Please enable javascript.Breast Changes During Pregnancy,கர்ப்பிணிக்கு மார்பகம் பெரிதாகும்.. கருமையாக மாறும்.. வேறு என்ன மாற்றங்கள் உண்டாகும்..? - common breast changes that can happen during pregnancy - Samayam Tamil

கர்ப்பிணிக்கு மார்பகம் பெரிதாகும்.. கருமையாக மாறும்.. வேறு என்ன மாற்றங்கள் உண்டாகும்..?

Authored byதனலட்சுமி | Samayam Tamil 5 Jul 2024, 12:37 pm
Subscribe

கர்ப்பம் மகிழ்ச்சியான காலகட்டம் என்றாலும் அவை பல உடல் மாற்றங்களை கொண்டு வரும். அவற்றில் ஒன்று தோல் நீட்சி. தொப்பை விரிவடைவது போன்று மார்பகங்களும் மாற்றத்தை அடைகிறது. அப்படியான மாற்றங்கள் என்ன என்பதை இப்போது தெரிந்துகொள்வோம்.

common breast changes that can happen during pregnancy
கர்ப்பிணிக்கு மார்பகம் பெரிதாகும்.. கருமையாக மாறும்.. வேறு என்ன மாற்றங்கள் உண்டாகும்..?
கர்ப்ப காலத்தில் மார்பக மாற்றங்கள் முற்றிலும் இயல்பானவை. இது கர்ப்பத்தின் தொடக்கத்தில் கவனிக்கப்படலாம். கர்ப்பத்தின் முதல், இரண்டாம், மூன்றாம் ட்ரைமெஸ்டர் என ஒவ்வொரு கட்டத்திலும் மார்பக மாற்றங்கள் உண்டாகலாம். கர்ப்பத்துக்கு முன்னும் பின்னும் மார்பகங்களில் என்ன எதிர்பார்க்கலாம். என்ன மாதிரியான மாற்றங்கள் உண்டாகும் என்பதை தெரிந்துகொள்வோம்.

​மார்பகங்கள் விரிந்து இருக்கும்​

​மார்பகங்கள் விரிந்து இருக்கும்​

கர்ப்ப காலத்தில் மார்பகங்கள் பெரியதாக ஆகலாம். குழந்தை பிறக்கும் வரை மார்பகம் பெரியதாக இருக்கும் என்றாலும் தாய்ப்பால் கொடுக்கும் வரை மார்பகங்கள் அப்படியே இருக்கும். காரணம் வளர்ச்சி ஹார்மோன்கள் அதிகரிப்பு தான். கர்ப்பகாலத்தில் மார்பகங்கள் பெரியதாகும் என்னும் போது கர்ப்பத்தின் 8 வாரங்களில் மார்பகங்கள் பெரிதாவது தொடங்கும்.

​மார்பகங்கள் நிறைவான உணர்வு​

​மார்பகங்கள் நிறைவான உணர்வு​

கர்ப்பிணிக்கு வயிறு நிரம்பிய உணர்வு போன்று மார்பகம் நிரம்பிய உணர்வும் இருக்கும். மார்பகங்கள் வளர்வதால் உண்டாகும் உணர்வை விட மார்பகங்கள் கனமாக இருப்பது போன்ற உணர்வு இருக்கும். ஒன்பது மாதங்களில் இந்த உணர்வு அதிகமாக இருக்கும். தாய்ப்பால் கொடுக்கும் வரை இந்த மார்பகம் பெரியதாக இருக்கும். அதோடு நிறைவான உணர்வும் இருக்கும்.

​மார்பகங்களில் அரிப்பு அல்லது வறட்சி​

​மார்பகங்களில் அரிப்பு அல்லது வறட்சி​

மார்பகங்களில் அரிப்பு மற்றும் வறட்சி என்பது கர்ப்பகாலத்தில் பொதுவானது. மார்பகங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள தோல் வறண்டு இருக்கலாம். மார்பக திசுக்கள் வளரும் போது மார்பகங்களை உள்ளடக்கிய தோல் நீட்டப்படுவதால் இது உண்டாகிறது. கர்ப்பகாலத்தில் எந்த நேரத்திலும் இந்த நீட்சி உண்டாகலாம். வறண்ட சருமத்தை கொண்டிருக்கும் பெண் கருத்தரிக்கும் போது இந்த வறட்சியும் அரிப்பும் இன்னும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் மருத்துவரின் அறிவுரையுடன் க்ரீம் பயன்படுத்தினால் அரிப்பு, வறட்சி போகும்.

