Please enable javascript.Product Development Centre,திருவனந்தபுரம் BYJU'S செயல்பாட்டு மையம் தொடர்ந்து செயல்படும்..! - byjus says reverses decision to 140 layoffs at kerala and close product development centre in thiruvananthapuram - Samayam Tamil

திருவனந்தபுரம் BYJU'S செயல்பாட்டு மையம் தொடர்ந்து செயல்படும்..!

Written byDevaki | Samayam Tamil 3 Nov 2022, 12:32 pm
Subscribe

கேரளாவில் 140 ஊழியர்களின் பணிநீக்கம் ரத்து செய்யப்படுவதாகவும், திருவனந்தபுரத்தில் உள்ள செயல்பாட்டு மையம் மூடப்படாது என்றும் BYJU'S தெரிவித்துள்ளது.

ஹைலைட்ஸ்:

  • 140 ஒல்லியார்களின் பணிநீக்கத்தை ரத்து செய்த பைஜூஸ்.
  • திருவனந்தபுரம் BYJU'S செயல்பாட்டு மையம் மூடப்பாடாது.
  • பணிநீக்கிய ஊழியர்கள் மீண்டும் பணியமர்த்தப்படுவார்கள்.
byju’s
byjus careers work from home
திருவனந்தபுரத்தில் உள்ள தனது தயாரிப்பு மேம்பாட்டு மையத்தில் 140 ஊழியர்களை பணிநீக்கும் முடிவை திரும்பப்பெறுவதாக எட்டெக் யூனிகார்ன் பைஜூஸ் (Edtech unicorn Byju's) தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், மாநில தலைநகரில் உள்ள தனது டெக்னோபார்க் அலுவலகத்தை மூடுவதற்கு பைஜூஸ் முடிவு செய்துள்ளதாகவும், அங்குள்ள அனைத்து ஊழியர்களையும் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தியதாகவும் எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, கேரள பொதுக் கல்வி மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் வி சிவன்குட்டி, இந்த விவகாரம் குறித்து அரசு விசாரிக்கும் எனத் தெரிவித்தார். பணியாளர் நல அமைப்பான பிரதித்வானி சார்பில் பைஜூவின் ஊழியர்கள் குழு சிவன்குட்டியைச் சந்தித்தது.

இதையடுத்து, புதன்கிழமை பிரதித்வானி இது குறித்து முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தொழிலாளர் கமிஷ்னர் டாக்டர் வாசுகி மற்றும் பிரதித்வானி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற கலந்தாய்வுக்கு பிறகு, டெக்னோபார்க்கில் உள்ள திருவனந்தபுரம் அலுவலகத்தை மூடும் முடிவை பைஜூஸ் மாற்றியுள்ளது. அத்துடன் கடந்த மாதம் ராஜினாமா செய்யுமாறு கூறப்பட்ட ஊழியர்களைத் திரும்பப் பெறுவதற்கு பைஜூஸ் ஒப்புக்கொண்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளது.

பெங்களூரு அலுவலக ஊழியர்களை ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்தும் Byjus

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் பைஜூவின் நிறுவனர் பைஜு ரவீந்திரனுக்கும் இடையே நடந்த விரிவான விவாதத்தை தொடர்ந்து, “எங்கள் டிவிஎம் தயாரிப்பு மேம்பாட்டு மையத்தின் செயல்பாடுகளைத் தொடர முடிவு செய்துள்ளோம்” என பைஜூவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதாவது, 140 ஊழியர்களின் பணிநீக்க முடிவை திரும்ப பெறுவதாகவும் அவர்கள் நிறுவனத்தில் தொடர்ந்து பணிபுரிவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

கடந்தவாரம், திருவனந்தபுர கிளையை மூடுவதால், அங்குள்ள ஒட்டுமொத்த அணியையும் பெங்களூருக்கு மாற்றுவதற்கு முன்வந்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, ஊழியர்கள் ஒவ்வொருவருக்கு ரவீந்திரன் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில், நிறுவனம் முழுவதும் 2,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான முடிவு பெரிய நிறுவனத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், வெளிப்புற மேக்ரோ பொருளாதார நிலைமைகளால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு கவனம் செலுத்தவும் எடுக்கப்பட்டது.

பொருளாதார மந்தநிலையின் எதிரொலி, 9,000+ ஊழியர்களை பணிநீக்கும் பிரபல நிறுவனங்கள்..!

இந்த செயல்முறை நாங்கள் நினைத்தது போல் சுமூகமாக இல்லாவிட்டால் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். இந்த செயல்முறையை சீராகவும் திறமையாகவும் முடிக்க நாங்கள் விரும்பினாலும், நாங்கள் அதை அவசரப்படுத்த விரும்பவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட அனைத்து குழு உறுப்பினர்களுக்கும் தனித்தனியாக கண்ணியமாகவும், பச்சாதாபத்துடனும் மற்றும் பொறுமையுடனும் தெரிவிக்கிறோம். நிறுவனத்தின் இந்த பணிநீக்க செயல்முறை நமது மொத்த பலத்தில் ஐந்து சதவீதத்திற்கு மேல் இல்லை என்பதையம் நாங்கள் இங்கே கூறுகிறோம்”, என்று ரவீந்திரன் தனது மின்னஞ்சலில் தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
Devaki
தேவகி ஜெகநாதன் "இதழியல் மற்றும் ஊடகவியல்" - சமயம் தமிழில் Digital Content Producer. ஊடகத்துறையில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்