Please enable javascript.Side Effects Of Consuming Too Much Fibre Foods :நார்ச்சத்து நல்லது... ஆனா அதிகமா எடுத்துகிட்டா இந்த விளைவுலாம் வரும்!!

:நார்ச்சத்து நல்லது... ஆனா அதிகமா எடுத்துகிட்டா இந்த விளைவுலாம் வரும்!!

Authored byமணிமேகலை | Samayam Tamil 25 Jun 2024, 12:57 pm
Subscribe

நார்ச்சத்துக்கள் உடலின் செயல்பாட்டுக்கும் உணவுகளை ஜீரணிககவும் எவ்வளவு முக்கியம் என்று நமக்குத் தெரியும். ஆனால் அளவுககு மிஞ்சினால் அமிர்தமும் நஞசு என்று சொல்வது போல, அதே நார்ச்சத்துக்களை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது சில விளைவுகளை ஏற்படுத்தும். அந்த பக்க விளைவுகள் என்னென்ன என்று இங்கு தெரிந்து கொள்ளலாம் வாங்க.

what happens to your body when you eat too much fiber in tamil
:நார்ச்சத்து நல்லது... ஆனா அதிகமா எடுத்துகிட்டா இந்த விளைவுலாம் வரும்!!
நார்ச்சத்துக்கள் தான் குடல் இயக்கத்தைத் தூண்டி ஜீரணத்திற்கு உதவக் கூடியது. உடலின் மெட்டபாலிசத்திற்கு அடிப்படையாகத் தேவைப்படுவது நார்ச்சத்துக்கள் தான். மலச்சிக்கல் தீர்ப்பது முதல் உடல் எடை குறைப்பது, மூலம் உள்ளிட்ட பிரச்சினைகள் வராமல் தடுக்கவும் இந்த நாரச்சத்துக்கள் அவசியம்.

​வாய்வுத் தொல்லை

​வாய்வுத் தொல்லை

அளவோடு உடலுக்குத் தேவையான அளவு நார்ச்சத்துக்கள் எடுத்துக் கொள்ளும் போது குடல் ஆரோக்கியம் மேம்படும்.

ஆனால் அதே நார்ச்சத்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது அதனால் வாய்வுத் தொல்லையையும் வயிறு உப்பசத்தையும் ஏற்படுத்தும். நிறைய வயிறு அசௌகரியங்களை ஏற்படுத்தும்.

​வயிற்று வலி

​வயிற்று வலி

உடலுக்குத் தேவையான அளவு நார்ச்சத்துக்கள் எடுத்துக் கொள்வது வயிறு ஆரோக்கியத்துக்கு நல்லது.

ஆனால் நார்ச்சத்தின் அளவு அதிகரிக்கும் போது கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்றுப் பிடிப்புகளை ஏற்படுத்தும்.

​வயிற்றுப் போக்கு

​வயிற்றுப் போக்கு

நார்ச்சத்துக்கள் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது குடலில் உணவுகள் சரியாக ஜீரணமாகாமல் வயிற்றுப் போக்கு, டயேரியா பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

மலத்தை கெட்டிப்படுத்தாமல் நீர்ச்சத்து இழப்பையும் உண்டாக்குகிறது.

​மருந்துகள்

​மருந்துகள்

நீங்கள் ஏதேனும் உடல் நலப் பிரச்சினைகளுக்காக மருந்துகள் எடுத்துக் கொண்டாலோ அல்லது வலி நிவாரணிகள் எடுத்துக் கொண்டாலோ அந்த சமயத்தில் நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளால் சில தடைகள் உண்டாகும்.

மருந்துகள் எடுப்பவர்கள் அளவுக்கு அதிகமாக நார்ச்சத்து உணவுகளையும் எடுக்கும் போது நார்ச்சத்தால் மருந்தின் வீரியம் குறைந்து போகும். வெறும் ரசயனங்களாக மட்டும் குடலில் சேரும்.

​அசௌகரியமாக உணருதல்

​அசௌகரியமாக உணருதல்

நிறைய நார்ச்சத்து உணவுகளை எடுத்துக் கொண்ட பிறகு, அது வயிறு உப்பசத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி வயிறு மந்தமாக, கல் போன்று இறுக்கமாக மாறிவிடும்.

மிகவும் அசௌகரியமாக உணர்வீர்கள். இதனால் உங்களுடைய இயல்பான செயல்பாடுகள் கூட பாதிக்கப்படலாம்.

​ஊட்டச்சத்து பற்றாக்குறை

​ஊட்டச்சத்து பற்றாக்குறை

நார்ச்சத்து கொண்ட உணவுகள் உணவுகளில் உள்ள பிற ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவி செய்யும்.

இதுவே அளவுக்கு அதிகமாக நார்ச்சத்துக்களை எடுத்துக் கொள்ளும் போது அதுவே ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறைக்கும் முக்கியக் காரணமாக அமைந்து விடுகிறது.

குறிப்பாக கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் சிரமம் ஏற்படுகிறது.

​நீர்ச்சத்து குறைபாடு

​நீர்ச்சத்து குறைபாடு

அளவுககு அதிகமாக நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுக்கும் போது அதை ஜீரணிக்க நிறைய தண்ணீர் தேவைப்படுகிறது.

இந்த உணவுகளை ஜீரணிக்கவே நம் உடலில் உள்ள திரவங்கள் அதிகமாக செலவழிக்கப்படுவதால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு உண்டாகும். நீர்ச்சத்து குறைபாடு சருமம், தலைமுடி முதல் ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளையுமே பாதிக்கும்.

மணிமேகலை
எழுத்தாளர் பற்றி
மணிமேகலை
மணிமேகலை. இளநிலை ஆய்வாளர் பட்டப்படிப்பை (M.Phil) முடித்து கடந்த 9 ஆண்டுகளாக இணைய ஊடகவியல் துறையில் பணியாற்றி வருகிறேன். கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் உளவியல் சார்ந்த நூல்களை வாசிக்கும் ஆர்வம் கொண்ட நான் ஆரோக்கியம், ஃபிட்னஸ், ஃபேஷன், மற்றும் வாழ்வியல் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகிறேன். தற்போது times internet-இன் கீழ் இயங்கும் சமயம் தமிழ் இணையதளத்தில் senior digital content producer ஆகப் பணியாற்றுகிறேன்... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்