பான் இந்திய படைப்பாக வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வரும் படம் 'கல்கி 2898 ஏடி'. பிரபாஸ் நடிப்பில் ரிலீசாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. பல மொழிகளிலும் கல்கி சக்கை போடு போட்டு வருகிறது. இந்நிலையில் இரண்டே நாட்களில் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை ஆடி கொண்டிருப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'நடிகையர் திலகம்' படத்தினை இயக்கி இருந்தவர் நாக் அஸ்வின். தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படத்தின் வாயிலாக ரசிகர்கள் பலரையும் கவர்ந்த இவர் தற்போது இயக்கியுள்ள படம் 'கல்கி 2898 ஏடி'. பிரபாஸுடன் அமிதாப் பச்சன், திஷா பதானி, தீபிகா படுகோன், பசுபதி, அன்னா பென் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ளது இப்படம்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அறிவியல் - புராண கதை கலந்த திரைக்கதையில் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் ரிலீசாகி வரவேற்பை குவித்து வருகிறது 'கல்கி 2898 ஏடி' படம். குறிப்பாக படத்தில் அட்டகாசமான கிராஃபிக்ஸ் காட்சிகள் ரசிகர்கள் பலரையும் கவர்ந்து வருகிறது. அத்துடன் மேக்கிங்கிலும் மிரட்டல் சம்பவம் செய்துள்ளார் நாக் அஸ்வின்.
'இந்தியன் 2' படத்துக்காக கமல் வாங்கியுள்ள சம்பளம் இவ்வளவா.. கோலிவுட்டை அதிர விடும் ஆண்டவர்!
திரைக்கதை கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பிரம்மாண்ட மேக்கிங் காரணமாக இப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்க்க வேண்டும் என படத்தை பார்த்த பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் 'கல்கி 2898 ஏடி' படம் ரிலீசான முதல் நாளே ரூ.191.5 கோடி வரை வசூலித்து மாஸ் காட்டியது. உலகளவில் இத்தனை கோடியை வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதனால் இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் நாள் அதிகம் வசூலை குவித்த படம் என்ற பெருமையை கல்கி பெற்றது.
நண்பர் ஏகே ஸ்டைலில் போஸ் கொடுத்த தளபதி.. மாணவர்களுக்கான விருது விழாவில் அரங்கேறிய சம்பவம்!
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்த அறிவிப்பை வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இரண்டே நாட்களில் ரூ. 298.5 கோடி வரை வசூலித்திருக்கிறது 'கல்கி 2898 ஏடி'. ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் இரண்டே நாட்களில் இத்தனை கோடி வசூலித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
'கல்கி 2898 ஏடி' படத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சில நிமிட காட்சிகளில் மட்டுமே தோன்றி இருந்தாலும், குரலாலே தன்னுடைய கேரக்டரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் செய்ய வைத்து விட்டார் ஆண்டவர். இதனிடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கல்கி 2898 ஏடி' படத்தை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.