ஆப்நகரம்

செவ்வாய்கிழமையில் சொல்ல வேண்டிய 108 செவ்வாய் போற்றி

ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் நல்ல இடத்தில் இருக்க வேண்டியது மிக முக்கியமானதாகும். அப்படி இருந்தால் நல்ல திருமண வாழ்க்கை, கடன் தொல்லையில்லாத வாழ்க்கை, பூமி யோகம், வாகன யோகம், புகழ் ஆகியவை அமையும். சிறந்த தலைவனாகும் யோகம், எவரும் வெல்ல முடியாத வலிமையை பெற செவ்வாய் பகவானின் அருள் மிக முக்கியம். இவருக்குரிய செவ்வாய் கிழமையில் அவருக்குரிய காயத்ரி மந்திரம், 108 போற்றி துதிகளை முருகனின் படத்திற்கு முன் துதிப்பது மிகவும் சிறப்பானதாகும்.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 25 Jun 2024, 11:43 am
நவகிரகங்களில் ஒருவரான செவ்வாய் பகவானை, அங்காரகன் என்றும் அழைப்பதுண்டு. இவரே திருமணம், சொந்த வீடு, நிலம், தைரியம், வலிமை ஆகியவற்றிற்கு காரணமான கிரகமாக கருதப்படுகிறார். அதனால் இவரை இவரது அருள் கிடைத்தால் வாழ்வில் மங்கல காரியங்கள் தடையின்றி நடக்கும் என்பது நம்பிக்கை. வீட்டுற்கு அருகிலேயே இருக்கும் சிவன் கோயிலில் இருக்கும் நவக்கிரக சந்நிதிக்கு செவ்வாய் கிழமைகளில் காலை 9 லிருந்து 10 மணிக்குள்ளாக சென்று, செவ்வாய் பகவானுக்கு செந்நிற மலர்களை சாற்றி, சிறிது துவரம் பருப்புகளை சமர்ப்பித்து, நெய் தீபம் ஏற்றி செவ்வாய் பகவானின் காயத்ரி மந்திரத்தை 108 முறை 1008 வரை துதிக்க வேண்டும். இந்த பரிகாரத்தை 9 முதல் 27 வாரங்கள் வரை செய்தால் மட்டுமே முழுமையான பலனை பெற முடியும்.இந்த இரண்டு பரிகாரங்களையும் செய்ய இயலாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் வீட்டில் இருக்கும், பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு தீபமேற்றி, தூபங்கள் காட்டி, முருக மந்திரங்களை 108 எண்ணிக்கை வரை துதிப்பதால் செவ்வாய் பகவானின் அருள் கிட்டும்.
Samayam Tamil sevvai bhagavan

செவ்வாய் பகவான் 108 போற்றி :

1. ஓம் அங்காரகனே போற்றி!
2. ஓம் அன்ன வாகனனே போற்றி!
3. ஓம் அலங்காரனே போற்றி!
4. ஓம் அருளும் நாதனே போற்றி!
5. ஓம் அபய கரத்தானே போற்றி!
6. ஓம் அவிட்ட நாதனே போற்றி!
7. ஓம் அல்லல் நாதனே போற்றி!
8. ஓம் அண்டினார் காவலனே போற்றி!
9. ஓம் ஆண் கிரகமே போற்றி!
10. ஓம் ஆடு வாகனனே போற்றி!

11. ஓம் ஆற்றல் மிக்கவனே போற்றி!
12. ஓம் ஆணவம் அழிப்பவனே போற்றி!
13. ஓம் எண்பரித் தேரனே போற்றி!
14. ஓம் ஏழாண்டு ஆள்பவனே போற்றி!
15. ஓம் கதாயுதனே போற்றி!
16. ஓம் கருங்காலி சமித்தனே போற்றி!
17. ஓம் கதி அருள்பவளனே போற்றி!
18. ஓம் கமண்டலதாரியே போற்றி!
19. ஓம் குஜனே போற்றி!
20. ஓம் குருவின் நண்பனே போற்றி!

21. ஓம் குறை தீர்ப்பவனே போற்றி!
22. ஓம் குற்றம் பொறுப்பவனே போற்றி!
23. ஓம் சங்குக் கழுத்தனே போற்றி!
24. ஓம் சசி மித்ரனே போற்றி!
25. ஓம் சகோதர காரகனே போற்றி!
26. ஓம் சக்தி ஆயுதனே போற்றி!
27. ஓம் சாமகானப் பிரியனே போற்றி!
28. ஓம் சித்திரை அதிபதியே போற்றி!
29. ஓம் சிகப்புக் குடையனே போற்றி!
30. ஓம் சூரனே போற்றி!

