Please enable javascript.Maharashtra car falls into 300 feet into vally: ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்.. ரிவர்ஸ் எடுத்தப்போது 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து இளம் பெண் மரணம்!

ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்.. ரிவர்ஸ் எடுத்தப்போது 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து இளம் பெண் மரணம்!

Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil 18 Jun 2024, 6:26 pm
Subscribe

மகாராஷ்டிராவில் இளம் ஒருவர் ரிவர்ஸ் எடுத்தப்போது கார் 300 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Maharashtra Car Accident

மகாராஷ்டிரா மாநிலம் சாம்பாஜி நகரை சேர்ந்தவர் 23 வயதான ஸ்வேதா தீபக் சர்வேஸ். இவர் நேற்று தனது நண்பரான சுராஜ் சஞ்சவ் முலே என்பவருடன் அவுரங்கபாத்திலிருந்து சுலிபஞ்சன் ஹில்ஸ் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகு பிற்பகல் 2 மணி அளவில் ஸ்வேதா காரில் ஏறி மெதுவாக அதை ரிவர்ஸில் எடுத்துள்ளார்.

அப்போது ஆக்சிலேட்டரை அழுத்தியதால் கார் வேகமாக சென்று பாறையின் உச்சியில் இருந்து சுமார் 300 அடி ஆழம் உள்ள பள்ளத்தில் உருண்டு விழுந்தது. பாறையின் உச்சியில் சுமார் 50 மீட்டர் தொலைவில் கார் இருந்தபோதும், அவர் வேகமாக காரை செலுத்தியுள்ளார். இதனை கண்ட சுராஜ் காரின் வேகத்தை குறைக்குமாறு கூறியுள்ளார்.

ரூ. 500 கோடி மதிப்பில் மாளிகை.. பாத் டப் மட்டுமே ரூ. 26 லட்சமாம்.. சிக்கும் ஜெகன்மோகன் ரெட்டி?

ஆனால் அதற்குள் ஸ்வதா ஆக்சிலேட்டரை அழுத்தியதாக தெரிகிறது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் பாறையில் இருந்து சரிந்து 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து நொறுங்கியது. இதில் படுகாயம் அடைந்த ஸ்வேதா தீபக் சர்வேஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த காட்சிகள் அனைத்தும் அவரது நண்பரான சுராஜ் சஞ்சவு முலே பதிவு செய்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

தேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு மாறணும்.. எலன் மஸ்க்கை ஆதரிக்கும் ஜெகன் மோகன் ரெட்டி!

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உருக்குலைந்து போன காரையும் மீட்டனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஸ்வேதா தீபக் சர்வேஸ் மற்றும் சுராஜ் சஞ்சவ் ஆகியோர் சுலிபஞ்சனில் உள்ள தாத்ரேயர் கோவிலுக்கு சென்றதும் பின்னர் பின்னர் பாறையின் உச்சியில் ரிலீஸ் வீடியோ எடுப்பதற்காக ஸ்வேதா காரை ரிவர்ஸில் எடுத்ததும் தெரியவந்துள்ளது.

கேரளா வின் வின் லாட்டரியில் ரூ. 75 லட்சத்தை தட்டிய மூவாட்டுப்புழா.. இன்று ஸ்த்ரீ சக்தி ஜாக்பாட் அள்ளப்போவது யார்?

இயற்கை எழில் கொஞ்சும் சுளிபன்ஹான் மலைப்பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வாடிக்கை. விபத்து நடந்த போதும் அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். இந்நிலையில் அங்கு பெண் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
பஹன்யா ராமமூர்த்தி
எழுத்தாளர் பற்றி
பஹன்யா ராமமூர்த்தி
செய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்