துள்ளது. சோழர்கள் காலத்தில் தஞ்சையை ஆண்ட மன்னர்கள் மற்றும் இளவரசிகள் இந்த ஊரில் புனித நீராடுவதனால் இவ்வூருக்கு நீராடுமங்கலம் என்ற பெயர் பெற்றுள்ளது.[சான்று தேவை]
கோயில்கள்
[தொகு]- நீடாமங்கலம் சந்தான ராமசாமி கோயில் "500 Years old"
புகழ்பெற்றவர்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "நீடாமங்கலம் பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-30. பார்க்கப்பட்ட நாள் 2019-03-30.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-03-30. பார்க்கப்பட்ட நாள் 2019-03-30.
- ↑ Needamangalam Population Census 2011
வெளி இணைப்புகள்
[தொகு]- நீடாமங்கலம் பேரூராட்சியின் தொடர்புக்கு பரணிடப்பட்டது 2019-03-30 at the வந்தவழி இயந்திரம்