Please enable javascript.BP and Cholesterol Diet : பிளட் பிரஷர்.. கொலஸ்ட்ரால் இரண்டுமே இருக்கிறவங்க.. என்ன செய்யணும்.. என்ன செய்யக்கூடாது..!

பிளட் பிரஷர்.. கொலஸ்ட்ரால் இரண்டுமே இருக்கிறவங்க.. என்ன செய்யணும்.. என்ன செய்யக்கூடாது..!

Authored byதனலட்சுமி | Samayam Tamil 6 Jul 2024, 11:55 am
Subscribe

வாழ்க்கை முறை தொடர்பான நோய்களின் அதிகரிப்பில் உயர் இரத்த அழுத்தமும், உயர் கொலஸ்ட்ரால் இரண்டும் முக்கிய பங்குவகிக்கிறது. இவை கவனிக்காத போது இதய நோய்கள் மற்றும் கடுமையான உடல்நல அச்சுறுத்தல்கள் உண்டாகலாம். இவை இரண்டுக்குமான தொடர்பு என்ன, இவை எப்படி நம் நல்வாழ்வை மோசமாக பாதிக்கிறது என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

link between high cholesterol and high blood pressure according to expert
பிளட் பிரஷர்.. கொலஸ்ட்ரால் இரண்டுமே இருக்கிறவங்க.. என்ன செய்யணும்.. என்ன செய்யக்கூடாது..!
நீரிழிவு நோய் இருந்தால் எப்படி உயர் இரத்த அழுத்தம் வருவதற்கான அபாயம் உள்ளதோ அதே போன்று அதிக கெட்ட கொழுப்பு உடலில் இருக்கும் போது அது உயர் இரத்த அழுத்தத்தை பாதிக்கின்றன, இந்த உயர் கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் இரண்டுமே இதய ஆரோக்கியத்தை பாதிக்ககூடியவை. உயர் இரத்த அழுத்தம் இதயம் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கிறது. மறுபுறம் அதிக கொழுப்பு எல்டிஎல் என்னும் குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்பு புரதம் தமனிகளில் பிளேக் அசாதாரண உருவாக்கம் தமனியை சுருக்கி இரத்த அழுத்தம் அதிகரிக்க செய்கிறது. இவை இரண்டுக்குமான தொடர்பு பற்றி விளக்குகிறார் Dr Preeti Kabra, Neuberg Diagnostics.

​கொழுப்புக்கும் உயர் இரத்த அழுத்தத்துக்கும் தொடர்பு உண்டா?​

​கொழுப்புக்கும் உயர் இரத்த அழுத்தத்துக்கும் தொடர்பு உண்டா?​

கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்தம் (உயர் இரத்த அழுத்தம்) இடையே குறிப்பிடத்தக்க தொடர்பு உள்ளது. உயர் கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் இரண்டும் இதய நோய்களுக்கான முக்கிய ஆபத்து காரணிகளாகும். இவை அடிக்கடி இணைந்து, அதற்கேற்ப பாதிப்புகளையும் அதிகரிக்கின்றன. உயர் இரத்தம் அழுத்தம் இருந்தாலும் உயர் கொழுப்பு இருந்தாலும் இரண்டையும் கட்டுக்குள் வைப்பதோடு அவ்வபோது இதன் அளவு முறைகள் பற்றிய பரிசோதனையும் செய்வது பாதிப்புகளை தடுக்க செய்யும்.

​உடலில் கொழுப்பு அதிகரிக்கும் போது உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்குமா?​

​உடலில் கொழுப்பு அதிகரிக்கும் போது உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்குமா?​

அதிக அளவு கொலஸ்ட்ரால் (குறைந்த அடர்த்தி கொண்ட எல்டிஎல் அளவு) தமனிகளில் (arteries) பிளேக் உருவாக வழிவகுக்கும். இந்த பிளேக் தமனிகளை (arteries) சுருக்கி கடினப்படுத்துகிறது. இதனால் தமனிகள் குறுகலாக மாறுகிறது. இந்த குறுகலான தமனிகள் இதயம் இரத்தத்தை பம்ப் செய்வதை கடினமாக்குகிறது. இதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்க செய்கிறது. ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு கொழுப்பு இருக்கும் போது அவை இன்னும் தீவிரமாக வாய்ப்புண்டு. இது உயர் இரத்த அழுத்தம் மட்டும் கொண்டிருப்பவர்களை காட்டிலும் அதிக ஆபத்தை உண்டு செய்யும்.


​கொழுப்பு குறையவும் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்கவும் என்ன செய்வது?​

​கொழுப்பு குறையவும் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்கவும் என்ன செய்வது?​

கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் சிகிச்சை முறையோடு உடல்பயிற்சியிலும் கவனம் செலுத்த வேண்டும். இது உடல் எடை அதிகரிப்பு அபாயத்தை உண்டு செய்யாமல் இருப்பதால் பக்கவிளைவுகள் அதிகரிக்காமல் பார்த்துகொள்ளும்.

