வணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.
நம்ம பஜார்
Photogallery
हिन्दी
ಕನ್ನಡ
മലയാളം
తెలుగు
मराठी
ગુજરાતી
செய்திகள்
வீடியோ
T20 WC
நகரம்
சிறுதுளி
சினிமா
லைஃப்ஸ்டைல்
ஜோதிடம்
MORE
tamil News
Devaki
Devaki
Digital Content Producer
தேவகி ஜெகநாதன் "இதழியல் மற்றும் ஊடகவியல்" - சமயம் தமிழில் Digital Content Producer. ஊடகத்துறையில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர்.
Devaki ஆன்லைனில் இணைய
Devaki எழுதிய கட்டுரைகள்
உங்க ராசிப்படி பொங்கலுக்கு எந்த பொருளை தானம் செய்தால் நற்பலன் கிடைக்கும்!
தமிழர்களின் ஒவ்வொருவரின் வீட்டிலும் தீபாவளி, பொங்கல் என்றால் கொண்டாட்டம் தான். புத்தாடை உடுத்துவது, குடும்பத்துடன் இருப்பது, அக்கம் பக்கத்தினருக்கு இனிப்புகளை பரிமாறுவது என மகிழ்ச்சியை பரிமாறி கொள்வோம். அந்த வகையில் பொங்கல் பண்டிகையன்று எந்த பொருளை உங்கள் ராசிப்படி மற்றவர்களுக்கு தானம் செய்தால், உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ராமன் R, ராவணன் பெயரும் R என பெயரின் முதல் எழுத்து தொடங்குகிறதே!... அப்போ நீங்க அதிஷ்டசாலி..!
R Name Personality : நாம் அனைவருக்கும் வெவ்வேறு அர்த்தமுடைய பெயர் இருக்கும். அது, நம்மை வாழ்நாள் முழுவதும் மற்றவருக்கு அடையாளம் காட்டும். அதன்படி, R என்ற எழுத்தின் பின்னால் மறைந்துள்ள அர்த்தத்தையும் உங்கள் பெயரில் முதல் எழுத்தாக இருந்தால் அது, உங்களுக்கு எப்படிப்பட்ட ஆளுமையை தருகிறது என இங்கே காணலாம்.
சின்ன தப்பு செஞ்சா கூட இந்த ராசிக்காரர்கள் மன்னிக்க மாட்டார்களாம்!
வெறுப்புணர்வு இல்லாத மனிதர்களை நாம் இந்த உலகில் காண்பது கடினமான ஒன்று. அது அகங்காரமமனவர்களாகவோ அல்லது அப்பாவித்தனமானவரோ எவராக இருந்தாலும் வெறுப்புணர்வு இருக்கும். சிலர் வெளியில் காட்டுவார்கள், இன்னும் சிலர் வெளியில் காட்டுவதில்லை. நாம் செய்யும் தவறுகளை சிலர் எளிதாக மறந்து மன்னிப்பார்கள். ஆனால், சிலர் கடைசி வரை நம்மை மன்னிக்க மாட்டார்கள். ஏனென்றால், நாம் அவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கலாம். நாம் செய்த தவறு அவரை மிகவும் காயப்படுத்தியிருக்கலாம்.
எனவே, அவர்கள் நம்மை வெறுத்து ஒதுங்கிவிடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்பட மாட்டார்கள். எனவே, அவர்கள் தன்னை புண்படுத்தும் நபர்களை மன்னிக்க தயங்குகிறார்கள். அதுமட்டும் அல்ல, அவர் நம் மீது வைத்திருந்த நம்பிக்கை முழுமையாக உடைந்து விடுவதால், நம்முடன் பேசுவதை விரும்ப மாட்டார்கள். இப்படி, சிறிய தப்பை கூட தாங்க முடியாமல், மற்றவர்களை எளிதில் மன்னிக்காத ராசிக்காரர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
எவ்வளவு சம்பாதிச்சாலும் கையில காசு நிக்கலையா?-- அப்போ இதை செய்யுங்க!
வேதங்களில் வாஸ்து அறிவியல் குறித்த பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளது. நாம் செய்யும் சின்ன தவறு, பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. சில விஷயங்களை நாம் பின்பற்றுவதன் மூலம், லட்சுமி தேவியின் ஆசீர்வாதங்கள் நமக்கு கிடைக்கும். இதனால், நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் அந்த பணம் உங்கல் வீட்டில் தங்கும்.
