Please enable javascript.SIPCOT for Madurai, 279 acres of land has been selected at vanjinagaram: மதுரைக்கு சிப்காட்! 2 இடங்களில் 279 ஏக்கர் நிலம் தேர்வு! வெளியான மாஸ் அறிவிப்பு!

மதுரைக்கு சிப்காட்! 2 இடங்களில் 279 ஏக்கர் நிலம் தேர்வு! வெளியான மாஸ் அறிவிப்பு!

Authored byஅன்னபூரணி L | Samayam Tamil 3 Jul 2024, 8:03 pm
Subscribe

மதுரை மாவட்ட மக்களும், இளைஞர்களும் பெரிதும் எதிர்பார்த்து வந்த சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்கான நிலம் இரண்டு இடங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

279 acres of land has been selected in vanjinagaram for setting up sipcot industrial park in madurai
மதுரைக்கு சிப்காட்! 2 இடங்களில் 279 ஏக்கர் நிலம் தேர்வு! வெளியான மாஸ் அறிவிப்பு!
மதுரையில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்காக வஞ்சிநகரத்தில் 279 ஏக்கர் நிலமும், தல்லாகுளத்தில் 15 ஏக்கர் நிலமும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

​மக்கள் விரும்பும் மதுரை:

​மக்கள் விரும்பும் மதுரை:

பாசத்திற்கும், வீர விளையாட்டுகளுக்கும் பெயர் போன தமிழ் வளர்த்த மதுரை மாவட்டத்தில் பரபரப்பான விமான நிலையம் முதல் உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் வரை தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாடு சுற்றுலா பயணிகளும் வந்து செல்லும் ஏராளமான இடங்கள் குவிந்துள்ளது.

​மதுரை மக்களின் குற்றச்சாட்டு:

​மதுரை மக்களின் குற்றச்சாட்டு:

இப்படி பல பெருமைகளை பெற்ற மதுரை மாவட்டத்திற்கு சரியான உள்கட்டமைப்பு வசதிகளும் வளர்ச்சி திட்டங்களும் சரிவர கிடைப்பதில்லை என மதுரை மக்களும் இளைஞர்களும் பல நாட்களாக மத்திய மாநில அரசுகளை சாடி அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

​அரசுகளின் புறக்கணிப்பு:

​அரசுகளின் புறக்கணிப்பு:

மேலும் மத்திய, மாநில அரசுகள் தமிழகத்தில்
எந்த ஒரு திட்டம் அறிவித்தாலும் அது சென்னை, கோவை, திருச்சி மாவட்டங்களுக்கு மட்டுமே கிடைப்பதாகவும், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை அரசுகள் வஞ்சிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

தொடர்ந்து மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படாதது, மதுரைக்கு சிப்காட் அறிவிக்கப்படாதது, தமிழ்நாடு முதலீட்டர்கள் மாநாட்டிலும் மதுரைக்கு முதலீடுகள் கிடைக்காதது, தற்போது சட்டப்பேரவை கூட்டத் தொடரிலும் மதுரைக்கு எந்த ஒரு திட்டமும் அறிவிக்கப்படாது என தொடர்ந்து மதுரையை புறக்கணிப்பதாக சமூக வலைத்தளங்களில் 'மறக்கப்படும் மதுரை' என நெட்டிசன்களும், மதுரை மாவட்ட இளைஞர்களும் தங்களது ஆதங்கத்தை பதிவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

​அறிவிக்கப்பட்ட திட்டங்களும் தாமதம்:

​அறிவிக்கப்பட்ட திட்டங்களும் தாமதம்:

மேலும் மதுரைக்கு அறிவிக்கப்பட்ட மெட்ரோ, டைடல் பார்க் திட்டங்களும் பல நாட்களாக அறிவிப்பாக மட்டுமே இருப்பதாகவும் மக்கள் அதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மதுரை மெட்ரோவிற்கு நிதி வழங்கும் பன்னாட்டு நிதி வங்கி உறுப்பினர்கள் இன்று மதுரை மெட்ரோ அமைய இருக்கும் இடங்களில் ஆய்வு செய்தனர்.

​வந்தது சிப்காட் அறிவிப்பு:

​வந்தது சிப்காட் அறிவிப்பு:

இந்த நிலையில் விரைவில் மதுரை மெட்ரோ விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து கட்டுமான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி மதுரை மக்களை குளிர்வித்துள்ள நிலையில் அவர்களை மேலும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் விதமாக மற்றொரு குளு குளு செய்து வெளியாகி உள்ளது.

அதுதான் மதுரை இளைஞர்களும் பொதுமக்களும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த சிப்காட் அறிவிப்பு. தென் மாவட்ட மக்களுக்கு மையமாக இருக்கும் மதுரையில் சிப்காட் அமைக்க வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை விடுத்து வந்து நிலையில் தற்போது மதுரையில் சிப்காட் அமைக்க இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

​இரண்டு இடங்கள் தேர்வு:

​இரண்டு இடங்கள் தேர்வு:

இதற்காக வஞ்சிநகரத்தில் 279 ஏக்கர் நிலமும், தல்லாகுளத்தில் 15 ஏக்கர் நிலமும் அடையாளம் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 14 ஏக்கர் நிலம் மேலூர் தாலுக்கா கருங்காலக்குடியில் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் அருகே அமைந்துள்ளது.

​மதுரை இளைஞர்கள் மகிழ்ச்சி:

​மதுரை இளைஞர்கள் மகிழ்ச்சி:

சிப்காட் அமைக்க வஞ்சிநகரத்தில் தற்போது 279 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடி இங்கு தொழில் பூங்கா அமைக்கப்பட்டால் மதுரை மாவட்டத்தின் வளர்ச்சியும், இளைஞர்களின் வேலைவாய்ப்பும் வெகுவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு மதுரை மாவட்ட இளைஞர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அன்னபூரணி L
எழுத்தாளர் பற்றி
அன்னபூரணி L
அன்னபூரணி: ஆங்கில இலக்கியம் மற்றும் ஊடகவியல் துறை பட்டதாரி. அரசியல், கிரைம், சினிமா, பொது செய்திகள், ஆன்மீக செய்திகளில் ஆர்வம் அதிகம். எழுதுவதிலும், புத்தகம் வாசிப்பதிலும் அலாதி பிரியம் உண்டு. ஒரு பயிற்சியாளராக சமயம் தமிழில் எனது முதல் பயணத்தை தொடங்கி, தற்போது ஒரு வருடத்திற்கும் மேலாக மாவட்ட செய்திகளை எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்