வயதுக்கேற்ப உடல்பயிற்சியை மிதமாகவோ தீவிரமாகவோ செய்யலாம். நாள் ஒன்றுக்கு குறைந்தது 20 நிமிடம் விறுவிறுப்பான நடைபயிற்சி மேற்கொள்ளலாம். வயதானவர்கள் மிதமான நடைபயிற்சி செய்யலாம். நீச்சல் பயிற்சி செய்யலாம். சைக்கிள் ஓட்டுவதும் சிறந்த உடற்பயிற்சியாக இருக்கும். மேலும் சூரிய நமஸ்காரம், யோகா போன்ற செயல்பாடுகள் நன்மை பயக்கும்.

​கொழுப்பும் உயர் இரத்த அழுத்தமும் இருப்பவர்கள் என்ன சாப்பிடலாம்?​

​கொழுப்பும் உயர் இரத்த அழுத்தமும் இருப்பவர்கள் என்ன சாப்பிடலாம்?​

குறைந்த கொழுப்பு மற்றும் அதிக புரத உணவுகளை பின்பற்ற வேண்டும். கார்போஹைட்ரேட்டுகள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைக்கப்படலாம். ஒரு நாளைக்கு ஒரு முறை கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்ளலாம்.
நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளுங்கள். பழுப்பு அரிசி (Brown rice), ஓட்ஸ், முழு கோதுமை மற்றும் குயினோவா போன்ற முழு தானியங்கள் எடுத்துகொள்ள வேண்டும். நீர்ச்சத்து குறைபாடு இல்லாமல் இருக்கவும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் நாள் முழுவதும் பொதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் சீரான உணவு முறையை பின்பற்ற ஊட்டச்சத்து நிபுணரை அணுகுவது பாதுகாப்பானது.

​உயர் இரத்த அழுத்தமும் கொழுப்பும் இருப்பவர்கள் உணவு முறையில் தவிர்க்க வேண்டியவை​

​உயர் இரத்த அழுத்தமும் கொழுப்பும் இருப்பவர்கள் உணவு முறையில் தவிர்க்க வேண்டியவை​
  • பதப்படுத்தப்பட்ட உணவுகள்
  • Junk Foods என்னும் குப்பை உணவுகள்
  • Fast Food என்னும் துரித உணவுகள்
  • எண்ணெய் உணவுகள்
  • கார்பனேட்டட் பானங்கள்
  • மைதா உணவுகள்
  • கேக்
  • செயற்கை இனிப்புகள் போன்றவற்றை
  • முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதே போன்று நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் எதையும் சாப்பிடக்கூடாது.

​உயர் கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு என்ன மாதிரியான பக்கவிளைவுகள் வரும்?​

​உயர் கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு என்ன மாதிரியான பக்கவிளைவுகள் வரும்?​

அதிக கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் இரண்டும் கரோனரி தமனி (coronary artery) நோய், மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பு ஆகியவற்றின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கின்றன.
கை மற்றும் கால்களில் இரத்த ஓட்டம் குறைவதால் வலி மற்றும் இயக்க சிக்கல்கள் உண்டாகிறது.
உயர் இரத்த அழுத்தம் கண்களில் உள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்தும். இது ரெட்டினோபதி மற்றும் பார்வை இழப்புக்கு வழிவகுக்கும்.


இதயம் ஆரோக்கியமாக இருக்க நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் கொழுப்பு போன்றவற்றை கட்டுக்குள் வைக்க வேண்டும். வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுவதன் மூலம், தனிநபர்கள் அதிக கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்புடைய சிக்கல்களின் அபாயத்தை கணிசமாகக் குறைக்கலாம். இந்த நிலைமைகளை திறம்பட கண்காணித்து நிர்வகிப்பதற்கு ஒரு மருத்துவருடன் வழக்கமான பரிசோதனைகள் அவசியம்.

தனலட்சுமி
எழுத்தாளர் பற்றி
தனலட்சுமி
நான் தனலட்சுமி சுந்தர். ஊடகத்துறையில் 24 வருடங்கள் சோர்வில்லாத பயணம். லைஃப்ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் எழுதி வருகிறேன். மருத்துவ நிபுணர்களின் பேட்டிகள், கட்டுரைகள் மக்களுக்கு எடுத்து செல்வதில் விருப்பம் அதிகம். ஆன்மிகம், அரசியல் செய்திகள், சினிமா செய்திகளிலும் ஆர்வமும் அனுபவமும் உண்டு. தற்போது Times Internet நிறுவனத்தின் சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்