இன்றைய வாழ்க்கையில், மக்கள் கடினமாக உழைத்து பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால், சம்பாதிக்கும் பணத்தை சம்பாதிக்க முடியாமல் செலவழித்துவிடுவார்கள். வாஸ்து படி, சில பழக்கங்களை நாம் செய்தால், நமக்கு நல்ல பலம் கிடைக்கும் என கூறப்படுகிறது. குறைந்த அளவு சம்பாதித்தாலும், பணத்தை சேமிப்பதற்கு சில பரிகாரங்களை செய்ய வேண்டும். அவை என்ன என்பதை நாம் காணலாம்.
உங்கள் தாடை உங்களை பற்றி கூறு ரகசியம் என்ன தெரியுமா?
சாமுத்திரிகா சாஸ்த்திரத்தின்படி, நமது முகத்தில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும், நம்மை பற்றி கூறுவதாக கூறப்படுகிறது. சீன முக கணிப்பின் படி, நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பின் வடிவமும், அளவும் நம்மை பற்றியும் நமது எதிர்க்காலத்தை பற்றியும் பல ரகசியங்களை கூறுகிறதாம். அந்தவகையில், நாம் இன்று உங்கள் தாடையின் வடிவம் உங்களை பற்றி என்ன சொருகிறது என்பதை பார்க்கலாம்.
சீன முக கணிப்பில், கன்னம் மற்றும் தாடை வடிவத்தை கணிக்கப்படும் அனைத்து பலன்களையும், ஒருவர் 61 முதல் 75-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் பெறுவார்கள் என கூறப்படுகிறது. சின் அல்லது தாடை ஒருவரின் விடாமுயற்சி, ஆக்கிரமிப்பு, சகிப்புத்தன்மை மற்றும் வேலை செய்யும் மனப்பான்மையைக் காட்டுகிறது. ஒரு நல்ல தாடையை உடையவர்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பார்களாம். நல்ல தாடை என்பது, கேக்கில் உள்ள ஐசிங் போன்றது.
பரந்த, வட்டமான மற்றும் குண்டான தாடை செல்வத்தின் சின்னம் என்று பொதுவாக நம்பப்படுகிறது. வடு, சுருக்கம் அல்லது மோசமான மச்சம் கொண்ட குட்டையான, கூரான அல்லது சதைப்பற்றுள்ள தாடை மிக மோசமானதாகக் கருதப்படுகிறது. எனவே, உங்கள் தாடையின் வடிவம் உங்களை பற்றி என்ன கூறுகிறது என்பதை இங்கே காணலாம்.
இந்த ராசிக்காரர்களை நம்பாதீங்க… அவர்கள் நம்பிக்கையானவர்கள் அல்ல
விசுவாசம் என்பது அனைவரிடமும் இருக்காது. அது சிலரிடம் மட்டுமே இருக்கும் நற்பண்பு. நாம் எவ்வளவுதான் ஒருவருடன் நெருக்கமாக பழகினாலும் அவர்கள் நமக்கு விசுவாசமாக இருக்க மாட்டார்கள். நீங்கள் அவர்களுக்காக மலைகளை நகர்த்தினாலும், அவர்கள் உங்களுக்கு உதவி என வரும் போது எதுவும் செய்ய மாட்டார்கள்.
ஆனால், நாம் யாழ்ப்பாய் புரிந்து கொள்ளாமல், நம்மை நாமே வருத்தத்தில் ஆழ்த்துவோம். இதற்கு அவர்களின் ராசியும் காரணம் என ஜோதிடம் கூறுகிறது. சில ராசியினர் விசுவாசமாகவும், சில ராசியினர் சுயநல மாகவும் நடந்து கொள்வார்கள். ஜோதிடத்தின் படி, விசுவாசமாக இருக்க முடியாத ராசிகள் பற்றி இங்கே காணலாம்.
SSC Recruitment 2023: 12-வது படித்தவர்களுக்கு அரசு வேலை; 4500 காலிப்பணியிடம் அறிவிப்பு!
SSC Recruitment 2023: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் லோயர் டிவிஷன் கிளார்க், ஜூனியர் செகரட்டரியேட் அசிஸ்டென்ட் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் போன்ற பதவிகளில் ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது. தேர்வுக்கான விண்ணப்பத்தை ஆணையம் தொடங்கியுள்ளது. வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Vastu Tips: வீட்டில் விளக்கு ஏற்றும் போது மறந்தும் இந்த தவறை செய்யாதீர்கள்!