​மார்பகம் சுற்றி புடைப்புகள் இருக்கும்​

​மார்பகம் சுற்றி புடைப்புகள் இருக்கும்​

மார்பகம் சுற்றியுள்ள பகுதிகளில் புடைப்புகள் இருக்கும். கர்ப்பம் அதிகரிக்கும் போது மார்பகத்தின் முலைக்காம்புகளில் சிறிய புடைப்புகள் இருக்கும். இது குறித்து கவலை வேண்டாம். எல்லாருக்கும் பொதுவானது. இது Montgomery's tubercles என்று அழைக்கப்படுகிறது. காரணம் இவை எண்ணெய் உற்பத்தி செய்யும் சிறிய சுரப்பிகள். இது இயற்கையாகவே முலைக்காம்புகளை உயவூட்டி தாய்ப்பாலுக்கு தயார் படுத்துகின்றன.

மார்பகம் கருமையாக இருக்கும்

<strong>மார்பகம் கருமையாக இருக்கும்</strong>

கர்ப்ப காலத்தில் மார்பகம் கருமையாக இருப்பதை கவனிக்கலாம். ஆரம்பத்தில் ஹார்மோன்களின் அதிகரிப்பு நிறமியின் உற்பத்தியை அதிகரிக்கும். குறிப்பாக முலைகாம்பு சுற்றியுள்ள பகுதிகள் கருமையாக இருக்கும். இது தாய்ப்பால் கொடுக்கும் வரை நீடிக்கும். மார்பகங்களை சுற்றிலும் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் இருண்ட நரம்புகள் இருக்கலாம். பிறகு படிப்படியாக இந்த கருமை மறைய தொடங்கும்.

​மார்பக முலைக்காம்புகள் அதிகரிப்பது​

​மார்பக முலைக்காம்புகள் அதிகரிப்பது​

பெரிய மற்றும் அதிக உணர்திறன் முலைக்காம்புகள் மார்பக வளர்ச்சி மற்றும் மென்மையுடன் இருக்கும். கர்ப்பத்துக்கு முன்பே கூட இவை உண்டாகலாம். கர்ப்ப அறிகுறிகளில் மார்பகத்தின் மென்மையும் உண்டு. இதனால் முலைக்காம்புகள் அசெளகரியத்தை உண்டு செய்யும். இதை தடுக்க முடியாது. ஆனால் அசெளகரியம் குறைய சூடான அமுக்கங்கள், கர்ப்பகால உள்ளாடை போன்றவை அணிவது அசெளகரியம் குறைக்கும்.

​மார்பகம் மென்மையாக மாறுவது​

​மார்பகம் மென்மையாக மாறுவது​

ஆரம்ப கர்ப்பத்தில் மார்பக மாற்றங்களில் மென்மையை அனுபவிப்பது பொதுவானது. கர்ப்பத்தின் முன்பே தொடங்கும் அதிகரிக்கும் இது கர்ப்பம் உறுதி செய்த பிறகும் முதல் ட்ரைமெஸ்டர் வரை இருக்கும். இந்த நேரத்தில் மென்மை உணர்வை குறைக்கவும் மார்பகம் பெரிதாவதை பொருத்தும் சரியான ப்ராவை அணிய வேண்டும். நன்கு பொருத்தப்பட்ட ஆதரவான ப்ராக்கள் மார்பக மென்மை அசெளகரியம் போக்க செய்யும்.

தனலட்சுமி
எழுத்தாளர் பற்றி
தனலட்சுமி
நான் தனலட்சுமி சுந்தர். ஊடகத்துறையில் 24 வருடங்கள் சோர்வில்லாத பயணம். லைஃப்ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் எழுதி வருகிறேன். மருத்துவ நிபுணர்களின் பேட்டிகள், கட்டுரைகள் மக்களுக்கு எடுத்து செல்வதில் விருப்பம் அதிகம். ஆன்மிகம், அரசியல் செய்திகள், சினிமா செய்திகளிலும் ஆர்வமும் அனுபவமும் உண்டு. தற்போது Times Internet நிறுவனத்தின் சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்