கமல்ஹாசன் விக்ரம் படத்திற்கு பிறகு ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு ஒருவழியாக தற்போது இப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. முதலில் ஜூன் மாதம் வெளியாகும் என சொல்லப்பட்ட இந்தியன் 2 தற்போது ஜூலை 12 ஆம் தேதி வெளியாக இருக்கின்றது.
1996 ஆம் ஆண்டு ஷங்கர் மற்றும் கமல் கூட்டணியில் வெளியான இந்தியன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதைத்தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதாக வந்த அறிவிப்பு ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியது. ஆனால் 2020 ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன் பிறகு கிடப்பில் போடப்பட்ட இப்படம் மீண்டும் துவங்காது,கண்டிப்பாக இந்தியன் 2 திரைப்படம் கைவிடப்பட்டது என்றெல்லாம் பேசி வந்தனர்.
ஆனால் கமல் தன் முயற்சியினால் இப்படத்தை மீண்டும் துவங்கினார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து ஒருவழியாக ரிலீசுக்கு தயாராகியுள்ளது.இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு இப்படத்தின் அறிவிப்பு வந்ததும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதே எதிர்பார்ப்பு தற்போது இருக்கின்றதா ? என்றால் அது சந்தேகம் தான்.
படம் தாமதமாகி வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்திருக்கலாம் என சிலர் கூறி வருகின்றனர். இதையடுத்து இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் எண்ணத்தில் இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டது. என்னதான் இந்த ட்ரைலர் விமர்சனத்திற்கு ஆளானாலும் படத்தின் மீதான ஹைப் சற்று அதிகரித்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.
இந்தியன் 2 ட்ரைலரில் கமல் பல கெட்டப்களில் வருகின்றார். தசாவதாரம் படத்திற்கு பிறகு கமல் அதிக கெட்டப்களில் நடித்திருக்கும் படம் இதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் ஒரு தகவல் தற்போது கிடைத்துள்ளது. இந்தியன் தாத்தா பல ஆண்டுகள் கழித்து மீண்டும் கம்பேக் கொடுக்கின்றார். தற்போது நாட்டில் நடக்கும் ஊழலை தடுக்கவே இந்தியன் தாத்தா மீண்டும் கம்பேக் கொடுப்பது தான் படத்தின் ஒருவரி கதை என தகவல்கள் வருகின்றன.
குறிப்பாக இப்படத்தின் பிளாஷ்பேக் போர்ஷனில் இந்தியன் தாத்தாவின் தந்தையாக கமல் ஒரு ரோலில் நடிக்கிறாராம். சேனாதிபதியின் தந்தையை பற்றி தான் இந்தியன் 2 படத்தின் பிளாஷ்பேக் போர்ஷன்ஸ் இருக்குமாம். எனவே இந்தியன் தாத்தா, சேனாதிபதியின் தந்தை என கமல் இரண்டு ரோல்களில் மட்டுமல்லாமல் மூன்றாவதாக ஒரு ரோலிலும் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளாராம்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அதுதான் படத்தின் ட்விஸ்ட்டாக இருக்கும் என பேசப்பட்டு வருகின்றது.எனவே பிரம்மாண்டத்திற்கும் ஸ்வாரஸ்யத்திற்கும் பஞ்சமில்லாத ஒரு படைப்பாக இந்தியன் 2 இருக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.