Vastu Tips For worship: இந்து மதத்தில் வழிபாடு மிகவும் முக்கியமான ஒன்று. தொடர்ந்து வழிபாடு செய்வதன் மூலம் தெய்வங்கள் மற்றும் அவர்களின் அருள் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் கடவுள் வழிபாடு குறித்து பல விதிகள் வாஸ்து சாஸ்த்திரத்தில் கூறப்படுகிறது. நாம் இறை வழிபாட்டின் பொது செய்யப்படும் சிறிய தவறு நம்மை பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கும் என கூறப்படுகிறது.
ஒவ்வொரு மதச் சடங்கு முன் விளக்கு ஏற்றுவது வழக்கமான ஒன்று. அதே போல, தெய்வத்தின் ஆரத்தி செய்வதும் வழக்கம். ஆரத்தி செய்யாவிட்டால் வழிபாடு முழுமையடையாது என்று நம்பப்படுகிறது. நாம் பூஜைக்காக ஒரு தீபத்தை ஏற்றும் போது, தேவர்களும், தெய்வங்களும் மகிழ்ச்சி அடைவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றும் போது நாம் எந்த தவறையும் செய்யக்கூடாது. அப்படி செய்தால், அது பெரிய தீங்கை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. நீங்கள் விளக்கு ஏற்றும் போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி இங்கே காணலாம்.
அடிக்கடி காதலில் ஏமாறும் அப்பாவி ராசிகள்..!
“காதலுக்கு கண்ணில்லை” என்ற பழமொழி நாம் அனைவருக்கும் தெரியும். காதலிக்கும்போது, எல்லாம் நன்றாக இருக்கும். எனவே தான் நாம் நமது துணையை உணர்வு ரீதியாக சார்ந்து இருக்கிறோம். இதனால், அறிவு இருந்தும், அறிவு இல்லாத ஜீவிகளாக நாம் இருக்கிறோம். சிலர் தனது துணியை விட்டுக்கொடுப்பார்கள்.
ஆனால், சிலர் தனது துணியை கடைசி வரை ஒரு குழந்தையை போல பாதுகாக்க நினைப்பார்கள். ஆனால், அவர்களின் அருமை சிலருக்கு புரியாததால், அவர்களை இழந்து விடுவார்கள். தூய உள்ளத்துடன் நேசிப்பவர்களுக்குத் தனது துணை என்ன வஞ்சம் செய்தாலும் தெரியாது. இவ்வாறு உணர்ச்சிவசப்பட்டு ஏமாற்றப்படும் ராசிக்காரர்கள் யார் என இங்கே பார்க்கலாம்.
உங்களுக்கு தெரிந்தவர் பெயரின் முதல் எழுத்து Q ஆ? - இது தான் அவர் ரகசியம்..!
Q Name Personality : நாம் அனைவருக்கும் வெவ்வேறு அர்த்தமுடைய பெயர் இருக்கும். அது, நம்மை வாழ்நாள் முழுவதும் மற்றவருக்கு அடையாளம் காட்டும். அதன்படி, Q என்ற எழுத்தின் பின்னால் மறைந்துள்ள அர்த்தத்தையும் உங்கள் பெயரில் முதல் எழுத்தாக இருந்தால் அது, உங்களுக்கு எப்படிப்பட்ட ஆளுமையை தருகிறது என இங்கே காணலாம்.
SBI கிளார்க் பிரிலிம்ஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு; எப்படி சரிபார்ப்பது?
SBI Clerk Prelims Result 2022: எஸ்பிஐ கிளார்க் பிரிலிம்ஸ் முடிவு 2022 ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா sbi.co.in என்ற இணையதளத்தில் முதற்கட்டத் தேர்வுக்காக அறிவிக்கப்பட்டது. விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐ கிளார்க் 2022 ப்ரிலிம்ஸ் முடிவு நேரலை அறிவிப்புகள், செய்திகள் ஆகியவற்றை இங்கே பார்க்கலாம்.
சுமார் 3.6 கோடி இழப்பை சரிகட்ட ஊழியர்களை பணிநீக்கும் Swiggy!
ஆன்லைன் உணவு மற்றும் மளிகை விநியோக தளமான ஸ்விக்கியின் செயல்பாடுகள் 2021-22 நிதியாண்டில் (FY22) 124% உயர்ந்து ரூ. 5,704.90 கோடியாக உள்ளது. அதே சமயம் இழப்புகள் ரூ. 1,616.90 கோடியிலிருந்து இருமடங்கு அதிகரித்து ரூ. 3,628.90 கோடியாக உள்ளது.
உங்க கனவில் பூனை வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?