இன்று சங்கடஹர சதுர்த்தி...இழந்தது மீண்டும் கிடைக்க இதை பண்ணுங்க

31. ஓம் சூலாயுதனே போற்றி!
32. ஓம் செம்மீனே போற்றி!
33. ஓம் செந்நீர் முத்தனே போற்றி!
34. ஓம் செங்கண்ணனே போற்றி!
35. ஓம் செவ்வாடையனே போற்றி!
36. ஓம் செண்பகப் பிரியனே போற்றி!
37. ஓம் செம்மேனியனே போற்றி!
38. ஓம் செஞ்சந்தனப் பிரியனே போற்றி!
39. ஓம் செம்பு உலோகனே போற்றி!
40. ஓம் செம்மாலை அணிபவனே போற்றி!

41. ஓம் செவ்வாய் நாதனே போற்றி!
42. ஓம் தனிச் சன்னதியுளானே போற்றி!
43. ஓம் தவத்தால் உயர்ந்தவனே போற்றி!
44. ஓம் தண்டாயுதனே போற்றி!
45. ஓம் தனமளிப்பவனே போற்றி!
46. ஓம் திருக்கோலனே போற்றி!
47. ஓம் திருச்சிறுகுடி அருள்பவனே போற்றி!
48. ஓம் தீரனே போற்றி!
49. ஓம் தீன ரட்சகனே போற்றி!
50. ஓம் துயர் துடைப்பவனே போற்றி!

51. ஓம் துஷ்டரை அழிப்பவனே போற்றி!
52. ஓம் துவரை விரும்பியே போற்றி!
53. ஓம் துவர்ப்பு சுவையனே போற்றி!
54. ஓம் தென் திசையானே போற்றி!
55. ஓம் தெற்கு நோக்கனே போற்றி!
56. ஓம் தெய்வத் தேரனே போற்றி!
57. ஓம் தைரியம் அளிப்பவனே போற்றி!
58. ஓம் நிலமகள் சேயே போற்றி!
59. ஓம் நிலம் ஆள்பவனே போற்றி!
60. ஓம் நாற்கரனே போற்றி!

61. ஓம் நெற்றிக்கண் தோன்றலே போற்றி!
62. ஓம் பராக்கிரமனே போற்றி!
63. ஓம் பகையழிப்பவனே போற்றி!
64. ஓம் பலம் அளிப்பவனே போற்றி!
65. ஓம் பவளப் பிரியனே போற்றி!
66. ஓம் பழநியில் அருள்பவனே போற்றி!
67. ஓம் பரத்வாஜர் சீடனே போற்றி!
68. ஓம் பரனருள் பெற்றவனே போற்றி!
69. ஓம் பார்க்கவனே போற்றி!
70. ஓம் பவுமனே போற்றி!

71. ஓம் பிருத்வி பாலனே போற்றி!
72. ஓம் பின்னும் செல்வோனே போற்றி!
73. ஓம் பூமி அதிதேவதையனே போற்றி!
74. ஓம் புரூரவசுக்கு அருளியனே போற்றி!
75. ஓம் புள்ளிருக்கு வேளூரானே போற்றி!
76. ஓம் பொன் தேரனே போற்றி!
77. ஓம் மங்களனே போற்றி!
78. ஓம் மங்கலம் அளிப்பவனே போற்றி!
79. ஓம் மருந்தாவோனே போற்றி!
80. ஓம் மகரத்தில் உச்சனே போற்றி!

81. ஓம் மாவீரனே போற்றி!
82. ஓம் மிருகசீரிட நாதனே போற்றி!
83. ஓம் முக்கோண மண்டலனே போற்றி!
84. ஓம் முருகனருள் பெற்றவனே போற்றி!
85. ஓம் முடி தரித்தவனே போற்றி!
86. ஓம் மூன்றாமவனே போற்றி!
87. ஓம் மென்னகையனே போற்றி!
88. ஓம் மேன்மையளிப்பவனே போற்றி!
89. ஓம் மேதையே போற்றி!
90. ஓம் மேலோனவனே போற்றி!

91. ஓம் மேஷக் கோடியோனே போற்றி!
92. ஓம் மேஷராசி அதிபதியே போற்றி!
93. ஓம் ரவி மித்ரனே போற்றி!
94. ஓம் ரோக நாசகனே போற்றி!
95. ஓம் வரத ஹஸ்தனே போற்றி!
96. ஓம் வரம் அருள்பவனே போற்றி!
97. ஓம் வியர்வை தோன்றலே போற்றி!
98. ஓம் விருச்சிக ராசி அதிபதியே போற்றி!
99. ஓம் வீரனாக்குபவனே போற்றி!
100. ஓம் வீரபத்திரனம்சமே போற்றி!

101. ஓம் வெற்றி அளிப்பவனே போற்றி!
102. ஓம் வைத்தியவனே போற்றி!
103. ஓம் வைத்தீஸ்வரனாலயத் தருள்பவனே போற்றி!
104. ஓம் க்ஷத்திரியனே போற்றி!
105. ஓம் க்ஷமிப்பவனே போற்றி!
106. ஓம் க்ஷத்ரபாலன் ப்ரத்யதி தேவதையனே போற்றி!
107. ஓம் ஹ்ரீம் பீஜ மந்திரனே போற்றி!
108. ஓம் செவ்வாய்த் தேவனே போற்றி!
எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்