Please enable javascript.Tirupati VIP darshan will be cancelled for 2 days: திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு.. இந்த 2 நாட்கள் விஐபி தரிசனம் ரத்து.. இன்றும் அலைமோதும் கூட்டம்!

திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு.. இந்த 2 நாட்கள் விஐபி தரிசனம் ரத்து.. இன்றும் அலைமோதும் கூட்டம்!

Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil 6 Jul 2024, 4:49 pm
Subscribe

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்றும் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருமலையில் 2 நாட்கள் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

tirumala tirupati devasthanam announced 2 days vip darshan will be cancelled in this month
திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு.. இந்த 2 நாட்கள் விஐபி தரிசனம் ரத்து.. இன்றும் அலைமோதும் கூட்டம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சனிக்கிழமையான இன்று பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.

திருப்பதி

திருப்பதி
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எப்போதும் பக்தர்களின் கூட்டம் சொல்ல முடியாத அளவுக்கு அலைமோதி வருகிறது. அதிலும் குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் திருமலை குலுங்கும் அளவுக்கு பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

அதிகரிக்கும் கூட்டம்

அதிகரிக்கும் கூட்டம்
கூட்டம் அதிகமாக இருந்தாலும், வெயில் மழை என எதையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக குடிநீர், உணவு உட்பட அனைத்து சேவைகளையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக திருமலையில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.

மோடி அரசு ஆகஸ்ட்க்குள் கவிழும்.. கணித்த லாலு பிரசாத்.. கனவு காணாதீங்க ஜி.. விளாசிவிட்ட சிராக் பஸ்வான்!

தேவஸ்தானம் ஏற்பாடு

தேவஸ்தானம் ஏற்பாடு


வழக்கமாக வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆகையால் தற்போதும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இன்று சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாகவே உள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் தேவையான ஏற்பாடுகளை தேவாஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர். பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

10 நேரம் காத்திருப்பு

10 நேரம் காத்திருப்பு

திருமலை தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதால் வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்டவற்றை திருமலை சேவகர்கள் வழங்கி வருகின்றனர். திருமலையில் உள்ள வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸின் 18 பெட்டிகளில் பக்தர்கள் இன்று காத்திருக்கின்றனர். காலை 7 மணிக்கு இலவச தரிசன வரிசையில் நுழையும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய 10 மணி நேரம் ஆகும் என திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங்கை வீட்டின் அருகே கொன்றது ஏன்? கொலை செய்தது எப்படி? வெளியான பகீர் தகவல்!

300 ரூபாய் கட்டண தரிசனம்

300 ரூபாய் கட்டண தரிசனம்


300 ரூபாய்க்கு சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கிய பக்தர்கள் ஸ்ரீவாரி தரிசனம் செய்ய 3 முதல் 4 மணி நேரம் ஆகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பதி ஏழுமலையானை நேற்று 65,775 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 25,126 பக்தர்கள் தலைமுடி காணிக்கை வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று உண்டியல் காணிக்கையாக 3.41 கோடி ரூபாய் வசூலானது.

விஐபி தரிசனம் ரத்து

விஐபி தரிசனம் ரத்து
இந்நிலையில் திருப்பதியில் 2 நாட்கள் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனி வார ஆஸ்தானத்தை முன்னிட்டு வரும் 9 மற்றும் 16 ஆம் தேதிகளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனி வார ஆஸ்தானம் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது.

அண்ணாமலை போன்ற அரைவேக்காடு தலைவர்கள்.. பாஜக மைனாரிட்டி அரசு.. வெளுத்துவாங்கிய ஆர்பி உதயகுமார்!

2 நாட்கள் ரத்து

2 நாட்கள் ரத்து


இதனையொட்டி 9 ஆம் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெறும். பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு 12 மணிக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். 5 மணி நேர இடைவெளியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் வரும் 9 மற்றும் 16 ஆகிய 2 நாட்கள் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பஹன்யா ராமமூர்த்தி
எழுத்தாளர் பற்றி
பஹன்யா ராமமூர்த்தி
செய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்