கனவு எல்லோருக்கும் வரும். சில கனவுகள் கெட்டவை, சில நல்லவை. இருப்பினும், ஒவ்வொரு கனவுக்கும் சில அர்த்தம் உள்ளது. ஸ்வப்னா சாஸ்திரத்திரத்தில் அதற்கான அர்த்தங்கள் விவரமாக கூறப்பட்டுள்ளது. சில கனவுகள் சுப அறிகுறிகளை சுட்டிக்காட்டுகின்றன, சில அசுப அறிகுறிகளை குறிக்கின்றன. சில சமயம் நமது கனவில் பூனைகளை பார்த்திருப்போம். ஆனால் அதற்க்கு என்ன அர்த்தம் என்று நமக்கு தெரியாது. ஒவ்வொரு வண்ண பூனைக்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான விரிவான தகவலை இங்கே காணலாம்.
மீனமும் மேஷமும் நல்ல பொருத்தமா? - காதல், நட்பு, பாலுறவு எப்படி இருக்கும்?
Pisces and Aries compatibility: பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொருவரின் வாழ்க்கையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுக்களிலும் ஜோதிடம் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தவகையில், செவ்வாய் ஆளும் மேஷம் மற்றும் குரு ஆளும் மீன ராசிகளுக்கு இடையேயான பொருத்தம், இல்லறவாழ்க்கை, பாலுறவு, நட்பு மற்றும் நம்பிக்கை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.
காதலிக்காமல் கடைசி வரை சிங்கிளாக இருக்கும் ராசிக்காரர்கள்..!
நம்மில் பலர் காதல் வாழ்க்கையை அதிகம் விரும்புவோம். தனியாக இருப்பதை இவர்கள் விரும்புவதில்லை, ஒருவருடன் தங்கள் வாழ்க்கையை செலவிட விரும்புவார்கள். இன்னும் சிலர், மற்றவருடன் சேர்ந்திருப்பதை விரும்புவதில்லை. தனக்கான சுகந்திரமான வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். அதன்படி, கடைசி வரை காதலிக்காமல் சிங்கிளாக இருக்கும் ராசிக்காரர்கள் யார் என இந்த தொகுப்பில் காணலாம்.
KVS Recruitment 2023: ஆசிரியர் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
KVS Teacher Recruitment 2022: தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான kvsangathan.nic.in இல் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இன்றைய ராசி பலன் (2 ஜனவரி 2023)
நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொண்டால், நினைத்த செயல்கள் வெற்றி பெறும். ஜனவரி 02 திங்கட்கிழமை சந்திரன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.
இந்த கிரக மாற்றம் சில ராசிக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இந்த ஆண்டின் கடைசி நாள் எப்படி இருக்கும் என்பதை இங்கே பார்ப்போம்.
இன்றைய ராசி பலன் (1 ஜனவரி 2023)
Today astrology 1 January 2023: நாம் அனைவரும் புதிய ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளோம். இந்த ஆண்டும் உங்களுக்கும் எங்கள் குடும்பத்தினருக்கு நல்ல மகிழ்ச்சி, செல்வம் மற்றும் ஆரோக்கியத்தை கொடுக்கட்டும் என வாழ்த்துகிறோம். நாளின் தொடக்கத்தில் நாம் அந்நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு செய்தால், அது வெற்றியை தரும்.
இன்றைய ராசிபலன், கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் இன்று உங்களுக்கான பலன் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இந்த ஆண்டின் கடைசி நாள் எப்படி இருக்கும் என்பதை இங்கே பார்ப்போம்.
Weekly Love Horoscope : ஜனவரி 2 முதல் 8 வரை உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்?
Love Horoscope January 1st to 8th : நாம் அனைவரும் புது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளோம். இந்த ஆண்டு அனைவருக்கும் அனைத்து வெற்றியையும், செல்வங்களையும் கொடுக்கும் என நம்புவோம். 2023 ஆம் ஆண்டின் துவக்கத்தில், காதலின் அடையாள கிரகமான சுக்கிரன் மகர ராசிக்கு இடம் பெயர்வார். இந்த மாற்றத்தின் விளைவு சில ராசிகளுக்கு எதிரொலிக்கும்.
இந்த ஆண்டின் முதல் வாரம் எந்தெந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும், எந்தெந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை சிக்கலாக இருக்கும் என நாங்கள் கூறுகிறோம். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை இந்த வாரம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
IOCL-யில் 1747 அப்ரண்டிஸ் காலிப்பணியிடம்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
IOCL Recruitment 2023: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 1,747 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வம் உள்ள மற்றும் வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் தங்களின் தகுதி மற்றும் வயது வரம்பை அறிந்து கொள்ள கீழே பார்வையிடவும்.
மேலும்